லேட்டஸ்டாக, “இலங்கை கொடியின் சிங்கத்தில் கையில் உள்ள வாள், சம்பந்தரை நோக்கி உயர்த்தப்பட்டு விட்டது” என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு பிரிவுகளில் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டுப் பிரிவுகளில், நெடியவன் பிரிவின் முக்கிய பிரமுகர் சேரமான், சம்பந்தனுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பந்தன் தமது அரசியல் வாழ்க்கையில், காலத்துக்கு தகுந்தால் போல சிங்கக் கொடியையும், புலிக் கொடியையும் மாறி மாறி ஏந்தியிருக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளில், விடுதலைப்புலிகள் நெடியவன் அணியின் சிறப்பு பிரசாரங்களை முன்னெடுக்கும் பிரமுகராகவும், அந்த அணியின் இரண்டாவது தலைவராகவும், சேரமான் உள்ளார். வெளிநாட்டு இலங்கை தமிழர்களில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் மத்தியில், நெடியவனுக்கு உள்ள ஆதரவின் ரேஞ்சுக்கு, சேரமானுக்கும் ஆதரவு சர்க்கிள் உண்டு.
சேரமான், இதுவரை தாம் யார் என்று வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தொடர்பான பல தகவல்களை அவர் அவர் வெளியிட்டு வருவதாலும், புலிகள் சார்பில் அவ்வப்போது எச்சரிக்கை விடுப்பதாலும், யுத்த முனையில் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் என்று நம்பப்படுகிறது.
தற்போது அவர், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார்.
“ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு கொடியை உயர்த்திப் பிடிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி விரும்பினால், சிங்கக் கொடியை வீசிவிட்டு, புலிக்கொடியை பிடிக்க வேண்டும். ஒட்டுமொத்த இலங்கைக்கும் உரிய கொடியாக புலிக் கொடியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள சேரமான், “இல்லாவிட்டால், சிங்கத்தின் கையில் உள்ள வாள், சம்பந்தன் மற்றும் அவரது சகாக்கள் மீது திருப்பப்படும் நாள் விரைவில் வரும்” என எச்சரித்துள்ளார்.
“பாயும் புலிக் கொடியைக் கீழே போட்டுவிட்டு, பேருவகையோடு வாளேந்திய சிங்கத்தை இன்று ஏந்தி நிற்கும் சம்பந்தருக்கும், அவரது பரிவட்டங்களுக்கும் இந்த உண்மை விரைவில் உறைக்கும்” எனவும், புலிகளின் வெளிநாட்டுத் தலைவர் சேரமான் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமது கொள்கைகளுக்கு எதிரானவர்களாக கருதப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களுக்கு, புலிகள் மரண தண்டனை வழங்கியுள்ளனர். அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம் உட்பட பல அரசியல் தலைவர்கள்புலிகளால் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கியுள்ள நிலையில் புலிகள் அமைப்பின் பிரமுகர் சேரமான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் திகிலில் உள்ளன.
No comments:
Post a Comment