Saturday, May 12, 2012

8,500 பேருக்கு முறைகேடாக ஓய்வூதியம்; தாசில்தார் கைது

சேலம் மாவட்டத்தில் கடந்த 2009-2010-ம் ஆண்டு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றிவர் ஜலால் மொய்தீன். இவர் தனது பணிகாலத்தில் சேலம் வட்டத்தில் 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் ஓய்வூதியம் பெற்று வந்தனர்.

இந்நிலையில், ஜலால் பணி காலத்தில் முறைகேடாக ஓய்வூதியம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் ஒரு தனி குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.



ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகள் அனைவரின் வீட்களுக்கும் சென்று அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் ஜலால் மொய்தீன் பணிக்காலத்தில், தகுதியிலாத 8 ஆயிரத்து 500 பேருக்கு முறைகேடாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது தெரியவந்தது.


இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணமான அதிகாரியான தற்போது வீட்டு வசதி வாரியத்தில் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றி வரும் ஜலால் மொய்தீனை சஸ்பெண்டு செய்து கலெக்டர் மகரபூஷணம் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment