Sunday, April 29, 2012

அதிர்ச்சி தந்த மொபைல் கேம்ஸ்!


சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த, யு.கே.ஜி படிக்கும் என் தங்கை மகன், என்னுடைய மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து என் போனுக்கு வந்த மெசேஜ் அதிர்ச்சி அளித்தது.

இந்த கேம்ஸுக்காக 50 ரூபாய் பணம் எடுக்கப்பட்டு விட்டது. மேலும் தொடர இந்த வெப்சைட்டைப் பார்க்கவும்’ என ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. மறுநாளும் இதேபோல் இரண்டு 50 ரூபாய் என, மொத்தம் 150 ரூபாயை இரண்டே நாளில் காலி செய்திருந்தான் குட்டி. 'மொபைல் கேம்ஸ் இலவசம்தானே...’ என்று அதுவரை அசட்டையாக குழந்தைகளிடம் மொபைலைக் கொடுக்கும் பழக்கத்தில் இருந்த நான், இப்போது சுதாரித்துக் கொண்டேன்.
பொதுவாகவே பல வீடுகளிலும் பெரியவர்களின் மொபைல் போனை எடுத்துக் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், செலவில்லாமலே விளையாடுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க, காஸ்ட்லியான மொபைல் போன் டவுன்லோடு கேம்ஸை அனுமதிக்க வேண்டுமா...?

No comments:

Post a Comment