சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஜி,.க்கள் , டி.ஜ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இன்றைய அதிரடி மாற்ற விவரம் வருமாறு : வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருக்கும் சைலேந்திரபாபு கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி.,யாகவும் , கரண்சின்கா ஆயுதபடை ஏ.டிஜி.பி.,யாகவும் , பிரதீப் வி.பிலிப் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாகவும் ஆர்.சி,குடவாலா நலத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
போதை தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த விஜயகுமார் ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு ஐ.ஜி.,யான எஸ் ராஜேந்திரன் அதே பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஐ.ஜி.,யாக இருக்கும் மகேஷ்குமார் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு டி.ஐ.ஜி., ஜி. வெங்கட்ராமன் ஐ.ஜி., மற்றும் ஜாயின்ட் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்
தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி., வினித் தேவ் வான்கடே அதே பிரிவில் ஐ.ஜி.,யாகவும், திண்டுக்கல் டி.ஐ.ஜி., சஞ்சய் மாத்தூர் மதுரை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் டி.ஐ.ஜி., பி.சக்திவேல் தமிழ்நாடு போலீஸ் அகடமி ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார். தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி., ஆர். ஆறுமுகம், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை போலீஸ் கமிஷனர் டி.பி. சுந்தரமூர்த்தி மேற்கு மண்டல ஐ.ஜி.,யாகவும், ஏ.கே விஸ்வநாதன் கோவை மாவட்ட போலீஸ் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார். மதுரை போலீஸ் கமிஷனராக இருக்கும் பி.கண்ணப்பன் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு சூருடை பணியாளர் தேர்வு குழு செயலாளர் ஐ.ஜி.,யாக சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
என். அருள்செல்வம் டி.ஐ.ஜி., திண்டுக்கல் டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளனர். கே சண்முகவேல் விழுப்புரம் டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஏ.எஸ்.பி.,யாக உள்ள ஜே.மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment