சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கட்டு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜனும் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
இதேபோல் சுயேட்சையாக போட்டியிட 2பேர் விண்ணப்பப்படிவம் வாங்கிச்சென்றுள்ளனர். அவர்களும் மனுதாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வரும் 22ம் தேதி மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
மனுதாக்கல் செய்துவிட்டு பத்மராஜன், ‘‘இதுவரை 132 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். வேட்புமனுக்கான டெபாசிட் தொகையாக மட்டும் ரூ.12 லட்சம் செலவு செய்துள்ளேன்.
இதுதவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு தனியாக செலவு செய்வேன். நான் இவ்வாறு செய்வதை சிலர் கேலி செய்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை’.
இதற்கு முன் புதுக்கோட்டை எம்.பி தேர்தலில் போட்டியிட ஒருமுறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
1997ல் புதுக்கோட்டை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாரியய்யாவை எதிர்த்து போட்டியிட்டு 130 ஓட்டுகள் பெற்றேன். தற்போது 3வது முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகிறேன்’’ என்றார்.
No comments:
Post a Comment