Saturday, May 12, 2012

ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளிப்பேன் : நித்தி


மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.   பிற ஆதீனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.   இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டதை வாபஸ் வாங்க வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  நித்தியானந்தாவும் , மதுரை ஆதீனம் அருணகிரிநாதரும் இன்று மதுரையில் செய்தி யாளர்களிடம் சந்தித்தனர்.

அப்போது இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் , ‘’நாங்கள் இருவரும் விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து  தன்னிலை விளக்கம் அளிப்போம்’’ என்றனர்.

மேலும், ’’மதுரை உதவி கமிஷனர் துரைசாமி குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்.   இது குறித்து விரையில் உயர் அதிகாரிகளிடம் புகார் தர இருக்கிறோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment