Saturday, May 12, 2012

சின்னத்திரையில் கால்பதிக்கிறார் ரஜினி டைரக்டர்!


அண்ணாமலை, பாட்ஷா என்று ரஜினிக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இப்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா. நடிகர் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார். ரஜினியின் மெகாஹிட் படங்களான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களையும், கமல்ஹாசனின் ஆளவந்தான் போன்ற படங்களையும்  இயக்கினார். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் இளைஞன் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைத்ததும், சின்னத்திரையில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறார். விஜய் டி.வியில் ஆஹா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்ததொடரின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான். சில பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆஹா என்ற படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்போது அதே தலைப்பை வைத்து ஆஹா என்ற ‌தொடரை இயக்குகிறார். தொடரின் தலைப்பு மட்டும் தான் படத்தின் தலைப்பு. மற்றபடி ஆஹா தொடரின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருக்குமாம்.

புதுமுகங்கள் நடிக்கும் இத்தொடருக்கு, பா.விஜய்யின் பாடல் வரிகளுக்கு, ஜீ.வி.பிரகாஷ்குமாரின் அற்புதமான இசையில் டைட்டில் சாங் உருவாகி இருக்கிறது. விரைவில் இத்தொடர் விஜய் டி.வி.யில் ஒளிப்பரபாக இருக்கிறது.

No comments:

Post a Comment