வடபழனியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (24). இவர், தனியார் பட கம்பெனியில் வேலை செய்துவந்தார். அப்போது கழுகு திரைப்பட இயக்குனர் சிவாவும் உடன் வேலைபார்த்து வந்தார். இருவரும் காதலித்தனர். சிவா, சிவரஞ்சனியை திருமணம் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து இருவரும் பல இடங்களில் காதல் பறவைகளாக வலம் வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த கழுகு என்ற திரைப்படத்தை சிவா இயக்கினார். படம் எதிர்பாராத விதமாக பெரும் வெற்றி அடைந்தது. இதையடுத்து பல தயாரிப்பாளர்கள் தங்களுக்கு படம் இயக்கும்படி சிவாவிடம் தொடர்பு கொண்டனர்.
இதனால் சிவா, சிவரஞ்சனியுடன் இருந்த தொடர்பை தவிர்த்தார். சிவரஞ்சனி சிவாவை தொடர்பு கொண்டபோது பல்வேறு காரணங்களைக் காட்டி நாம் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினார்.
இதனால் சிவரஞ்சனி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார். சிவாவின் வீடு மாங்காடு அடுத்த முகலிவாக்கத்தில் இருப்பதால் கமிஷனர் மாங்காடு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். போலீசார் சிவாவை விசாரணைக்கு அழைத்தனர்.
ஆனால் சிவாவின் உறவினர் ஜெயசீலன் விசாரணைக்கு நேற்று வருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் அவரும் விசாரணைக்கு வராததால் போலீசார் சிவாவை தேடுகின்றனர்.
No comments:
Post a Comment