தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என்று திமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது முடிவை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் அறிவிப்பால் போட்டியில்லை என்ற முடிவை எடுத்து தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் அதிமுக தேமுதிக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment