Monday, April 30, 2012

கேப்டன் மகனுக்கு கஜால் அகர்வால், சமந்தா கதாநாயகிகளாம்…!


கேப்டன் விஜயகாந் தனது மகனான ஷன்முக பாண்டியனை நடிக்க வைக்க கதை தேடிக்கொண்டிருந்தார்.

இறுதியாக தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பிருந்தாவனத்தை தமிழில் ஷண்முகப்பாண்டியனை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விஜயகாந்த் தனது சொந்த பேனரில் தயாரிக்க உள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் நடனத்தை ஷண்முகப்பாண்டியனே கவனித்துக் கொள்கிறாராம்.

SMS இலவசம் - இந்தியா உட்பட உலகம் முழுவதற்கும்!


கூகிள் இந்த சேவையை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செளுத்தவேண்டியதில்லை. இந்தியா உட்பட உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையவும்! அங்குள்ள CHAT – பாக்ஸிலிருந்து உங்கள் நண்பரின் மொபைல் நம்பருக்கு SMS அனுப்பவும், அவ்வளவுதான்!

நுணுக்கங்கள்!
முதலில் 50 SMS உங்களுக்கு இலவசமாய் கொடுக்கப்படும்! ஒவ்வொரு SMS நீங்கள் அனுப்பும்போதும் அதன் அளவு குறையும்!
நீங்கள் செய்யும் எஸ்எம்எஸ்க்கு Reply பெறும்போது உங்களது கணக்கில் 5 SMS சேர்க்கப்படும். (உங்க மொபைலுக்கு நீங்களே அனுப்பிக்கூட REPLY பண்ணிக்கொள்ளலாம்! REPLY செய்வதற்கு உங்கள் MOBILE OPERATOR கட்டணம் விதிக்கலாம், கவனம்!)
ஒருவேளை இலவச SMS தீர்ந்துபோய்விட்டால்? உங்கள் கணக்கில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் இலவச SMS CREDIT சேர்க்கப்படும்!
அழைக்கும் எண்ணை ஸ்டோர் செய்துவைத்துக்கொள்ளலாம்! PHONE BOOK SERVICE
SUPPORTED OPERATORS: INDIA

Aircel
Loop Mobile
MTS
Reliance
Tata DoCoMo
Tata indicom
SRI LANKA
Dialog
Etisalat
Mobitel
MALAYSIA
DiGi
Maxis
இலவச எஸ்எம்எஸ் உபயோகிக்க: http://www.gmail.com
மேலதிக விபரங்களுக்கு http://support.google.com/chat//bin/answer.py?hl=en&answer=140366&rd=1


(இந்த சேவை WAY2SMS போன்ற தளங்களின் சேவை போன்றதே! ஒரே வேறுபாடு, கூகிள் கொடுக்கிறது. விளம்பரம் கிடையாது - தற்போதைக்கு:) )

அழகர்கோவிலில் சித்திரை திருவிழா: கள்ளழகர், தங்கப்பல்லக்கில் 4-ந்தேதி மதுரை புறப்படுகிறார்


பிரசித்தி பெற்ற அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழா 2-ந்தேதி மாலையில் தொடங்குகிறது. 4-ந்தேதி மாலையில் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டு வருகிறார். 6-ந்தேதி ஆற்றில் இறங்குகிறார்.

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது சித்திரை பெருந்திருவிழா. இதில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றதாகும். தென் திருப்பதி என்றும், திருமாலிஞ்சோலை என்றும் போற்றி அழைக்கப்படும் இக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா முன்னோட்ட நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி சர்வ அமாவாசை அன்று மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்தத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து அழகர் எழுந்தருளும் மண்டகப் படிதாரர்கள் அனைவரும் அலங்கார பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

அழகர்கோவிலில் இந்த திருவிழா மே மாதம் 2-ந்தேதி மாலையில் தொடங்குகிறது. தொடர்ந்து 3-ந்தேதியும் கோவிலிலே திருவிழா நடக்கிறது. இரண்டு நாட்களும் மேளதாளங்கள் முழங்கிட சுவாமி புறப்பாடு நடைபெறும்.

பின்னர் 4-ந்தேதி மாலையில் 6 மணி அளவில் அதிர்வேட்டுகள் முழங்க வர்ணக்குடைகள், தீவட்டி பரிவாரம் மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்துடன் கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுக உள்ள மண்டபங்களில் அழகர் காட்சி தருகிறார்.

5-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கடச்சனேந்தல், மூன்று மாவடியில் புதூர் பகுதியில் பக்தர்கள் எதிர் சேவை செய்து அழகரை வணங்கி அழைப்பாளர்கள். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜபதி கோவிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாளின் திருமாலையை அழகருக்கு சாற்றி பக்த கோடிகளுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து அழகரை தரிசனம் செய்வார்கள்.

7-ந்தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் அழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்றிரவு இராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறும்.

8-ந்தேதி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலம். 9-ந்தேதி இரவு 2.30 மணிக்கு பூப்பல்லக்கு விழா. 10-ந்தேதி காலை 10.30 மணிக்கு கள்ளழகர் மலைக்கு போய் கோவிலில் இருப்பிடும் சேருகிறார். 11-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி சீ.செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சிறைப் பறவை திவாகரன்: 5-ல் வெளியே; 6-ல் உள்ளே; 7-வது வருமா?


முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைத்திருப்பது அவரது தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 48 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த காரணத்தால், 10,000 ரூபா செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல நீதிமன்ற உத்தரவு கிடைத்திருக்கிறது அவருக்கு.
திவாகரன்மீது இன்றைய தேதியில் மொத்தம் 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 4 வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. இது 5-வது வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள ஜாமீன். திவாகரன் சுமார் 2 மாத காலமாக ஜெயிலில் உள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு திவாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தபோது, திவாகரன் சார்பில் கோர்ட்டில் ஆஜராகி வாதாடிய வக்கீல், “எனது கட்சிக்காரர்மீது உள்நோக்கத்துடன் மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்கள். இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து விட்டது. எனவே, திவாகரனுக்கு ஜாமீன் தர வேண்டும்” என்றார்.
போலீஸ் தரப்பு அதை எதிர்த்தது. கூடுதல் பப்ளிக் பிராசிக்யூட்டர், “இந்த வழக்கில் புலன் விசாரணை (!) இன்னும் முடியவில்லை” என்று மறுத்தார். அதே காரணத்துக்காக ஜாமீன் தரக்கூடாது என்றார்.
ஆனால், இதுபோன்ற சிறிய வழக்கு புலன் விசாரணைக்கு அதிக கால அவகாசம் எடுக்கப்படுவதை நீதிபதி சுட்டிக்காட்டினார். “48 நாட்களுக்குமேல் திவாகரன் சிறையில் உள்ளதால், புலன்விசாரணைக்கு போதிய கால அவகாசம் இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளிக்கிறேன். 10,000 ரூபாவுக்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு தனிநபர் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில், திருவாரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று உத்தரவிட்டார்.
6-வது வழக்கிலும் இதே நிலைமைதான் உள்ளது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில் 7-வது வழக்கு வருமா, அல்லது திவாகரன் வெளியே வருவாரா என்றுதான் தெரியவில்லை.

அழகிரி அதிரடி “மதுரையில் இசக்கி இன்னமும் நம்ம கட்சிக்காரர்தான்!”

சென்னையில் இருந்து ஸ்டாலினும், தி.மு.க. தலைமையும் என்னதான் உத்தரவு அனுப்பினாலும், மதுரையில் அவை செல்லுபடியாகாது என்பதை மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கை மூலம் காட்டியிருக்கிறார் மு.க.அழகிரி.

“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இசக்கிமுத்துவை அவர் ஏற்கனவே வகித்த கட்சிப் பதவியிலேயே தொடர்வதாக கருத வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடக்கும் தி.மு.க. நிகழ்ச்சிகளில் அவரை புறக்கணிக்க கூடாது” என்று லோக்கலில் வாய்மொழி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் அழகிரி. “சென்னையில் இருந்து வரும் உத்தரவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். எந்த உத்தரவு வந்தாலும் இங்கே (மதுரையில்) மாற்றம் ஏதும் கிடையாது” என்பதே அழகிரியின் வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் மதுரை தி.மு.க.-வில்.

சமீபத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மதுரை வந்தபோது அவரை வரவேற்க ஏன் வரவில்லை என்று காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இசக்கிமுத்துவும் ஒருவர். மற்றையவர்களுக்கு நோட்டீஸ் மட்டுமே போனது. ஆனால் இவருக்கோ, கட்சிப் பதவி மற்றும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்து ஆகிய அனைத்துமே கோவிந்தா ஆனது!

அழகிரி ஆதரவாளரான இவரை, மிகச் சுலபமாக கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, சென்னையில் இருந்து அறிவித்தல் அனுப்பியது ஸ்டாலின் தரப்பு. அது அழகிரிக்கு கொடுக்கப்பட்ட நோஸ்கட் என்றது ஸ்டாலின் தரப்பு.

சீனாவில் இருந்து மதுரை திரும்பிய அழகிரி, தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீஸ்களை ‘போடவேண்டிய இடத்தில்’ போட வைப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால், சந்தடி சாக்கில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இசக்கியை உடனடியாக மறுபடியும் கட்சிக்குள் கொண்டுவருவது அவருக்கும் சுலபமான காரியமல்ல.

“ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத உங்களது ஆதரவாளர் இசக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரே?” என அழகிரியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, “தி.மு.க.வில் நிர்வாகிகள் நீக்கம் என்பது சகஜமான ஒன்று” என்பதே அழகிரியின் பதிலாக இருந்தது. அந்தப் பதில், “அதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது” என்பதையே குறிக்கிறது என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

இசக்கியை ஒரு மாதம் வெயிட் பண்ணும்படியும், அதற்குள் மீண்டும் கட்சிக்குள் அதே போஸ்ட்டில் கொண்டுவந்து விடுவதாகவும் அழகிரி உறுதியளித்திருப்பதாக மதுரை உடன்பிறப்புகள் கூறுகின்றனர். அந்த இடைப்பட்ட காலத்திலும் அவர், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக மதுரையில் கருதப்பட மாட்டார்.

இந்த விவகாரத்தில் ஜெயித்தது அழகிரியும் இல்லை, ஸ்டாலினும் இல்லை… இசக்கிதான்!

கருணாநிதி, ஏ.கே.அன்டனியை சி.ஐ.டி. காலனிக்கு வரவைத்தது ஏன்?


தி.மு.க.-வுக்கும், அக் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கும், மீண்டும் ஒருமுறை டில்லியில் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. கனிமொழியை விடுவிப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி, டில்லியில் காங்கிரஸ் தலைவர்களின் வீட்டுப் படியேறியி சில மாதங்களின் பின், இப்போது காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவரின் வீட்டுப் படியேற வேண்டிய நேரம் இது.

காரணம், காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெயிப்பதற்கு, தி.மு.க.-வின் தயவு தேவை.

காங்கிரஸ் கட்சியிடம் மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள எம்.பி.க்கள் மற்றும், எம.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஜெயிக்க வைக்க போதுமானதான இல்லை. வெளிக் கட்சிகள் கை கொடுத்தால்தான், காங்கிரஸின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெயிக்க முடியும்.

தி.மு.க.-விடம், மத்தியில் 18 லோக்சபா எம்.பி.க்கள், 7 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும், மாநிலத்தில் 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அடுத்து ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆலோசிக்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அன்டனி சென்னை வந்தார். சென்னை சி.ஐ.டி.காலனி இல்லத்தில் அவரைச் சந்தித்தார் கருணாநிதி. அந்தச் சந்திப்பின்போது, கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி உடனிருந்தார்.

எமது தொடர்பாளரான தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசினோம். தி.மு.க.-வின் டில்லி விவகாரங்களுக்கு இந்த சந்திப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றார் அவர். தி.மு.க.-வின் டில்லி விவகாரங்கள் என்பதற்கு, கனிமொழியை ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிப்பது என்பதுதான் சமீபகாலமாக அர்த்தம்.

அமைச்சர் ஏ.கே.அன்டனியை, கருணாநிதி சி.ஐ.டி. காலனி இல்லத்தில் வைத்து சந்தித்தது குறித்தும், அந்த தி.மு.க. வி.ஐ.பி. ஒரு விஷயம் தெரிவித்தார்.

“காங்கிரஸ் தலைமை உதவி கேட்டு சென்னைக்கு ஆளனுப்பி தமது வீட்டுக் கதவைத் தட்டும்போது, அந்தக் கதவுகள் கனிமொழி-ராசாத்தி அம்மாள் வீட்டுக் கதவுகளாக இருக்க வேண்டும் என்று தலைவர் (கருணாநிதி) திட்டமிட்டார்.

அதனால்தான், சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்திப்பை வைத்துக் கொண்டார். ஏ.கே.அன்டனி வரும் நேரத்தில் சி.ஐ.டி. காலனியில் போய் உட்கார்ந்துகொண்ட கருணாநிதி, அந்த வீட்டில் கனிமொழியும் தன்னுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்” என்றார் எம்முடன் பேசிய தி.மு.க. வி.ஐ.பி.

இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விபரங்களை இரு தரப்பும் வெளியிடவில்லை.

கனிமொழி இல்லத்தில் கருணாநிதியையுடன் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த அமைச்சர் ஏ.கே.அன்டனி, தமது பேச்சுக்களை “fruitful discussion” என்று வர்ணித்துவிட்டு சென்றார்.

யாருக்கு “fruitful discussion” என்று விளக்கமாக சொல்லவில்லை. கருணாநிதிக்கும், கனிமொழிக்கும் என்று தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

கடாபி அரசின் வி.ஐ.பி. அமைச்சர், இறந்த நிலையில் வியன்னா ஆற்றில்!


லிபியாவின் முன்னாள் எண்ணைவளத் துறை அமைச்சர், ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த வருடம் லிபியாவின் கடாபிக்கு எதிரான புரட்சியின்போது, அரசில் இருந்து விலகி போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்த முதலாவது அரசு வி.ஐ.பி. இவர்.

69 வயதான சுக்ரி கானெம்மின் உடல், தனுபே ஆற்றில் மிதந்த நிலையில் காணப்பட்டது. மத்திய ஐரோப்பாவின் பிரபல ஆறுகளில் ஒன்றான தனுபே ஆற்றங்கரை ஓரமாக அவர் நடந்து சென்றபோது, இறந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

லிபியாவில் கடாபி ஆட்சி முடிவுக்கு வந்தபின் அங்கிருந்து வெளியேறிய இவர், வியன்னா நகரில், தனுபே ஆற்றங்கரை ஓரமாக உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தார் என்று தெரிகிறது. வியன்னாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு அருகே உள்ளது இந்த வீடு. வீட்டில் இருந்து அதிகாலையில் வாங்கிங் சென்ற அவர், அதன்பின் உயிருடன் வீடு திரும்பவில்லை.

ஆற்றில் மிதந்த அவரது உடலில் எந்த அடையாளமும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளது ஆஸ்திரிய போலீஸ்.
“அவர் கொல்லப்பட்டார் என்பதற்கான எந்த அறிகுறியும் அவரது உடலில் வெளிப்படையாக காணப்படவில்லை. இருந்தும், அவர் ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றபோது, ஆற்றில் யாராலோ தள்ளி விடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார் போலீஸ் பேச்சாளர்.

லிபியாவில் புரட்சி ஏற்பட்டு, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாட்டில் இருந்து தப்பி டுனிசியா நாட்டுக்குள் புகுந்த சுக்ரி கானெம், அதன்பின் அங்கிருந்து ஐரோப்பாவுக்கு வந்திருந்தார். 2003-ம் ஆண்டில் இருந்து கடாபி அரசின் முக்கிய துறையான எண்ணைவளத் துறையின் அமைச்சராக இருந்தவர் இவர்.

இவர் பதவியில் இருந்தபோது, உலக அளவில் தலைப்புச் செய்திகளில் முதல் தடவை அடிபட்டது, “அமெரிக்க விமானம் பான்-ஆம் வானில் வெடித்துச் சிதறியதற்கு லிபியா எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை” என்று அறிவித்தபோது.

பான்-ஆம் விமான தட இலக்கம் 103, 1988-ல் ஸ்காட்லான்டுக்கு மேலாக பறந்தபோது வெடித்துச் சிதறியது. அதில் பயணம் செய்த அனைவரும் (270 பேர்) கொல்லப்பட்டனர்.

புலன் விசாரணைகளில் அந்த விபத்து, லிபிய உளவுத்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று பின்னர் தெரியவந்தது.

ஜெயலலிதா பற்றி அமெரிக்காவுக்கு பன்னீர்செல்வம் தெரிவித்த உண்மை!


அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு தனியாக சிந்தனை ஏதும் கிடையாது என்று தைரியமாக விளக்கம் கொடுத்திருக்கிறார், நிதியமைச்சரும், அ.தி.மு.க.-வில் #2 என்று கருதப்படும் நபருமான ஓ.பன்னீர்செல்வம். ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும், தாம் பூச்சியம் என்பதை சொல்வதற்கும் ஒரு ‘தில்’ வேண்டும்.

அது இவரிடம் இருப்பது, தமிழகம் செய்த அதிஷ்டம்.

பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துப் பேசும்போதே, அ.தி.மு.க.வில் தாம் உட்பட, சக அமைச்சர்களின் ability and capability பற்றி தெளிவாக போட்டு உடைத்திருக்கிறார் இந்த தைரியசாலி அமைச்சர்.

அமைச்சர் தனது பேச்சை ஆரம்பித்தபோதே அதிர வைக்கும் ஏவுகணை ஒன்றை வீசினார். “பூகோள பாடத்தில் வேண்டுமானால் இந்தியாவின் தலைநகர் டில்லி என்று இருக்கலாம். ஆனால், அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னைதான். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது, நம்ம அம்மாதான்” என்று அவர் கூறியதற்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நன்றிக் கடிதம் அனுப்பி வைக்க கூடும்.

“உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது, நம்ம அம்மாதான்” என்று சொல்லாமல், இந்தியாவுடன் அவர் நிறுத்திக் கொண்டதால், அமெரிக்க ஜனாதிபதியின் நன்றியை, அவர்களது தூதரகம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். நினைத்திருந்தால்,  அமெரிக்காவின் வல்லரசு கனவை ஒரு வாக்கியத்திலேயே நசுக்கியிருக்க முடியும்.

இந்த விஷயத்தில் அமைச்சரையும் குறைசொல்ல முடியாது. அமெரிக்கா இருப்பது ஆந்திராவுக்கு சற்று அப்பால் என்று நினைத்தே அவர் சொல்லியிருக்கவும் சான்ஸ் உண்டு. அமெரிக்கா வேறு ஒரு நாடு என்று யாராவது அவருக்கு சொல்லியிருந்தால், அம்மாவின் பவரை இந்தியாவுக்கு வெளியேயும் அவர் என்ஸ்டென்ட் பண்ணியிருக்க கூடும்.

“ஒருவரின் திறமையை எடைபோட வேண்டுமானால், முதலில் அவரைச் சுற்றியிருப்பவர்களின் திறமையை தெரிந்து கொள்ளுங்கள்” என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. ஒரு மாநிலத்துக்கே நிதியமைச்சராக இருப்பவருக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும் அல்லவா? முதல்வரைச் சுற்றியுள்ள சக அமைச்சர்கள் பற்றி தெளிவான கணிப்பீடு ஒன்றை பகிரங்கமாக இதோ அறிவிக்கிறார் அமைச்சர்:

“எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி”

இதைவிட அ.தி.மு.க. அமைச்சர்களைப் பற்றி நாலே வரியில் நறுக்கென்று வேறு யாராலும் கூறிவிட முடியாது.

நிதியமைச்சரின் இந்த தகமை பிரகடனத்தை, சட்டசபையில் இருந்த மற்றைய அமைச்சர்களும் மேஜையை தட்டி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சி. வேறு ஏதாவது நாட்டில் இது நடந்திருந்தால், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள்தான் கேலியாக மேஜையில் தட்டியிருப்பார்கள்!

எப்படியோ, நிதி அமைச்சர் கூறிய ‘பூச்சியம்’ ரேஞ்சில்தான் தாமும் உள்ளோம் என்று மற்றைய அமைச்சர்களும் கைதட்டி ஒப்புக் கொண்டார்கள் பாருங்கள்… அந்த வெள்ளை மனசு வேறு யாருக்கும் வராது. இவங்க ரொம்பவும் வெகுளிங்க சார்!

போயஸ் கார்டனில் அமைச்சர் ஓ.பி.எஸ்.ஸை ‘போட்டுக் கொடுக்க’


பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.-வினரிடையே உள்குத்துகள், இழுத்து வீழ்த்தல்கள் உள்ளதுபோல புதுக்கோட்டைத் தொகுதியில் இல்லாமல் இருப்பது, தமக்கு பெரும் ஆனந்தத்தை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார் அ.தி.மு.க. சீனியர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பொதுவாக அ.தி.மு.க.வில் லோக்கல் அமைச்சரே மாவட்டச் செயலாளராகவும் இருப்பார். அதில் சிக்கல் கிடையாது. சிக்கல் எப்போது வரும் என்றால், அதே மாவட்டதைச் சேர்ந்த மற்றொருவரும் அமைச்சராகும் போதுதான். ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் இருவரிடையேயும் மோதல் துவங்கும்.

அப்புறம் என்ன, உள்கட்சி திருவிழாதான்.

இந்தத் திருவிழாக்கள் புதுக்கோட்டையில் கிடையாது என்றிருக்கிறார் அமைச்சர் ஓ.பி.எஸ். அதை வேறு விதத்தில் சொல்லப் போனால், மற்றைய தொகுதிகளில் கட்சிக்குள் இழுபறிகள் இருப்பதாக ஒப்புக் கொள்கிறார் அவர். இருந்துவிட்டு போகட்டும். அதுகூட இல்லையென்றால் போர் அடிக்கும்.

சரி. இதையெல்லாம் எதற்காக வெளியே சொல்கிறார் அமைச்சர்?

“கட்சிக்குள் ஆளையாள் இழுத்து வீழ்த்தும் ஷோ இல்லை என்பதால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை விட பெரிய வெற்றியை புதுக்கோட்டையில் நாம் பெற வேண்டும். இங்கு குறைந்தது ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்! (ஓஹோ.. சங்கரன்கோவிலில் உள்கட்சி இழுபறிகள் உள்ளனவா?)

அ.தி.மு.க.- அமைச்சர்களின் அடுத்த மெகா ஷோ, அடுத்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளதால், புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம், புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இப்படியான கூட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால், அதை சுடச்சுட கார்டனில் ‘போட்டுக் கொடுக்க’ ஆட்கள் தயாராக இருப்பதால், பெரும்பாலான அமைச்சர்கள் கூட்டத்தில் ஆஜர்.

அங்கு வைத்து தமது தேர்தல் வியூக ஆலோசனையை துவங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம், “சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், நமக்கு 94,977 ஓட்டுகள் கிடைத்தன. வெற்றி வித்தியாசம், 68,757 ஓட்டுகள். புதுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தைவிட குறைவு. இதனால், ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், எமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

நியாயமான ஆசைதான். அதை வெளிப்படையாக, வெள்ளாந்தியாக பேசிவிட்டார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 32 அமைச்சர்களின் உழைப்புக்கு ஒரு லட்சம் லீடிங் கிடைத்தால், அம்மாவும் சந்தோஷப்படுவார்.

ஆனால், புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைச்சர் பேசிய இந்தப் பேச்சை, யாராவது அமைச்சர் தாம் நல்ல பெயர் வாங்க, லேசாக ட்டுவிஸ்ட் பண்ணி கார்டனில் போட்டுக் கொடுத்தால் என்னாகும்?

அப்படியான ஆர்வம் யாராவது அமைச்சருக்கு இருந்தால், இதோ 2 பாயின்ட்டுகள்:

1) அமைச்சர் ஓ.பி.எஸ். புள்ளிவிபரங்களை வைத்து புகுந்து விளையாடுவதைப் பார்க்கும்போது, இவர் அடிக்கடி விஜயகாந்த் திரைப்படங்களை பார்ப்பார் போலிருக்கிறதே. ஒருவேளை இவர் விஜயகாந்த ரசிகராக இருப்பாரோ?

2) அவரது புள்ளிவிபரத்தின்படி, ஒன்றரை லட்சம் ஓட்டுக்களில், ஒரு லட்சம் ஓட்டுக்களை அ.தி.மு.க. பெற வேண்டும் என்பதை கவனித்தீர்களா? அதன் அர்த்தம் என்ன? ஐம்பதாயிரம் ஓட்டுக்கள் எதிர்க்கட்சிகளுக்கு விழும் என்று நம்ம சீனியர் அமைச்சரே சொல்லுகிறார். இவரை எப்படிம்மா நம்புவது?

கலெக்டர் கடத்தல்: காட்டுக்குள் இருந்து தூதர்கள் கொண்டுவந்தது என்ன?


கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸை விடுவிக்கும் முயற்சியில், காட்டுக்குள் உள்ள நக்சலைட்டுகளின் மறைவிடத்துக்கு சென்ற தூதர்கள், சில தகவல்களுடன் திரும்பியுள்ளனர். கலெக்டர் அலெக்ஸ் பத்திரமாகவும் உடல் நலத்துடனும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காட்டுக்குள் உள்ள மாவோயிஸ்ட் அமைப்பிடம் இருந்து சில தகவல்களுடன் திரும்பியுள்ள தூதர்கள், மீடியாக்களிடம் அந்த தகவல்களை பகிர்ந்துகொள்ள மறுத்து விட்டனர். “நக்சல்களிடம் இருந்து தெரிந்துகொண்ட விஷயங்கள் பற்றி, அரசு தூதர்களிடம் மட்டுமே தெரிவிப்போம்” என்றனர்.

மாவோயிஸ்ட் தலைவர்களை சந்தித்து பேச, தூதர்கள் ஹர்கோபால் மற்றும் பி.டி.சர்மா முடிவு செய்தனர். அதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் சிந்தன்லார் நகருக்கு சென்றனர். அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதியான டாட்மெட்லாவுக்கு 2 பத்திரிகையாளர்களுடன் பைக்கில் புறப்பட்டனர்.

டாட்மெட்லா சென்றதும் இவர்களை சந்தித்த நக்சல்கள், தூதர்களை மட்டும் காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

அங்கு நக்சல் தலைவர்களை சந்தித்து கலெக்டரை விடுவிப்பது தொடர்பாக பேசினர். இரவு நேரமாகி விட்டதால், காட்டிலேயே தங்கிய தூதர்கள், காலையில் சிந்தன்லார் திரும்பினர். இந்த இடம் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிந்தன்லாரில் செய்தியாளர்களிடம் பேசிய தூதர்கள், காட்டுக்குள் தாம் கலெக்டர் அலெக்ஸை நேரடியாகச் சந்திக்கவில்லை என்று தெரிவித்தனர். “கலெக்டர் உடல் நலத்துடன் உள்ளார் என்று மாவோயிஸ்ட் தலைவர்கள் எம்மிடம் கூறினார்கள். அவர்களது கூற்றை நாம் நம்புகிறோம்”

டாட்மெட்லா வனப்பகுதியில் கலெக்டர் வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி, நான்கு அடுக்கு பாதுகாப்பை நக்சலைட்டுகள் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. கலெக்டரை மீட்க பாதுகாப்பு அமைச்சு கமாண்டோ பாணியில் அதிரடி நடவடிக்கை ஏதாவது எடுக்கலாம் என்ற சந்தேகத்திலேயே, அவரைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

ஆதிவாசிகளை சிறை பிடிப்போருக்கு விருது வழங்க கலெக்டர் அலெக்ஸ் பரிந்துரை செய்ததால் அவர்மீது நக்சல்கள் கோபம் அடைந்திருந்தார்கள் எனவும் தெரியவருகிறது. ஆனால், பணயக்  கைதியாக உள்ள அவருக்கு, போதிய உணவு மற்றும் மருந்து வசதிகளை நக்சல்கள் செய்து கொடுத்துள்ளனர்.

காட்டில் இருந்து வெளியே வந்துள்ள தூதர்கள் இருவரும், அரசு தூதர்களான முன்னாள் தலைமைச் செயலாளர்கள் நிர்மலா புச் மற்றும் எஸ்.கே.மிஸ்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ராய்ப்பூர் சென்றிருக்கின்றனர்.

இந்த இரு தரப்பினருக்கும் இடையிலான இரு ரவுன்ட் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இது  மூன்றாவது ரவுன்ட் பேச்சுவார்த்தை!

ராணுவ மர்மம்: 4 வெளிநாட்டவர்கள் ஆர்மோர்ட் காரில் செய்தது என்ன?


சூடானின் எல்லைப் பகுதியில் நான்கு பேர் ‘அடையாளம் காணப்படாத ராணுவ நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள். ஒருவர் சூடானில் இருந்து சமீபத்தில் பிரிந்து தனிநாடாகிய தென் சூடான்காரர்.


நார்வே பிரஜை ஜான் சோர்போ

வெளிநாட்டுக்காரர்களில் ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். மற்றையவர் தென் ஆபிரிக்கா நாட்டவர். மூன்றாவது ஆள் நார்வேக்காரர்.

இவர்கள் அனைவரும் ஹெக்லிக் நகரத்துக்கு அருகே, ராணுவ கவச வாகனம் (armoured vehicle) ஒன்றில், ராணுவ உபகரணங்களுடன் நடமாடியதாக கூறியே கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆர்மோர்ட் காரை வைத்துக் கொண்டு இவர்கள் செய்ய முயன்றது என்ன?” இந்தக் கேள்விக்கான பதிலை, சூடான் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஹெக்லிக் நகரம், சூடானின் எண்ணை வளம் கிடைக்கும் நகரங்களில் ஒன்று. சூடானில் இருந்து தென்சூடான் பிரிந்த பின்னர், சூடானின் எண்ணை வளம் மிக்க பகுதிகள் தமக்கு உரியவை என்று தென் சூடான் கூறிவருகிறது. ஓரிரு இடங்களை கைப்பற்றவும் செய்தது. ஆனால், கைப்பற்றிய பகுதிகளை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், கைவிட்டுப் பின்வாங்க நேர்ந்தது.

அதனால்தான், தமது நாட்டின் எண்ணைவளம் மிக்க பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது சூடானிய ராணுவம். அந்த வகையில் ராணுவ கண்காணிப்பு அதிகமாக இருந்த ஹெக்லிக் நகரத்துக்கு அருகே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த என்.ஜி.ஓ. ஊழியர்கள் என்று கூறுகிறது அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனம்.

சூடான் ராணுவத்தின் பேச்சாளர் கர்னல் சவர்மி காலித் சாத், “ராணுவ கவச வாகனம் ஒன்றில் நகருக்குள் சுற்றித்திரிந்த இந்த நால்வரும் வெறும் என்.ஜி.ஓ. ஊழியர்கள் மட்டுமல்ல. அவர்கள் நால்வருக்குமே பலமான ராணுவப் பின்னணி உள்ளது” என்று அரசுத் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

இதில் தொடர்புடைய என்.ஜி.ஓ. நிறுவனம் Norwegian People’s Aid humanitarian organisation, தமது நிறுவனத்தில் பணிபுரியும் நார்வே பிரஜை ஜான் சோர்போ, சூடானுக்குள் ராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. என்று அடித்துச் சொல்கிறது.

“அவர் செலுத்திச் சென்ற வாகனம், கண்ணிவெடி தேடும்போது பயன்படுத்தப்படும் கவச வாகனம்தான். அது ராணுவ தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனம் அல்ல” என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.

ஜான் சோர்போவின் ராணுவத் தொடர்பு பற்றி சூடான் ராணுவ பேச்சாளர் கூறிய விஷயத்தில், ஓரளவு உண்மை உள்ளது. எப்படியென்றால், என்.ஜி.ஓ. நிறுவனத்தில் பணியாற்ற வருவதற்குமுன் அவர் நார்வே நாட்டு ராணுவத்தில் பணியாற்றி உள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஷ் பிரஜை பற்றிய விபரங்களை தற்போதுதான் சேகரிக்க துவங்கியுள்ளதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்க, மற்றும் தென் சூடானைச் சேர்ந்த நபர்கள் யார் என்ற விபரம் இன்னமும் வெளியிடப்படவில்லை..

விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பேன்: யுவராஜ் சிங்


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று 2 மாதங்களுக்கு முன் நாடு திரும்பினார். தற்போது ஐ.பி.எல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் புனே வாரியர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான யுவராஜ் சிங் விளையாட முடியாத நிலையில் உள்ளார்.
அவருக்கு புனேவில் உள்ள சம்ரிதா ஜிவான் பவுண்டேஷன் சார்பில் நவி சங்வி மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் அவருக்கு ஒர் கார் பரிசளிக்கப்பட்டது. விழாவுக்கு வந்திருந்த அவரை பார்க்க ஏராளமானோர் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய போது:
நான் குணமடைய எனக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்தீர்கள். தொடந்து எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு தற்போது எனது உடலில் சக்தி இல்லை. நான் விரைவில் இந்தியாவுக்காக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் தனது அணியான புனே வாரியர்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் விளையாடிய போட்டியை காண வந்திருந்தார்.

லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்த ஈழத்தமிழ் மாணவர் தேர்வு


லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்துவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் இலங்கையைத் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவரும்.

லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக 8 ஆயிரம் துவாரங்கள் கொண்ட அலுமினிய தீபம் உருவாக்கப்பட்டுள்ளது.

8 ஆயிரம் துவாரங்கள் கொண்ட இத்தீபத்தை 8 ஆயிரம் பேர் 8 ஆயிரம் மைல்கள் எடுத்துச் செல்வர். இந்த ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்படும் பாதைகள், ஏந்திச் செல்வோர் பற்றிய விவரங்கள் அனைத்தும் வெளியாகி உள்ளன.

இப்படி ஏந்திச் செல்வோரில் நியூகாஸ்டல் பல்கலைக் கழகத்தில் உயிரி மருத்துவம் படித்து வரும் முருகேசப்பிள்ளை கோபிநாத் என்ற மாணவரும் ஒருவர்.

இவர் இலங்கை மல்லாவியைச் செர்ந்தவர். தாம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது என்கிறார் முருகேசப்பிள்ளை கோபிநாத்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கருணாநிதி பேட்டி


சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பதாக சிலர் கூறுகிறார்களே?

பதில்:- ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப்படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப்படை இந்தியா வந்தபோது அன்று முதல்- அமைச்சராக இருந்த நான் வரவேற்க செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.

கே:- இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதை நீங்கள் தடுக்க தவறியதாகவும், இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்களே?

ப:- விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.

கே:- போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழ தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்.

ப:- முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.

கே:- பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

ப:- போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.

கே:- மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?

ப:- உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது தி.மு.க.வால் என்பதை மறந்து விடக்கூடாது.

கே:- புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?

ப:- ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.

கே:- இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ப:- இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது.

கே:- ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று மத்திய மந்திரி அந்தோணி சொன்னாரா?

ப:- என்னிடம் சொன்னார். ஆனால் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

கே:- நீங்கள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ப:- நல்ல ஜனாதிபதி வர வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.


நித்தியானந்தாவை மதுரையை விட்டு வெளியேற்றுக... மதுரை கலெக்டரிடம் மனு


மதுரை ஆதீன மடத்திலிருந்து உடனடியாக நித்தியானந்தாவை வெளியேற்ற வேண்டும். அவரை மதுரையை விட்டு வெளியேற்ற வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பூசைதுரை என்பவர் மதுரை கலெக்டர் சகாயத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில், மதுரை ஆதினமாக நித்தியானந்தாவை பதவியேற்க செய்ததை உடனே ரத்து செய்து, அவரை மதுரையை விட்டு வெளியேற்ற வேண்டும். அவர் மீது உள்ள கிரிமினல் நடவடிக்கைகள் இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

நித்தியானந்தா ஆதினமாகப் போவதை உடனே தடுத்து நிறுத்தி, ஆதின மடத்தை மீட்டு தமிழக அரசு வசம் ஒப்படைக்க வேண்டும். குறுக்கு வழியில் பதவியேற்ற ஆதினப் பதவியை ரத்து செய்ய வேண்டும்.

குற்ற நடவடிக்கையில் இருக்கும் ஒருவரை எப்படி ஆதினமாக, மதுரை ஆதினம் ஏற்றுக்கொண்டார் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளா

எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!


வெடி' படத்தினை அடுத்து விஷால் நடித்துவரும் படம் 'சமரன்'. இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.  ' தீராத விளையாட்டு பிள்ளை'  இயக்கிய  திரு இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது 'சமரன்' என்ற தலைப்பினை 'சமர்' என்று மாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தினை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால்.
மூன்று வேடங்களில் விஷால் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு சுந்தர் சி. 'MGR' (Madhan, Gaja, Raja) என்று தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்கள்.

விஷால் இப்படத்தில் மதன், கஜா, ராஜா என்ற மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இத்தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்களாம்

இப்படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்க இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையில் இப்படத்தில் இடம் பெறும் ஒரு குத்து பாடலுக்கு, சதா நடனமாட இருக்கிறார்.

மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'கொசுறு' கபாலி :  " டைரக்டர் சார்.. உங்க வீட்ல இந்த டைட்டிலுக்கு என்ன சொன்னாங்க? "

விரைவில் உருவாகிறது நவீன டைட்டானிக் கப்பல்


புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய டைட்டானிக் கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்
ஒருவரான கிளைவ் பாமர், அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இவ்வகையான கப்பலை உருவாக்குமாறு சீன அரசுக்கு சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களிடம் கிளைவ் பாமர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலை உருவாக்கும் பணி அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் 2016ஆம் ஆண்டு இக்கப்பல் உருவாக்கப்பட்டு கடல் பயணங்களுக்குத் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.

வடிவமைப்பு, கப்பலின் அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், இது கடந்த நூற்றாண்டின் டைட்டானிக் கப்பலை ஒத்ததாகவே உருவாக்கப்படும் ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதே தனது திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சி.எஸ்.சி. ஜின்லிங் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இக்கப்பலை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே ( ஏப்ரல் 15, 1912) பனிப்பாறையில் மோதி மூழ்கிய ஒரு கப்பல். இக்கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவு தினம் கடந்த ஏப்ரல்-15 ம் தேதி அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 29, 2012

"அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்

"அக்னி-5' ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை (ஆன்டி ரேடியேசன் மிசைல்) வடிவமைக்கும் பணியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்.,) ஈடுபட்டுள்ளது.

இந்த ஏவுகணை எதிரியின் நவீன எச்சரிக்கை முறையை தாக்கிய அழிக்க வல்லது.
ஐந்தாயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, "அக்னி-5' ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள,ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், அடுத்த கட்டமாக, எதிரிகளின் நவீன எச்சரிக்கை முறையையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, மிக நவீன ஏவுகணையைத் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணையானது தன்னிடம் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேசன் மூலம்,ரேடார்களையும், ரேடார் ஆன்டனாக்களையும், டிரான்ஸ்மிட்டர்களையும் எளிதில் கண்டறிந்து அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மட்டுமே, இந்த அதி நவீன ஏவுகணை தற்போது உள்ளது. இந்த கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை, சுகோய் ரக போர் விமானங்களில் பொருத்த முடியும். இந்த வகை விமானங்கள்,140ஐ ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே இந்திய அரசு வாங்கியுள்ளது. மேலும், 100 விமானங்களை விரைவில் ரஷ்யா வழங்கவுள்ளது.

படையில் சேர்கிறது தேஜஸ் : 

இதற்கிடையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தேஜஸ் போர் விமானம், விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும். இத்தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டி.ஆர்.டி.ஓ.,)தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலகு ரக தேஜஸ் போர் விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வின் விமான கட்டுமான மேம்பாட்டு ஏஜென்சியும், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., நிறுவனமும் இணைந்து, இந்த விமானத்தை தயாரித்துள்ளன. இந்த விமானத்தின், அனைத்து பரிசோதனைகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டமாக, இதுவரை,1,855 மணி நேரம், வானில் பறக்க விடப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதிலிருந்த ஒரு சில குறைபாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து, இந்தாண்டுக்குள், இந்த விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவுள்ளது.இவ்வாறு சரஸ்வத் கூறினார்.

அஜீத் குமாரை புகழ்ந்த நடிகை புருனா


அஜீத் குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2 நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரிவித்துள்ளார். பி்ல்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் புருனா அப்துல்லா. இவர் ஒரு அரபிய-பிரேசில் கூட்டுத் தயாரிப்பு. ஹைட்டும், கச்சிதமான வெயிட்டும் புருனாவை படு கம்பீரமாக காட்டுகிறது. அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில்,அஜீத் குமாருடன் நடித்தது ஒரு சிறப்பான அனுபவம். அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் இயல்பாகப் பழகுவார். அமைதியானவர். அவரோட வேலை செய்வது ரொம்ப ஈசி. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர் எனக்கு தமிழில் பேச கற்றுக் கொடுத்தார். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்றார்
கோலிவுட்டில் இருநாட்டு கூட்டுத் தயாரிப்பில் பிறந்த நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. புருனா அப்துல்லா, நதாலியா கௌர், தற்போது நர்கிஸ் பக்ரி என்று பட்டியல் நீள்கிறது.

கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில்


"கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது

விசித்திரமான ஃபேஸ்புக்.....

இந்த ஃபேஸ்புக் விசித்திரமான பல விசையங்களைக் கொண்டிருக்கிறது
புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது
ஆனால் இந்த ஃபேஸ்புக் ஒன்றும் ஆச்சரியமானதல்ல
பேஸ்புக் பாவிக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல
பேஸ்புக்கிலே சர்வ சாதாரணமாக வந்துபோகும் ஜீவன்களில் நானும் ஒருவன்..


பேஸ்புக்கில் மற்றவர்கள் ஃபோட்டோக்கு நக்கலடித்தேன்,
ஃபோட்டோக்களை எடிட் பண்ணினேன்
மற்றவர்களைப் பயங்கரமாகக் கலாய்த்தேன்..
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படி எல்லாம்,
ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம்
மறுக்கப் போகிறேன் என்று
இல்லை இலவே இல்லை

பேஸ்புக்கில் மற்றவர்கள் ஃபோட்டோவை நக்கலடித்தேன் ஏன் அவர்கள் ஃபோட்டோ கூடாதென்றா? இல்லை நக்கலடிக்கும் விதமாக அவர்கள் ஃபோட்டோ போட்டார்கள் என்பதற்காக

ஃபோட்டோக்களை எடிட் [பண்ணினேன் ஏன்
அவன் ஃபோட்டோக்களை சீரழிக்க வேண்டும் என்றா?
இல்லை என் ஃபோட்டோவை எடிட் பண்ணியதற்கு பழிவாங்குவதற்காக

மற்றவர்களைப் பயங்கரமாகக் கலாய்த்தேன் ஏன் அவர்களை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காகவா?
இல்லை
சும்மா கிளு கிளுப்பு கல கலப்பிற்காக

உனக்கெதற்கு கிளு கிளுப்பு யாருக்குமே கிடைக்காத கிளு கிளுப்பு
என்று கேட்பீர்கள்.
ஆமாம் தேவைப்பட்டது என் தனிமையைப் போக்க எனக்குத் தேவைப்பட்டது. எனது சுய நலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது

தரப்படுத்தலில் முன்னிலை பெறவேண்டும் என்பதற்காக நலிந்து போன மேற்கிந்தியத் தீவுகள் அணியை தங்கள் நாட்டுக்கு கூப்பிட்டு அடிமேல் அடி அடித்தார்களே இந்திய கிரிக்கட் அணி அவர்களைப் போல…

என்னைத் தப்பு சொல்கிறீர்களே…. எனது பேஸ்புக் பிண்ணனியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்…நான் பார்த்து வந்த அவமானங்கள் எத்தனை, வில்லங்கம் பிடித்தவர்கள் எத்தனை, பொறாமை பிடித்தவர்கள் எத்தனை என்பதனைக் கணக்குப் பார்த்திட இயலும்

நான் Barn Buddy இல் விவசாயம் செய்ததில்லை ஆனால் பலருக்கு Barn Buddy இல் விவசாயம் செய்ய உதவியிருக்கிறேன்
நான் City Ville விளையாடியத்தில்லை ஆனால் பலர் City Ville யில் புள்ளிகள் பெற உதவியிருக்கிறேன்..
நான் சிரித்து மகிழ்ச்சியாக இருந்ததில்லை.. ஆனால் பலர் சிரித்து மகிழ காரணமாயிருந்திருக்கிறேன்

கேளுங்கள் என் கதையை என்னைத் தப்பாக நினைப்பதற்கு முன் கேளுங்கள்

இலங்கையிலே அழகிய திருவையாறு இலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்..
யாழ்ப்பாணத்தின் தலையெழுத்திற்கு நானென்ன விதிவிலக்கா?
யாழ்ப்பாணம் என்னை அழைத்தது
உயர்ந்தவனாக்கியது தனிமையுமாக்கியது.

தனிமையில் தனியாக உழன்றேன்..
எங்கு செல்வது என்று தவித்தேன்..
நற்புகள் இல்லாமல் பித்துப்பிடித்தவன் போல் அலைந்தேன்
இப்படி தனிமையில் அலைந்த நான் கடைசியில்
என் தனிமையைப் போக்க ஃபேஸ்புக் வந்தேன்


என் பெயரோ ஜெயவிஷ்ணு
எவ்வளவு அழகான பெயர்.
ஆனால் கையில்காசுமில்லை காதலிக்க ஆளுமில்லை

நான் மட்டும் நினைத்திருந்தால் ஃபேஸ் புக்கில் ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கி பலர் வாழ்க்கையைக் கெடுத்திருக்கலாம்
மாடர்ன் ஃபிகரை சட்டிங்கில் மடக்கி ப்ராக்கெட் போட்டிருக்கலாம்.
மற்றவர்களின் அக்கெளண்டை ஹெக் பண்ணீ ப்லாக் மெயில் பண்ணியிருக்கலாம்..
ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த ஃபேஸ் புக் சமூகம்

ஸ்டேடஸ் போட்டால் கலாய்த்தார்கள் ஓடினேன்

ஃபோட்டோ போட்டால் எடிட் பண்ணீ அசிங்கப் படுத்தினார்கள் ஓடினேன்

வேண்டுமென்றே என் ஃபோஸ்ட்டுக்கு லைக் போடாமல் கொமெண்ட் போடாமல் தவிர்த்தார்கள் ஓடினேன்.

சற்றிங்கில் Hi சொன்னால் bye சொன்னார்கள் ஓடினேன்

போலி அக்கெளண்ட் வைத்து ஏமாற்றினார்கள் ஓடினேன்

குறூப்பாக சேர்ந்து காமெடி பண்ணினார்கள் ஓடினேன்

எனது சொந்த கற்பனையில் வந்த போஸ்ட்களை கொப்பி பண்ணீ அவர்கள் போஸ்ட் என்றார்கள் ஓடினேன்

பொய்யான வதந்திகளை என் மேல் கட்டிவிட்டார்கள் ஓடினேன்

ஓடினேன் ஓடினேன்….. ரொம்பத் தூரம் ஓடினேன்…
Laptop பை விட தூரம் ஓடியதால் Lap top எட்டவில்லை அதனால் திரும்பி Laptop அருகிலே வந்துவிட்டேன்

பாவம் என் வாழ்க்கை ஒலும்பிக் ஓட்டத்தை விடவும் வேகமாக ஓடவேண்டியதாக மாறிவிட்டது.
என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்,வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க வேண்டும் இன்று என்னைக் குற்றம் சொல்வோர்..

செய்தார்களா..? சப்போர்ட் பண்ணினார்களா எனக்கு...?

போட்ட ஸ்டேடஸ்களையெல்லாம் கலாய்த்தது யார் குற்றம்?
கலாய்த்த அவர்கள் குற்றமா? இல்லை அவர்கள்
கலாய்க்கும் வண்ணம் போஸ்ட் போட்ட என் குற்றமா…?

என் ஃபோட்டோக்களை எடிட் பண்ணியது யார் குற்றம்?
எடிட் பண்ண உதவிய ஃபோட்டொ சொப்பின் குற்றமா? இல்லை மற்றவர்கள் பொறாமைப் பட்டு எடிட் பண்ணி அசிங்கப் படுத்த தூண்டும் வண்ணம் ரொம்ப அழகாய்ப் பிறந்த என் குற்றமா?

facebook அக்கெளண்ட் உருவாக்கியது யார் குற்றம்?
பேக் அக்கெளண்ட் உருவாக்கியவர்களின் குற்றமா…? இல்லை facebook அக்கெளண்ட் உருவாக்க வாய்ப்பளித்த ஃபேஸ்புக்கின் குற்றமா?

என் போஸ்ட்களை கொப்பி பண்ணீ அவர்கள் போஸ்ட் என்று சொன்னது யார் குற்றம்?
கிட்னியை யூஸ் பண்ணீ யோசித்த என் குற்றமா? இல்லை அதை அப்பட்டமா கொப்பி அடித்த அவர்கள் குற்றமா?

இப்படியானவர்களைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து
சைலண்டாக இருந்த நான் வையலண்டாக மாறினேன்..

இப்படியானவர்கள் ஃபேஸ்புக்கிலிருந்து ஒதுங்கும் வரை என்னைப் போன்ற அமைதியான ” ” கள் ஆக்ரோசமான சுனாமிகளாகத்தான் மாறிக் கொண்டிருப்பார்கள்...


உங்கள் websiteன் வேகத்தை குறைப்பது எது... check பண்ணுவமா??


உங்கள் தளத்தின் வேகத்தை உங்கள் தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் widgetsகளே குறைக்கின்றன.
நீங்கள் இந்த தளத்தில் சென்று உங்கள் தளத்தின் URL ஐ கொடுத்து "Start StopWatch" என்பதை அழுத்துங்கள். அத்தளம் images, videos, widgets, அணைத்தையும் ஆராய்ந்து தளம் load ஆவதற்கு எடுக்கும் நேரத்தை தரும் 

http://www.linkvendor.com/seo-tools/speedtester.html 


2 மில்லியன் வருடங்களுக்கு முன்பே மனிதர்கள் சமைத்த சாம்பல் கண்டுபிடிப்பு

wonderwerk-cave-south-africa
wonderwerk-cave-hunting-fire
wonderwerk-cave-hunting

பல ஆண்டுகளுக்கு முற்பட்ட சாம்பல் தென்ஆபிரிக்க குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மனிதர்கள் 2 மில்லியன் வருடங்களுக்கு முன்பே சமைத்துள்ளனர் என்ற உண்மையை விளக்ககூடுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Boston University in Massachusett ஐ சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் Francesco Berna மற்றும் அவரது குழுவினர் புற்கள், இலைகள், எலும்புகள் எரிக்கப்பட்டதனால் உருவான இந்த சாம்பலை தென்ஆபிரிக்காவில் நோர்த் கேப் எனும் இடத்திலுள்ள Wonderwerk குகையின் 30 மீட்டர் ஆலத்தில் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த குகையும் மனிதனின் 2மில்லியன் வரலாற்றுக்கான முக்கியமான சான்றுகளில் ஒன்றாகும்.ஆனால் மனிதனின் எந்த இனப்பிரிவை சேர்ந்தவர்கள் இதை பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. எனினும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி இது Homo erectus இனால் உருவாக்கப்பட்டசாம்பலாக இருக்லாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அமேசன் மழைக்காடு எப்படி உருவானது தெரியுமா.........?


உலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் நிறைந்த பகுதி அமேசான்.நூறு சதவிகித ஓக்சிஜன் கிடைப்பதும் இங்கே தான் .ஆகவே இவ் பதிவில் அமேசன் மழைக்காடுகள் எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்.பூமி பிறந்து சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகியிற்று.380கோடி ஆண்டுகள் வரை பூமியில் எந்த உயிரினமும் தோன்றவில்லை.நெருப்புக் குழம்பான பூமி குளிர்ந்து பாறையாகியது.கடல்கள் உருவாகின.அதன் பிறகு உயிர்கள் உருவாகின.ஆனால் அப்போது ஓக்சிஜன் துளிகூட புமியில் இல்லை.
அப்படியென்றால் எப்படி சுவாசிக்க முடியும்?அப்போதுள்ள உயிரினங்கள் ஹைட்ரஜனை மட்டுமே சுவாசித்தன.தாவரங்கள் பூமியில் தோன்றி பிறகுதான் அவை உணவு தயாரிக்கும் போது ஓக்சிஜன் உருவானது. ஓக்சிஜன் உருவாகி சுமார் ஜம்பதுகோடி ஆண்டுகளாகின்றன.உயிரினங்களின் வரலாறு அறிய காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர்.தொன்மைக்காலம் இடைக்காலம் தற்காலம்.சுமார் ஜம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி வடக்கே லாரேசியா தெற்கே கோண்டுவானா என இரண்டு நிலப்பரப்புகளாக இருந்தது.

20-25 கோடி ஆண்டுகளுக்கு மன் பாஞ்சயா என்ற ஒற்றைத்திட்டாக மாறிவிட்டது.புவித்தட்டு நகர்வால் பாஞ்சயா உடைந்து இப்போதுள்ள கண்டங்கள் உருவாகின.அட்லாண்டிக் பெருங்கடல் அகன்றது.

பாஞ்சயா கண்டமாக இருந்த காலத்தில் கங்கோவின் துவக்க கால ஆற்று பகுதியில் அமேசான் ஆறு மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.அப்போது கடல் நீர் நிலப்பரப்புக்குள் அடித்துக்கொண்டு வந்தது.இதனால் அமேசான் ஆறும் அடித்துசெல்லப்பட்டது.கடல் நீர் பெரு பொலிவியா நாடுகளை நெருங்கியது.அமேசான் ஆற்றுப்படுக்கையைக் கண்டத்துடன் இணைந்தது. தற்காலத்தில்தான் இன்றைய காடுகளின் அமைப்பும் மழைக்காடுகளும் உருமாற்றம் பெற்றன.இதே கால கட்டத்தில் தென்அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா துண்டிக்கப்பட்டு எதிர்திசையில் நகர்ந்தது.இந்த இடைவெளியின் நடுவே உருவானதுதான் அட்லாண்டிக் பெருங்கடல்.அதுவரை அமேசான் ஆறு மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலில் கலந்து கொண்டிருந்தது.

தற்காலத்தில்தான் உலகில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.தென்அமெரிக்க பூமித்தட்டும் நாஸ்கா தட்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியதன் விளைவாக உருவானது தான் ஆண்டிஸ் மலைத்தொடர்.

ஆண்டிஸ் மலையின் எழுச்சியும் உலகில் நிகழ்ந்த நிலவியல் மாற்றங்களும் அமேசான் ஆற்றையும் போக்கையும் மாற்றியன.ஆண்டிஸ் மலை உயர்ந்ததால் பிரேசில் கயானாவில் இருந்த பாறை திட்டுகள் அமேசானின் ஓட்டத்தை தடுத்தன.அமேசான் ஆறு என்ற நிலையிலிருந்து உள்நாட்டுக் கடலாக உருமாற்றம் அடைந்தது.காலம் மாற மாற உப்பு நீராக இருந்த அமேசான் பெரிய சதுப்பு நிலமாக மாறி அதன் பின்னர் பெரிய நல்ல நீர் ஏரியாக மாறியது.கடலிருந்து வந்த உயிரினங்களும் ஆற்று நீருக்கு ஏற்ற வகையில் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி கொண்டன.

சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் தென்அமெரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள மணற்கற்கள் அமேசான் ஆற்று நீரின் ஓட்டத்தை தடுத்தன.அமேசானின் போக்கை கிழக்கு நோக்கி திருப்பி விட்டது.இதே காலகட்டத்தில்தான் அமேசான் ஆற்றின் கரையின் இருபுறமும் நீரோட்டம் அதிகரித்து அமேசான் மழைக்காடுகள் உருவாகின.

பனியுகம் ஆரம்பமானதும் கடல்கள் கூட பனிக்கட்டிகளாக மாறின.பனியுகங்கள் அமேசான் காடுகளை மாற்றியமைத்தன.நிறைய புல்வெளிகளும் அடர்த்தி குறைந்த மரங்களும் காணப்பட்டன.பனியுகம் முடிந்ததும் பனிகள் உருகி நீராக மாறியது.தனித்தனி திட்டுகளாகவும் தீவுகளாகவும் இருந்த காடுகள் ஒன்றாக இணைந்தன. பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய அமேசான் இன்றும் தனி சிறப்புடன் தனது ஓட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

சீனாவுக்கு தெரிகிறது தமிழின் பெருமை... தமிழனுக்கு????


சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.

போலீஸ் முன் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை


வேடசந்தூர் எரியோடு 10வது வார்டு திமுக அவைத்தலைவர் கருப்பசாமி போலீஸ் முன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

உறவினர்கள் 3 பேரால் உயிருக்கு ஆபத்து என எரியோடு போலீசில் கருப்பசாமி புகார் அளித்தார்.  கருப்பசாமியை அழைத்துக்கொண்டு விசாரிக்க வந்தது போலீஸ்.   அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக போலீஸ் கண் முன் கருப்பசாமியை வெட்டி படுகொலை செய்தனர்.

கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொன்று தப்பிய 3 பேரை போலீஸ் தேடு வருகிறது.

ஜூனியர் கேப்டன் பராக்! பராக்!!


ஜூனியர் என்.டி.ஆர்.  நடித்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது.  இப்படத்தில் ஜூனியர் கேப்டன் நடிக்கிறார்.

விஜயகாந்த்தின் இளைய மகன் ஷண்முகப் பாண்டியனை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்த விஜயகாந்த், அவனுக்கு ஏற்ற கதையாக தேடிக் கொண்டு இருந்தார்.


இறுதியாக தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பிருந்தாவனத்தை தமிழில் தனது மகன் ஷண்முகப்பாண்டியனை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விஜயகாந்த் தனது சொந்த பேனரில் தயாரிக்க உள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர்  கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் நடனத்தை ஷண்முகப்பாண்டியனே கவனித்துக் கொள்கிறாராம்.

மைதானத்தில் புகைபிடித்ததால் ஷாருக்கானுக்கு சம்மன்


ஐ.பி.எல் 5 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் கடந்த 8ம் திகதி நடைபெற்றது.

இந்த போட்டியை நேரில் காண வந்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் மைதானத்தில் புகை பிடித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீது ஜெய்பூர் கிரிக்கெட் அகாடமி தலைவர் ஆனந்த் சிங் ரத்தோர் புகார் கொடுத்தார். இது தொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரத்தோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நெம் சிங் ரத்தோர் கூறுகையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஷாருக்கான் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மைதானத்தில் புகைபிடித்துள்ளார்.


அந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்களிலும் அவர் புகைபிடிக்கும் காட்சியும் வந்தது என்று கூறினார்.

இதனை விசாரித்த நீதிவான் ஷில்பா சமீர், நடிகர் ஷாருக்கானுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அந்த சம்மனில் மே 26ம் திகதிக்குள் ஷாருக்கான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஷாருக்கான் ஏற்கனவே இது போல புகை பிடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



நிராகரிக்கப்பட்ட ரஜினியின் கோரிக்கை! ஏமாற்றத்தில் ரஜினி!


கோச்சடையான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக இருந்தாலும், உள்ளுக்குள் சில கவலைகள் இருக்கின்றதாம். அந்த கவலைகள் தன் மகள் சௌந்தர்யா பற்றியது தான்.

இதற்கு முன் சௌந்தர்யா சுல்தான், கோவா ஆகிய படங்களுக்கு பைனான்ஸ் வாங்கிய போது ஏற்பட்ட பணப்பிரச்சினையை ரஜினி தலையிட்டு தீர்த்து வைத்தார். இப்போது மறுபடியும் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தை எராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து சௌந்தர்யா தயாரிக்கிறார்.

ஒருவேளை படத்தினால் நஷ்டமடைந்தால் தானே இழப்பீடு தரப்போகிறார்கள், அப்போது கூட எவ்வளவு நஷ்டம் வந்துவிடப் போகிறது என்று கேட்டால், சங்கதி அதுவல்ல என்கிறது சினிமா வட்டாரம். கோவா படத்திற்காக ரஜினி இழப்பீடு கொடுத்ததால் தான் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடு செய்வார் என்ற பேச்சு எழுந்தது.

இப்போது மீண்டும் சௌந்தர்யாவிற்காக பணம் கொடுத்தால் பழையபடி பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதால், கோச்சடையான் ஷூட்டிங்கிற்காக கேரளா செல்வதற்கு முன் ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு ஒரு விசிட் அடித்தார் ரஜினி.

ரஜினி எப்போது நினைத்தாலும் ஏ.வி.எம் சரவணனை பார்க்கலாம். ரஜினிக்காக ஏ.வி.எம்மின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஏ.வி.எம் சரவணனை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சந்தித்த ரஜினி கோச்சடையான் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

சிறிது நேரம் யோசித்த சரவணன் ரஜினியிடம் “ தமிழ் சினிமா முன்பு போல் இல்லை ரஜினி. சூழ்நிலை நன்றாக இல்லை. படம் தயாரிக்கும் நிலையில் நானும் இல்லை. உனக்கு உதவ முடியாத நிலையில் நான் இருக்கிறேன் மன்னித்துக் கொள்” என்று கூறினாராம்.

அதன் பிறகு ரஜினி அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டிருக்கிறார். ரஜினி இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்ற பதட்டத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

எம்.பி. பதவியை ஏற்க சச்சின் தெண்டுல்கர் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கலாம்: ராம்தேவ்


நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மேல் சபை எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து யோகா குரு ராம்தேவ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்டோர் மேல் சபை எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சச்சினை மேல் சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மூழ்கும் நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை, தாங்கி நிலை நிறுத்தவே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. சச்சினுக்கு பதவி கொடுப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.

அதே போல் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவும் இந்திய மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட அரசியல் தரப்பில் எதிர்ப்புகள் வருவதால், அவருக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் அரசியலே. சச்சினை கட்சியில் சேர்க்க நடக்கும் முயற்சியே இது.

இந்த பதவியை ஏற்க அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கு பதிலளிப்பது சச்சினின் கையில்தான் உள்ளது. மேல் சபையில் அமைதியாக இருக்கப் போகிறாரா அல்லது ஊழலுக்கும் கருப்பு பணத்துக்கும் எதிராக குரல் கொடுக்கப் போகிறாரா என்று சச்சின்தான் பதிலளிக்க வேண்டும்.

பல சதங்களையும் சிக்சர்களையும் அடித்துள்ள அவருக்கு இது குறித்து தெளிவான முடிவெடுக்க எல்லா உரிமையும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது5) என்ற மகள் இருந்தாள். அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 1.1.2011 அன்று வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீர் என மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவளை காணவில்லை. மறுநாள் அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டு தொழுவத்தில் ராஜலட்சுமி பிணமாக கிடந்தார்.

சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.   இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த மலபார் என்ற கருப்பு மற்றும் அவரது தந்தை மகாமுனி (61) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் சில மாதங்களில் இறந்துவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி ராஜலட்சுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக கச்சக்கட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், மதுரை மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் துணை தலைவருமான அயூப்கான் (50), முருகேசன் (54), பொன்னுசாமி (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை நரபலி கொடுத்தது ஏன்? என்பது குறித்து கைதான அயூப்கான் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி கொண்டு இருக்கின்றேன். அதில் தடை ஏற்பட்டது. இதனால் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால் கட்டிடம் வேகமாக கட்டி விடலாம் என நினைத்தேன்.

கச்சகட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகியோரை தொடர்பு கொண்டேன்.   அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதற்காக பல லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறினேன்.

அதனை தொடர்ந்து பொன்னுசாமி, மலபார் ஆகியோர் சிறுமி ராஜலட்சுமியை கடத்தி கொண்டு மலபார் வீட்டில் அடைத்து வைத்தனர். சிறுமி காலில் கிடந்த கொலுசை மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.

அதிகாலை 2 மணி அளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுசாமி, லட்சுமி ஆகியோர் பிடித்து கொண்டனர். மலபார் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஒரு வாளியில் பிடித்தார். சிறிது நேரத்தில் சிறுமி இறந்து விட்டாள். அதன் பின்னர் ரத்தத்தை கல்லூரி கட்டிடத்தை சுற்றி தெளித்தேன்.

சிறுமியை கொலை செய்ததற்காக மகாமுனிக்கு ரூ.4 லட்சமும், பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சமும் கொடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள அயூப்கான் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

தற்போது சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமி கொலை தொடர்பாக மலபாரின் மனைவி லட்சுமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?


சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...

ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.

எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.

வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.

ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.

ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.

ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.

எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.

ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.

இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன. இது போக வழக்கமாக அவர் கிரிக்கெட் ஆடும்போது பல லட்சம் சம்பளமாகவும் கிடைக்கும்.

தனது எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு சச்சின் என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!


மதுரை மக்கள் பெரும் வியப்பிலும், குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.

மதம் சார்ந்த மடங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் குன்றக்குடி அடிகளாரும், அவரது மடமும் மட்டுமே. மதம் சார்ந்த ஒரு அதிபதியாக இருந்தாலும் கூட தமிழார்வலராக, தமிழ் ஊழியராக, தமிழுக்காகவும், சமுதாயத்திற்காகவும் தொண்டாற்றிய பெருமை படைத்தவர் குன்றக்குடி அடிகளார்.

தனக்காக, தான் சார்ந்த மதத்திற்காக என்றில்லாமல், தமிழுக்காகவும், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி மக்கள் இன்றளவும் அடிகளாரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மத மாச்சரியமின்றி, அரசியல் பாகுபாடின்றி அத்தனை பேராலும் பாராட்டப்பட்டவர், மதிக்கப்பட்டவர் குன்றக்குடி அடிகளார். அவருக்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது என்பதுதான் உண்மை.

குன்றக்குடி அடிகளாரைப் போல இல்லாவிட்டாலும் கூட சமுதாயம் சார்ந்த ஒரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மதுரை ஆதீனம். ஈழத் தமிழர் போராட்டம், முல்லைப் பெரியாறு அணை போராட்டம் என பல போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் முன்பு இயங்கிய டெசோ அமைப்பில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர்.

சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து அக்கறை காட்டி வந்தவர். அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தவர். இவர் மீதும் சலசலப்புகள், சர்ச்சைகள் இருந்தபோதும் கூட பெரிய அளவில் மக்களிடையே களங்கப்படாதவராகவே இருந்து வந்தார்.

ஆனால் மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவு மதுரை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஆதீனமா இப்படி முடிவெடுத்தார் என்பதை மதுரை முழுக்கப் பேச்சாக உள்ளது.

ஆதீனம் இப்படிச் செய்வார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க, ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை ஆதீனம் என்பது மதுரையின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறிப் போன ஒன்று, மதுரையின் அடையாளங்களில் ஒன்று, மதுரையின் வரலாற்றில் ஒன்று. எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்பது கூட சரியாக தெரியாத அளவுக்கு மிக மிகப் பழையான ஒரு மடம்.

சைவக் குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவித்த மடம் இது. சைவ நெறி பரப்பி வந்த இந்த மடத்தில் இதுவரை இந்த அளவுக்கு பரபரப்பான சம்பவம் எதுவும் நடந்ததில்லை. ஆனால் தற்போது மதுரை ஆதீனம் அகில இந்திய அளவில் ஆச்சரியக் குறியாக எழுந்து நிற்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஆசிரியரான சுப்பிரமணியம் என்பவர் ஆதீனத்தின் முடிவு குறித்துக் கூறுகையில், ஏதோ 'ஏ படம்' பார்த்தது போல இருக்கிறது ஆதீனத்தின் இந்த முடிவு. இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இது மோசமாக கனவாக இருக்க வேண்டும் என்று இப்போது கூட நான் வேண்டுகிறேன். அன்னை மீனாட்சியை தரிசித்து விட்டு ஆதீனம் மடம் வழியாகத்தான் நான் வீட்டுக்குப் போவேன். இனிமேல் நான் இந்த மடத்தைப் பார்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பார்க்கவும் பிடிக்கவில்லை. ரொமபக் கஷ்டமா இருக்கு சார் என்றார்.

மதுரையைச் சேர்ந்தவரான கதிரேசன் என்ற பேராசிரியர் கூறுகையில், மதுரை ஆதீம் என்பது மாபெரும் தலைவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஒரு மடம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் அரவணைத்திருந்த மடம் இது. இதன் வரலாறு 1500 ஆண்டுகளுக்கும் மேலானது. இதற்கு மதுரை ஆதீனம் நியமித்துள்ள புதிய ஆதீனத்தை எங்களால் நிச்சயம் ஏற்க முடியாது என்றார்.

எழுத்தாளர் பிரியதர்ஷனி என்பவர்க கூறுகையில், எனக்கு இந்த நியமனம், அதன் விதிகள் உள்பட எதுவுமே தெரியாது. ஆனால் மதுரை மக்களும், மதுரை நகரமும், மற்றவர்கள் முன்பு கேலிப் பொருளாகி விட்டதை மட்டும் உணர்கிறேன். மதுரையின் பெயர் நிச்சயம் மாசுபட்டு விட்டது என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றார்.

மதுரை மக்களுக்கு ஆதீனம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறாரோ...?

கைத்தொலைபேசி அழைப்பை டெட்டூ மூலம் அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம்


சிலருக்கு கைதொலைபேசி இருந்தும் அழைப்பு வருவதை அறிந்துகொள்ள முடியாதுள்ளது. அதன் பொருட்டு அவர்களுக்காக புதிய தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடைவீதிகள், பேருந்து, ரயில் பயணங்களில் நமக்கு அழைப்பு வந்தாலும் தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் டாட்ரூ ஒன்றை உடலில் ஒட்டிக்கொள்ளலாம் அதன் மூலம் கைத்தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளை அறிந்து கொள்ள இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது.


இதயம், நுரையீரல் சத்தம்கூட கேட்கும் மரண பீதி ஏற்படுத்தும் மயான அமைதி அறை : முக்கால் மணி நேரத்துக்கு மேல் உட்கார்வது ஆபத்து


உலகிலேயே மிகமிக அமைதியான அறை அமெரிக்காவில் உள்ளது. இந்த அறையில் உட்கார்ந்தால் இதயம், நுரையீரல், இரைப்பை இயங்கும் சத்தம்கூட கேட்கும். இந்த அறையில் முக்கால் மணி நேரத்துக்கு மேல் யாரும் உட்கார்ந்ததாக சரித்திரம் இல்லை
தியேட்டர்கள், பெரிய அரங்கங்கள், இசை நிகழ்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் இரைச்சல், எதிரொலி ஆகியவற்றை தடுக்கும் வகையில் பிரத்யேக வசதிகள் செய்யப்படும். அரங்கத்தின் சுவர், தரை, கூரை ஆகியவற்றில் ஒலியை உள்வாங்கக்கூடிய பொருட்கள் பொருத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகர் மின்னபாலிஸ் நகரில் உள்ள ஆர்பீல்டு ஆய்வுக்கூடத்தில் ‘மயான அமைதி’ அறை உருவாக்கப்பட்டுள்ளது. ‘அன்எக்கோயிக் சேம்பர்’ என்பது இதன் பெயர். ஸ்டீல், கான்கிரீட் என இரண்டு அடுக்கு சுவர்களை கொண்டு இந்த சவுண்ட் புரூப் அறை அமைக்கப்பட்டுள்ளது. 99.99 சதவீதம் எதிரொலி தடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகமிக அமைதியான இடம் என்று 2005,ல் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது இந்த அறை.

‘‘பசங்க சத்தம் தாங்க முடியல. கொஞ்ச நேரம் போய் உக்காந்துட்டு வரலாம்’’ என்ற எண்ணத்தில் இந்த அறையில் அமர முடியாது. காரணம், அங்கு நிலவும் மயான அமைதி மரண பீதியை ஏற்படுத்தும் என்கிறார் ஆர்பீல்டு ஆய்வுக்கூட நிறுவனர் ஸ்டீவன். இதுபற்றி அவர் கூறியதாவது: விண்வெளிக்கு செல்பவர்கள் துளிக்கூட சத்தம் இல்லாத இடத்தில் வெகு நேரம் இருந்து தங்களை தயார்படுத்திக் கொண்டால்தான் பயமின்றி விண்வெளிக்கு செல்ல முடியும். அதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த அறை அமைக்கப்பட்டது.

மேலும், உலகப்புகழ் பெற்ற ஹர்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த சத்தம் கொண்ட பைக்குகள் தயாரிக்கவும் இந்த அறையை பயன்படுத்திக் கொள்கிறது. சிறிதுகூட சத்தம், எதிரொலி கேட்காது என்பதால் அமைதியாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அந்த அமைதி மிகவும் பீதி தருவதாக இருக்கும். அன்எக்கோயிக் சேம்பர் மயான அமைதியுடன் இருப்பதால் இதயத்தின் லப்டப் சத்தம், நுரையீரலின் சுவாச சத்தம், இரைப்பையின் செரித்தல் சத்தம்கூட தெள்ளத் தெளிவாக நமக்கு கேட்கும். நேரம் ஆகஆக ரத்த ஓட்டம்கூட பெரும் இரைச்சல் போல கேட்கும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். நடக்காதது எல்லாம் நடப்பது போல தோன்றும். அன்எக்கோயிக் சேம்பரில் ஒருவர் அதிகபட்சம் முக்கால் மணி நேரம் உட்கார்ந்ததுதான் சாதனையாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து. இவ்வாறு ஸ்டீவன் கூறினார்.

புற்று நோயை பீசா தடுக்கும் : இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்


வயதான மனிதர்களின் உடலில் உள்ள பெருஞ்சுரப்பிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு பலர் பலியாகி வருகின்றனர். அதற்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிக்சை, ஹார்மோன் சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்கும் தனியாக சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதில் இருந்து தப்பிக்க தற்போது எளிதான புதிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது பீசாவை அதிக அளவில் சாப்பிட்டால் சுரப்பி புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் பீசா மற்றும் இத்தாலி வகை உணவுகளில் ஒரீகானோ என்ற ரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. அது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது.

இந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய ஆராய்ச்சியாளர் சுப்ரியா பவேத்கர் தெரிவித்துள்ளார். லாங் ஐலேண்டு பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரியா பவேத்கரும் அவரது குழுவினரும் ஒரு ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்தனர். அப்போது ஒரீகானோ என்ற ரசாயன பொருள் சுரப்பி புற்றுநோயை குணபப்டுத்துவைத அறிந்தனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.










விண்கற்களில் பிளாட்டினத்தை வெட்டியெடுக்க திட்டம்


பண்டோரா' என்ற கிரகத்தில் 'யுனப்டேனியம்' என்ற கனிமத்தை சுரண்டுவதற்காக அந்த கிரகத்து மக்களையே அழித்து ஒழிக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அட்டகாசமான 'அவதார்' படத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாம் மறப்பது சாத்தியமில்லை. இது கதையல்ல நிஜம் என்கிற மாதிரி ஒரு சமாச்சாரம் நடக்கப் போகிறது.
பிளாட்டினம் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை வெட்டி எடுத்து வர விண்கற்களுக்கு (asteroids) 'புல்டோசர்களை' அனுப்பப் போகிறது Planetary Resources Inc என்ற அமெரிக்க நிறுவனம். இந்தத் திட்டமே சயின்ஸ் பிக்சன் சினிமா மாதிரி இருந்தாலும், இதற்கு நிதியுதவி செய்ய கூகுள் நிறுவன அதிபர்களான லேரி பேஜ், எரிக் ஸுமிட் உள்ளிட்ட பல பெரும் தலைகள் முன் வந்துள்ளனர்.


முதல்கட்டமாக பூமிக்கு அருகாமையில் சுற்றி வரும் எரிகற்களை (near-Earth asteroids) இந்த நிறுவனம் குறி வைக்கப் போகிறது. சுமார் 1,500 எரிகற்கள் பூமியை மிக நெருக்கமாகவே சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே நாஸாவின் ஒரு செயற்கைக் கோள் ஒரு எரிகல்லில் லேண்ட் ஆகி, அதில் சில ரசாயன சோதனைகளையும் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


எரிகற்களில் தரையிறங்குவது கொஞ்சம் ஈசியான விஷயம் தான். நிலவிலோ அல்லது வேறு கோள்களிலோ நுழைந்து தரையிறங்க அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளும், பாராசூட்களும், பெரும் கவசங்கள் கொண்ட விண் கலன்களும் தேவை.


ஆனால், எரிகற்களில் ஈர்ப்பு விசையும், அழுத்தமும் மிக மிகக் குறைவு. சுமார் 20 சதவீத எரிகற்கள் பனிகட்டிகளால் ஆனவை தான். மற்றவை கல்- கனிமங்களால் ஆனவை. இதனால், அங்கு ஒரு ரோபா போன்ற கருவியை தரையிறக்குவது கொஞ்சம் எளிதான விஷயம் தான்.


இங்கு சுரங்கம் தோண்டும் ரோபாக்களை அனுப்பி, தேவையான கனிமத்தை வெட்டி எடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிடலாம் என்கிறார் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆண்டர்ஸன்.


ஒரு அவுன்ஸ் பிளாட்டினம் 1,500 டாலர்கள் விலை போகும் நிலையில், எரிகற்களுக்கு ரோபோவை அனுப்பி அங்கிருந்து பிளாட்டினத்தை வெட்டி எடுத்து வருவது நிச்சயம் லாபகரமான தொழிலாகவே இருக்கும் என்கிறார்.


இந்த நிறுவனத்தின் இன்னொரு நிறுவனரான பீட்டர் டையமன்டிஸ் ஏற்கனவே 'விண்வெளி டூர்' நிறுவனத்தை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 8 பெரும் பில்லியனர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு இவர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா மற்றும் ரஷ்ய விண்வெளி அமைப்பு மூலம் சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளார். இதில், நாஸாவும் ரஷ்யாவுக்கும் பெரும் லாபம் கூடவே டையமன்டிசும் பெரும் பணத்தைப் பார்த்துவிட்டார்.


இதையடுத்தே எரிகற்களை தோண்டி பிளாட்டினம் எடுக்கும் ஆசை இவருக்கு வந்துள்ளது. தனது நிறுவனத்தின் தலைவராகவும் தலைமைப் பொறியாளராகவும் நாஸாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் லெவிக்கியை நியமித்துள்ளார். இவர் நாஸாவின் மார்ஸ் (செவ்வாய்) கிரகத்துக்கு செயற்கைக் கோள்களை அனுப்பும் திட்டத்துக்கான மேலாளராக இருந்தவர்.


மேலும் எரிகற்களைத் தோண்ட லேசர்களை பயன்படுத்தும் முடிவில் இருக்கும் இந்த நிறுவனம் சுமார் 25 லேசர் தொழில்நுட்ப வல்லுனர்களையும் வேலைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளனர். வாஷிங்டனின் பெல்வியூ பகுதியில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.


கூகுள் நிறுவனர்கள் தவிர பேரோட் சிஸ்ட்ம்ஸ் நிறுவன அதிபரான ரோஸ் பெரோட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை சாப்ட்வேர் ஆர்கிடெக்ட்டான சார்லஸ் சிமோன்யி (இவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு டூர் போய் வந்தவர்) ஆகியோரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.


நாஸாவின் ஸ்பேஸ் ஷட்டில் விண்கல வீரரான (பலமுறை விண்வெளிக்குப் போய் வந்தவர்) தாமஸ் ஜோன்ஸ் மற்றும் அவதார்- டைடானிக் படங்களின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் அட்வைசர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


முதல் கட்டமாக ஒரு அதிக சக்தி கொண்ட டெலஸ்கோப் மற்றும் லேசர் ஆய்வுக் கருவிகள் அடங்கிய ஒரு சிறிய செயற்கைக் கோளை பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் விண் கல்லுக்கு அனுப்பவுள்ளது இந்த நிறுவனம். அடுத்து சில கனிமவியல் விஞ்ஞானிகளை நேரடியாக விண் கற்களுக்கு அனுப்பி சோதனை நடத்திவிட்டு, அடுத்த கட்டமாக கனிமங்களை தோண்டும் வேலையை ஆரம்பிக்கவுள்ளது.


பூமிக்குள் வந்து விழுந்த விண்கற்களில் சிலவற்றில் மிக அதிகளவிலான பிளாட்டினம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்று... கால்பந்தாட்ட மைதான அளவுள்ள ஒரு விண் கல்லை ராக்கெட்டுகள் மூலம் பூமிக்கு அருகே நகர்த்தி வந்து, அதில் கனிமங்களை அள்ளுவது!