ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவுக்கு மேலாக கடந்த 26 ஆம் திகதி வானத்தில் திடீரென்று பச்சை நிற முகில்கள் பரவலாக தோன்றி இருந்தன. இதனால் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் உள்ள பாரிய இரசாயன தொழில்சாலை ஒன்று தீப்பற்றி எரிந்தது என்றும் இங்கிருந்து கிளம்பி சென்ற இராசாயன பொருட்கள்தான் பச்சை முகில்களாக சூழ்ந்து நிற்கின்றன என்றும் பொதுமக்கள் விசுவாசிக்கின்றனர்.
ஆனால் பூச்ச மரங்கள் பூத்து உள்ளன என்றும் இவற்றில் இருந்து வெளியேறிய மகரந்தங்கள்தான் பச்சை முகில்களாக சூழந்து நிற்கின்றன என்றும் இவை பாரதூரமான ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. மொஸ்கோவில் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
எனினும் அரசு உண்மையை மறைக்கின்றது என்றே பெருமளவிலானோர் சந்தேகிக்கின்றனர்.
No comments:
Post a Comment