Friday, May 11, 2012

ராசா உயிருக்கு ஆபத்து: சு. சாமி கவலை


ஸ்பெகட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராசாவை ஜாமினில் விடக்கூடாது என டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ.,தரப்பு வக்கீல் வாதிட்டார், இவருடைய சக குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கியிருக்கும் போது ராசாவுக்கும் ஜாமின் வழங்கலாம் என ராசா தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார் . வழக்கை விசாரித்த கோர்ட் வரும் 15 ம் தேதி ஜாமின் மனு மீதான உத்தரவை பிறப்பிக்கும் என நீதிபதி தெரிவித்தார்.


ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேல் 15 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராசாவின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ., எதிர்க்குமா அல்லது மவுனம் காக்குமா என்ற கேள்விக்கு மத்தியில்இந்த மனு முடிவு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் ராசா வெளியே சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை ஜாமினில் விடும் போது மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

தொலை தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் தொடர்பாக நாட்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்ற தணிக்கை குழு அறிவிக்கைக்கு பின்னர் இந்த விவகாரம் கடந்த 2011 ல் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து பார்லி.,யில் பெரும் அமளியால் மத்திய அரசு கடும் நெருக்கடியை சந்தித்தது.
இதனால் அமைச்சர் பதவியை இழந்த ராசா கடந்த 2011 பிப்., மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து தொலை தொடர்பு அதிகாரிகள் கனிமொழி எம்.பி.,, தனியார் டெலிகம் நிறுவன இயக்குனர்கள் என 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் அனைவரும் ஜாமின் பெற்று விட்டனர். ராசா மட்டும் சிறையில் இருந்து வருகிறார். அனைவருக்கும ஜாமின் கிடைத்து விட்டதால் முதல் குற்றவாளியான ராசாவுக்கு ஜாமின் கிடைக்குமா என்பது தெரிந்து விடும்.

பொது வாழ்வில் ஈடுபட்டு நம்பிக்கை துரோகம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் ராசா மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும்.

No comments:

Post a Comment