காரணம், காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெயிப்பதற்கு, தி.மு.க.-வின் தயவு தேவை.
காங்கிரஸ் கட்சியிடம் மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள எம்.பி.க்கள் மற்றும், எம.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஜெயிக்க வைக்க போதுமானதான இல்லை. வெளிக் கட்சிகள் கை கொடுத்தால்தான், காங்கிரஸின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெயிக்க முடியும்.
தி.மு.க.-விடம், மத்தியில் 18 லோக்சபா எம்.பி.க்கள், 7 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும், மாநிலத்தில் 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
அடுத்து ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆலோசிக்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அன்டனி சென்னை வந்தார். சென்னை சி.ஐ.டி.காலனி இல்லத்தில் அவரைச் சந்தித்தார் கருணாநிதி. அந்தச் சந்திப்பின்போது, கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி உடனிருந்தார்.
எமது தொடர்பாளரான தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசினோம். தி.மு.க.-வின் டில்லி விவகாரங்களுக்கு இந்த சந்திப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றார் அவர். தி.மு.க.-வின் டில்லி விவகாரங்கள் என்பதற்கு, கனிமொழியை ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிப்பது என்பதுதான் சமீபகாலமாக அர்த்தம்.
அமைச்சர் ஏ.கே.அன்டனியை, கருணாநிதி சி.ஐ.டி. காலனி இல்லத்தில் வைத்து சந்தித்தது குறித்தும், அந்த தி.மு.க. வி.ஐ.பி. ஒரு விஷயம் தெரிவித்தார்.
“காங்கிரஸ் தலைமை உதவி கேட்டு சென்னைக்கு ஆளனுப்பி தமது வீட்டுக் கதவைத் தட்டும்போது, அந்தக் கதவுகள் கனிமொழி-ராசாத்தி அம்மாள் வீட்டுக் கதவுகளாக இருக்க வேண்டும் என்று தலைவர் (கருணாநிதி) திட்டமிட்டார்.
அதனால்தான், சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்திப்பை வைத்துக் கொண்டார். ஏ.கே.அன்டனி வரும் நேரத்தில் சி.ஐ.டி. காலனியில் போய் உட்கார்ந்துகொண்ட கருணாநிதி, அந்த வீட்டில் கனிமொழியும் தன்னுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்” என்றார் எம்முடன் பேசிய தி.மு.க. வி.ஐ.பி.
இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விபரங்களை இரு தரப்பும் வெளியிடவில்லை.
கனிமொழி இல்லத்தில் கருணாநிதியையுடன் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த அமைச்சர் ஏ.கே.அன்டனி, தமது பேச்சுக்களை “fruitful discussion” என்று வர்ணித்துவிட்டு சென்றார்.
யாருக்கு “fruitful discussion” என்று விளக்கமாக சொல்லவில்லை. கருணாநிதிக்கும், கனிமொழிக்கும் என்று தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment