Friday, May 25, 2012

விஷ்ணுவின் ப்ளான்! அஜீத்துக்கும் அதுவே விருப்பம்!



அஜீத் நடித்துள்ள பில்லா-2  ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஜூன் மாதம் 15-ம் தேதி பில்லா-2 ரிலீஸாகிறது. இந்த வருடம் அஜீத் 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் பில்லா-2 ஷூட்டிங் முடிந்த சில நாட்களிலேயே அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்திற்கு தயாராகிவிட்டார் அஜித்.

மே 30-ம் தேதி முதல் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைகிறார்கள். மேலும் சிறப்பு அம்சமாக தெலுங்கு நடிகர்களை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம் இயக்குனர்.

கௌரவ வேடத்தில் நடிக்க தெலுங்கு திரைஉலகின் முன்னனி நடிகர்களான நாகார்ஜுனா, ரவி தேஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அஜீத்தின் மங்காத்தா படம் தெலுங்கிலும் வெளியாகி பிரபலமானது. இந்தப் படத்தையும் தெலுங்கில் வெளியிட ப்ளான் இருக்கிறதாம். அதனால் தான் தெலுங்கு நடிகரை நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்க ஆசைப்படுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

அஜீத்தும் அதையே தான் விரும்புகிறாராம்.அரவிந்த் சாமி, பிருத்திவிராஜ் ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்டதாகத் தெரிகிறது. அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் நடித்துக்
கொண்டிருப்பதால், அந்த படம் முடிந்த பிறகு விஷ்ணுவர்தன் படத்திற்கு கால்ஷீட் தருவதாக கூறியுள்ளாராம்.

இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா-2 என தொடர்ந்து அஜீத் நடித்த படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்.. பல லாட்ஜுகளில் உல்லாசம்!

 Two Youths Arrested Vellore Cheating Girls Via Facebook

பேஸ்புக் மூலம் இரு பெண்களுடன் பழகி அவர்களை பலமுறை லாட்ஜுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாச நிலையில் இருந்ததை படம் எடுத்து வைத்து மிரட்டியே பலமுறை அந்தப் பெண்களை இந்த வாலிபர்கள் அனுபவித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகாரில்,

நான் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அங்கு வேலை செய்யும் காயத்ரி தேவிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் காயத்ரி மூலம் எனக்கு பழக்கமானார்கள்.

கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்த்பாபு சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காயத்ரி, சதீஷ் ஒரு அறையிலும் நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம்.

அப்போது ஆனந்த் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி சத்தியம் செய்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னை வந்து விட்டோம்.

அதைத்தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வந்தோம். பிப்ரவரி மாதம் சதீஷ் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்தும் நானும் ஹோட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், காயத்திரியும் வந்துவிடுங்கள் என்றார்.

நாங்களும் சென்று அங்கு அவர்களுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம். அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வர மறுத்து விட்டேன்.

அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால் நான் பயந்து போய் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.
இந்நிலையில் காயத்ரி தேவியை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும் எனனை போல பலரை இப்படி ஏமாற்றியதும் தெரியவந்தது. எனவே ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அவருடன் காயத்ரி தேவியும் எஸ்.பி. அலுவலத்துக்கு வந்து புகார் தந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி மீண்டும் சுஜித்ராவும், காயத்ரி தேவியும் ஆனந்த்பாபு மற்றும் சதீஷிடம் பேசினர்.

அவர்களை ராணிப்பேட்டை விடுதி ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். அதை நம்பி நேற்றிரவு 9 மணி அளவில் இருவரும் நிரோத் சகிதமாக அங்கு வந்தனர். இருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் இன்னும் எத்தனைப் பெண்களை ஏமாற்றியுள்ளனரோ தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்களது மேலும் பல நண்பர்களுக்கும் பேஸ்புக் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், அவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, May 24, 2012

தேய்ந்து வளரும் நிலா


 சந்திரன் வளர்ந்து தேய்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தகவலளித்துள்ளனர். சந்திரன் ஒரு இயற்கையான செயற்கைகோள் என்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்தில் உள்ள எல்.ஆர்.ஓ. என்ற கேமரா துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காட்டியுள்ளது. முன்னதாக அப்பல்லோ- 15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம் சந்திரனில் செங்குத்தான பாறைகள் மற்றம் நிலப்பரப்பு உள்ளது தெரிய வந்தது. அவை 10 மீட்டர் உயரமும், பல கிலோ மீட்டர் நீளமும் கொண்டவையாக உள்ளன என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில, சந்திரன் மிகவும் குளிர்ச்சியானது. அவற்றின் பாறைகள் சுருங்கி விரிவடையும் தன்மை உடையது இதுபோன்ற பல தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, சந்திரன் வளர்ந்து மீண்டும் தேயக்கூடிய தன்மை வாய்ந்தது. எனவே, இது ஒரு செயல்படக்கூடிய கிரகம் தான் என நாசா விண்வெளி மையத்தின் சந்திரன் ஆய்வு குழு தெரிவித்தது. சந்திரன் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகிரி கை ஓங்குகிறது


தி.மு.க.,வில் மத்திய அமைச்சர் அழகிரியின் கை ஓங்கும் வகையில், அவரின் ஆதரவாளர்கள் 16 பேர் மீது எடுக்க இருந்த ஒழுங்கு நடவடிக்கை முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 15ம் தேதி, மதுரையில் நடந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர், வரவேற்காததால், அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு, தி.மு.க., மேலிடம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.அதற்கு, 17 பேரும் பதில் அனுப்பி இருந்தனர். சபைத் தலைவர் இசக்கிமுத்து அனுப்பிய பதில், கட்சித் தலைமைக்கு அதிருப்தியை அளித்தது. அதனால் அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மற்ற 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

விசாரணை :அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என, ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரை திருப்திப்படுத்தும் வகையில், 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதே சமயம் அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால், அழகிரி அதிருப்தி அடைவார் என்பதால், சபைத் தலைவர் இசக்கிமுத்து மட்டும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மற்ற 16 பேரின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, விசாரணை என்ற பெயரில் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன், ஸ்டாலின் வெளிநாடு சென்றிருந்தார். இந்த தருணத்தில், ஒழுங்கு நடவடிக்கை முடிவை ரத்து செய்ய வேண்டும் என, அழகிரியிடம், அவரின் ஆதரவாளர்கள் 16 பேரும் கோரிக்கை விடுத்தனர்.

அழகிரி வலியுறுத்தல்:இதையடுத்து, நேற்று முன்தினம் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை, அழகிரி சந்தித்துப் பேசியதாகவும், அப்போது தன் ஆதரவாளர்களின் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, அவர் வலியுறுத்தியதாகவும், கூறப்படுகிறது.அழகிரியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், 16 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் கிளப்பிய விவகாரம், அவர் இல்லாத நேரத்தில் சுபமாக முடிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அதிர்ச்சி - அதிருப்தி


புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் நேரடியாக போட்டியிடுகிறது. இதர கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.

இந்த நிலையில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஸ்ரீதர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ரஜினி ரசிகர்களை திரட்டி ரஜினி மன்ற பெயரிட்ட பேனர், மற்றும் கொடியுடன் ஊர்வலமாக சென்று மனுவை தாக்கல் செய்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார். ரஜினி ரசிகர்கள் மன்றம் பெயரில் புதுக்கோட்டையில் போட்டியிட ஸ்ரீதர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதை ரஜினி ஏற்கவில்லை. வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனுவை அவர் வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர்,  ’’ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஸ்ரீதர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தகவலை பத்திரிகை மூலம் அறிந்தோம். நான் அவரிடம் ரஜினி பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ மன்ற கொடியையோ பயன்படுத்தி தேர்தலில் நிற்ககூடாது என்று கூறி இருக்கிறேன்.

ரஜினி மன்ற உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நீற்கலாம். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வேலையும் செய்யலாம்.

ஆனால் அவர்கள் ரஜினி பெயரையோ, மன்ற கொடியையோ பயன்படுத்தக்கூடாது. ரசிகர்கள் அவர்களின் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பதில்தான் ரஜினி அக்கறையுடன் இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில்,   தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீதர்,  ‘’வேட்பு மனு தாக்கல் செய்தது நான் எடுத்த முடிவு அல்ல மாவட் டத்தில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களும் கூடி எடுத்த முடிவு’’ என்கிறார்.

Wednesday, May 23, 2012

புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியில் சிக்கல்! வைகோவுடன் அவசர ஆலோசனை!!


இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக முன்பு செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தனி ஈழம் வேண்டாம் என்று கூறியுள்ள கருத்து, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ.வுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் தமிழகம் வந்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமீபத்தில் இலங்கையின் சிங்கக் கொடியை அசைத்ததும், ஈழம் வேண்டவே வேண்டாம் என்று அடித்துக் கூறியதும், அக் கட்சியின் சில எம்.பி.க்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இரா.சம்பந்தனை கட்சித் தலைமையில் இருந்து அகற்றி புதிய தலைவர் ஒருவரை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.


ஸ்ரீதரன் எம்.பி. இன்று வைகோவை சந்தித்தபோது..

அது தொடர்பாக வைகோவின் ஆதரவை பெறுவதற்கே, ஸ்ரீதரன் எம்.பி. அவசர விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரியவருகிறது.

சம்பந்தருக்கு எதிரான அணி ஒன்று (ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் உள்ளன) ‘ஊடகப் போராளி’ சரவணபவன் என்பவரை தலைவராக முன்னிறுத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது தலைமைக்கு ஆதரவு கோரியே வைகோவை சந்தித்துள்ளார் ஸ்ரீதரன் எம்.பி. என்று கூறப்படுகிறது.

சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்ட எம்.பி.-யாக உள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் உரிமையாளர் இவர்தான் என்பதால், ஊடகப் போராளி என அழைக்கப்படுகிறார்.

வைகோவின் ஆதரவு கிட்டினால், ஊடகப் போராளி சரவணபவனுக்கு, நெடுமாறன், சீமான் ஆகியோரின் ஆதரவையும் திரட்ட முடியும் என அவரது குழு நம்புகிறது என்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளதாக தெரியவருகிறது. சமீபத்தில் லண்டனில் பேட்டியளித்த சரவணபவன், தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் அல்ல, இரா.சம்பந்தன்தான் என்று தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்தை அவர் வாபஸ் பெற்றால்தான், அவருக்கு ஆதரவு தரமுடியும் என்று இன உணர்வு அமைப்புகள் கூறுகின்றன.

இரா.சம்பந்தனால் கட்சிக்குள் அழைத்து வரப்பட்டவரும், சம்பந்தனின் நெருங்கிய உறவினருமான சரவணபவன் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவர் வேறு ஒரு செயல்திட்டம் வகுத்துள்ளார் என்கிறார்கள்.

சம்பந்தனை கௌரவ தலைவராகவும், தம்மை செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே ஊடகப் போராளியின் நிலைப்பாடு.

இந்த நிலையில், சரவணபவனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீதரன் எம்.பி. இன்று வைகோவை சந்தித்த அவர், தொடர்ந்தும் சில தினங்கள் தமிழகத்தில் தங்கியிருந்து, மற்றைய கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் விசிட்: டில்லி மீடியாவில் இப்போதே பரபரப்பு


முதல்வர் ஜெயலலிதா, டில்லியில் ஒரு வைல்ட்-கேம் ஒன்றுக்கு தயாராகிறார். அதற்காக ஜூன் 4-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலை வைத்து இந்த விளையாட்டை அவர் விளையாடிப் பார்க்கப் போகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸும், பிரதான எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இன்னமும் தமது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அவர்களை முந்திக் கொண்டு, காங்கிரஸுக்கு எதிரான வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் சங்மாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் லாபி செய்யத் துவங்கியுள்ளனர்.

ஜெயலலிதாவின் இந்த அதிரடி விளையாட்டு, டில்லி அரசியலில் நிச்சயமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதான கட்சிகள் இரண்டுமே வேட்பாளர் யார் என்று அறிவிக்காத நிலையில், டில்லி மீடியாக்கள் ஜெயலலிதாவின் முயற்சிக்கு எதிர்பாராத விளம்பரத்தை கொடுக்கின்றன. டில்லி அரசியலில், ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் ஜெயலலிதாவின் பெயர் நன்றாகவே அடிபடுகிறது.

இப்படியான நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜூன் 4-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது பயணம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பானதல்ல. திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை சந்தித்து தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்டு தொடர்பாகப் பேசவே முதல்வர் டில்லி செல்கிறார்.

ஆனால், டில்லியில் இருக்கும்போது, ஜெயலலிதா ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே லாபியில் ஈடுபடுவார் என டில்லி மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றன. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சங்மாவை முன்னிறுத்துமாறு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஜெயலலிதா வலியுறுத்துவார் என்று ஊகிக்கப்படுகிறது.

வழமையாக ஜெயலலிதாவின் டில்லிப் பயணங்களுக்கு மாநில அளவிலேயே டில்லி மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். மாநில விவகாரங்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ, அதைவிட அதிகமாக யாரும் கண்டுகொள்வதில்லை. அதாவது, ஜெயலலிதாவின் டில்லி விசிட்டுகள், செகன்டரி நியூஸ் என்ற கட்டகரிக்கு வெளியே வந்ததில்லை.

ஆனால் இம்முறை, ஜெயலலிதாவின் டெல்லி விசிட்டுக்கு, தேசிய அரசியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிடைக்கவுள்ளது. இந்த விளையாட்டை முதல்வர் சரியாக விளையாடினால், தேசிய அரசியலில் அவரது முக்கியத்துவம் உயரும். என்றாவது ஒரு நாள் பிரதமராகும் அவரது கனவுக்கும், இது உதவும்.

நடிகர் விபச்சாரியுடன் சிக்கியதும், உளவுத் துறையின் கைங்கார்யம்!

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் மேற்கொண்ட ‘வழமைக்கு மாறான’ உளவு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது பாலஸ்தீன நியூஸ் ஏஸென்சி WAFA (இது ஒரு காலத்தில் அரபாத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செய்திப் பிரிவாக இருந்தது). அதில் சுவாரசியமான சில விஷயங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு (2011) சவுதி அரேபியாவில், பாலைவனப் பறவை (Desert vulture) ஒன்று நகருக்குள் பறந்தபோது பிடிக்கப்பட்டது. அதன் கால்களில் பட்டி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதில், GPS ட்ரான்ஸ்மிட்டர் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்-அவிவ் பல்கலைக்கழகம் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்த GPS ட்ரான்ஸ்மிட்டரை ஆராய்ந்தபோது, இஸ்ரேலிய உளவுத்துறையின் ‘ஆபரேஷன் கோபப் பறவைகள்’ (Operation Angry Birds) என்ற உளவுத் திட்டத்துக்காக உளவு பார்க்க, பாலைவனப் பறவைகளை மொசாத் பயிற்றுவித்து, சவுதி அரேபியாவில் பறக்கவிட்ட விபரம் தெரியவந்தது.

மனிதர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதால், சவுதி அரேபியாவால் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை.

அதே ஆண்டு, துருக்கியின் இரு பிரபல சினிமா நடிகர்கள் சிக்கல் ஒன்றில் சிக்கிக் கொண்டார்கள். விபச்சாரிகளுக்கான சிவப்பு விளக்கு பகுதியில் இந்த இரு நட்சத்திரங்களும் காணப்பட்டதாக போட்டோக்கள் வெளியாகின. இரு நடிகர்களும் அதை மறுத்தனர்.

அதன்பின், இரு நடிகர்களில் ஒருவர் தனியார் துப்பறியும் ஏஜென்சி ஒன்றை அமர்த்தி இதுபற்றி விசாரிக்கவே, அந்த விவகாரமே இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் வேலை என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மொசாத்தின் கைகள் இருந்ததை துருக்கி நாட்டு உளவுத்துறையும் உறுதி செய்தது.

ஆனால், இந்த இரு நடிகர்களையும் விபச்சார விவகாரத்தில் மொசாத் சிக்க வைத்தது ஏன் என்று இன்னமும் தெரியவில்லை.

இந்த ஆண்டு துவக்கத்தில் துருக்கியில் மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. துருக்கியின் தென்-கிழக்குப் பகுதி கிராமம் ஒன்றில் ‘தேன் குடிக்கும் பறவை’ ஒன்று தரையில் வீழ்ந்து இறந்து கிடக்க காணப்பட்டது. அதன் கால்களின் மேல் பகுதியில் இரும்பு வளையம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது.

இந்த இரும்பு வளையத்தை ஆராய்ந்தபோது, அதில் இஸ்ரேல் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இரும்பு வளையத்துக்கு உள்ளே மைக்ரோ சிப் ஒன்றும் காணப்பட்டது.

இந்த சம்பவத்தின்பின், துருக்கிக்கு சீசன்தோறும் வரும் வெளிநாட்டு பறவைகள்மீது ஒரு கண் வைக்கத் துவங்கியுள்ளது துருக்கி உளவுத்துறை. ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

இஸ்ரேலின் மற்றொரு உளவுத்துறை ஐ.டி.எஃப். (IDF – Israeli Defense Forces), சைப்பிரஸ் நாட்டுக்குள் ரகசிய கமாண்டோக்களை அனுப்பியுள்ளதாக தகவல் ஒன்று லீக் ஆனது. இந்த தகவல் லீக் ஆகும் முன்னரே, இஸ்ரேலிய கமாண்டோக்கள் சைப்பிரஸ் நாட்டுக்குள் வெற்றிகரமாக புகுந்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

சைப்பிரஸ் தலைநகர் நிகோசியாவின் மையப் பகுதியின் இப்போது பெரிய அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. “சந்தேகத்துக்குரிய இஸ்ரேலியர் யாரையாவது பார்க்க நேர்ந்தால், உடனடியான போலீஸை 155 என்ற தொலைபேசி இலக்கத்தில் அழையுங்கள்” என்ற வாசகங்கள் அதில் உள்ளன!

தமது நாட்டுக்குள் மற்றொரு நாட்டு உளவாளிகள் ஊடுருவியிருப்பதை, இதைவிட வெளிப்படையான ஒரு அரசாங்கத்தால் சொல்ல முடியாது.


சசிகலாவை செமையாக விமர்சித்த பி.எச்.பாண்டியன் நிலை என்னாகும்?


சசிகலாவை முதல்வர் ஜெயலலிதா தனது தோழி பதவியிலிருந்து நீக்கியபோது அதை ஜெயலலிதா முன்னிலையிலேயே வரவேற்று, சசிகலாவை கடுமையாக விமர்சித்த பி.எச். பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது உயிர்த் தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றினார். அதன் பிறகு பி.எச்.பாண்டியனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் கொடுத்து அழகு பார்த்தார்.

அதிமுகவின் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக இருக்கும் பி.எச்.பாண்டியன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தார்.

பி.எச்.பாண்டியன், சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றவர். இவர் 1999ம் ஆண்டு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக அவரது மகன் மனோஜ் பாண்டியன் இருக்கிறார். அவர் எம்.பி.யாகவும் உள்ளார். மனோஜ் பாண்டியன் 2001ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக சேரன்மகாதேவி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பி.எச்.பாண்டியனின் மனைவி பேராசிரியை சிந்தியா பாண்டியன், தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் போயஸ் கார்டனில் அதி முக்கியத்தவம் வாய்ந்த தகவல்களையும், பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கையும் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கவனித்து வருகின்றார்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்த போது அதை வரவேற்று ஜெயலலிதா முன்பே அவர்களை விமர்சித்தவர் பி.எச். பாண்டியன். மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் விமர்சித்தார். இந்நிலையில் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவை மன்னித்து மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

தற்போது போயஸ் கார்டனில் சசிகலா மீ்ண்டும் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என அதிமுகவினர் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமஜெயம் ஸ்டைலில் கொலை

 Techie Murdered Body Wrapped Layer Of Duct Tape

பெங்களூரில் எச்.பி. நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியர் காரில் கை, கால்கள் டேப்பால் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி நுழைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கிட்டத்தட்ட ராமஜெயம் உடல் கிடந்ததைப் போலவே இவரது உடலும் டேப்பால் கட்டப்பட்டுக் கிடந்தது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீராஜ் (24), பெங்களூரில் ஐடிபிஎல் அருகே உள்ள எச்.பி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒயிட்பீல்ட் அருகே உள்ள புரூக்பீல்ட் பகுதியில் எஇசிஎஸ் லே அவுட்டில் 6வது கிராசில் வசித்து வந்தார்.

இந் நிலையில் நேற்று காலை இவர் தனது வோல்க்ஸ்வேகன் போலோ காரின் பின் பகுதியில் பிணமாகக் கிடந்தார். முகம் 4 பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டு, கழுத்தில் கவரோடு சேர்த்து பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்டிருந்தது (பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படும் டக்ட் டேப்). கிட்டத்தட்ட 20 முறை இந்த டேப் கழுத்தில் சுற்றப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும்போதே முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி டேப்பை போட்டு சுற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், அவர் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காரில் இருந்து தப்பிவிடாமல் இருக்க, அவரது கையையும் காலையும் சுமார் 50 மீட்டர் டேப்பால் சுற்றிக் கட்டியுள்ளனர். பின்னர் அவரது உடலை காரின் சீட் மற்றும் பிற பகுதிகளோடு சேர்த்து தப்பவே முடியாத அளவுக்கு டேப்பால் கட்டிப் போட்டுள்ளனர். அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாய்க்குள் துணி நுழைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கார் எஇசிஎஸ் லே-அவுட் அருகே உள்ள மாருதி லே-அவுட் பகுதியின் டி பிளாக் அருகே உள்ள ஏரியை ஒட்டிய பார்க் அருகே நின்றிருந்தது. அதாவது இவரது வீட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் கார் நின்றிருந்தது.

காரின் டிக்கியில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் இருந்தது. அந்த நீரில் தூக்க மாத்திரைகள் கலக்கப்பட்டிருந்தது.

காலையில் அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கச் சென்றவர்கள் இதைப் பார்த்துவிட்டு பொது மக்களுக்குத் தெரிவிக்கவே, போலீசாருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலில் இருந்த டேப்பை அகற்றவே போலீசாருக்கு 15 நிமிடம் பிடித்தது. அவ்வளவு சுற்று சுற்றப்பட்டிருந்தது.

ஸ்ரீராஜ் பணத்துக்காக கொலை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவரது பர்ஸ் மற்றும் விலை உயர்ந்த செல்போன் காருக்குள்ளேயே கிடந்தன. அவர் காருக்குள்ளேயோ அல்லது வீட்டிலேயோ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். காரில் இருந்த விரல் ரேகைகளையும் டேப்பில் இருந்த ரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

தூக்க மாத்திரை கலந்த நீரை குடிக்க வைத்து, மயங்கிய பின், அவரது தலையை 4 பிளாஸ்டிக் கவர்களுக்குள் நுழைத்து டேப்பைப் போட்டு கட்டி, மூச்சுத் திணற வைத்து இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீராஜின் செல்போனை போலீசார் கைப்பற்றி, அதிலுள்ள எண்களை வைத்து விசாரணையைத் துவக்கியுள்ளனர். சிவாஜிநகர் பெளரிங் மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்தது.

4 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் வந்த ஸ்ரீராஜ் முதலில் ஐபிஎம் நிறுவனத்திலும் பின்னர் எச்.பி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். ஓராண்டாக தனது நண்பர் விவேக் என்பவருடன் எஇசிஎஸ் லே-அவுட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு பன்னரகட்டா சாலையில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய ஸ்ரீராஜ் பின்னர் மீண்டும் வெளியே சென்றார் என்று, அவரது ரூம் மேட்டான விவேக் கூறியுள்ளார். இந் நிலையில் தான் நேற்று காலை அவர் பிணமாகக் கிடந்தார்.

இதனால் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை ஸ்ரீராஜ் காதலித்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு லண்டனில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டதோடு திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்துள்ளன. இதனால் ஸ்ரீராஜ் மனமுடைந்த நிலையில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

ராமஜெயமும் இதே போலத்தான் வாயில் துணி நுழைக்கப்பட்டு உடல் முழுக்க டேப்பால் சுற்றப்பட்டு கொலையாகிக் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டருக்கு 33 ஆண்டு சிறை

 Pakistan Jails Doctor Who Helped Cia Osama Bin Laden

 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.க்கு காட்டிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்த பாகிஸ்தான் மருத்துவருக்கு 33 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.

இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனின் ரத்த மாதிரியை எடுத்துக் கொடுத்து பின்லேடன்தான் என்று அமெரிக்காவிடம் உறுதி செய்து காட்டிக் கொடுத்தவர் டாக்டர் ஷகில் அப்ரிதி.

தங்களது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்பது பாகிஸ்தானின் வாதம். இதற்கு உடந்தையாக பாகிஸ்தான் மருத்துவர் இருந்தார் என்பதால் அவரை சிறையிலடைத்தது.

ஆனால் ஷகில் அப்ரிதியை விடுதலை செய்ய அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் நாட்டுக்கு எதிராக சதி செய்த வழக்கில் அப்ரிதிக்கு 33 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி முதல்வர் அதிரடி கைது

ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மாணவர்களிடம் பெருமளவில் பண வசூலில் ஈடுபட்டதாக கூறி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபலமான லயன்ஸ் பள்ளியின் முதல்வர் ராஜேந்திரனை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்ஜிஓ காலனியில் உள்ள ஸ்ரீவி லயன்ஸ் பள்ளி. இப்பள்ளியின் முதல்வராக செயல்பட்டு வருபவர் ராஜேந்திரன். கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 3000 பேர் பயில்கிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக ராஜேந்திரன் முதல்வராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஒவ்வொரு மாணவரும் பணம் தர வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. பல்வேறு போராட்டங்களும் நடந்தன.

இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இருப்பினும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கட்டாய வசூல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ராஜேந்திரனை இதில் நேரடியாக ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அவர் டிசியைக் கிழித்துக் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராஜேந்திரனை சந்தித்து நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் ராஜேந்திரன், அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து இன்று காலை ராஜேந்திரனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

தற்போது 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜேந்திரன். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தல' படத்தில் அரவிந்த்சாமி!

தல அஜீத் குமாரை வைத்து விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறாராம்.

அஜீத் குமார் அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் தான் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக இரு நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை அரவிந்த்சாமியும், பிரித்விராஜும் தான்.

மணிரத்னத்தால் திரையுலகிற்கு வந்த அரவிந்த்சாமி பிசினஸில் பிசியாகி படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள் அல்லவா. அதற்கேற்ப படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்துள்ளார்.

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இந்நிலையில் தான் அவருக்கு விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 30ம் தேதி மும்பையில் துவங்குகிறது. 

மதுரை கலெக்டர் சகாயம் திடீர் இடமாற்றம்!

 Madurai Collector Sahyam Shifted

மதுரை மாவட்ட கலெக்டராக செயல்பட்டு வந்த சகாயம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மதுரை மாவட்ட கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர் சகாயம். நேர்மையான செயல்பாடுகளுக்குப் பெயர் போனவர் சகாயம் என்பதால் அவரது செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டன.

சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகும் கூட சகாயம் தொடர்ந்து மதுரை கலெக்டராக செயல்பட்டு வந்தார். அவரது செயல்பாடுகள் மக்களால் பாராட்டப்பட்டு வந்தன. தமிழகத்தில் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் பலமுறை மாற்றப்பட்டு வந்த போதிலும் சகாயம் மட்டும் மாற்றப்படாமல் தொடர்ந்து நீடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது சகாயம் திடீரென மாற்றப்பட்டு விட்டார்.

அவரை உப்புச் சப்பில்லாத கோ ஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநராக அரசு மாற்றியுள்ளது அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளது.

மதுரை ஆதீன விவகாரம் தற்போது மதுரையில் சூடுபிடித்துள்ளது. நித்தியானந்தா மீது சரமாரியாக பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. சகாயத்திடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சகாயம் உறுதியளித்திருந்தார். இந்தப் பின்னணியில் அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை ஆதீன விவகாரம் தவிர மு.க.அழகிரியின் மகன் தயாநிதி பெயரிலான தயா சைபர் பார்க் விவகாரத்திலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார் சகாயம் என்பது நினைவிருக்கலாம்.

என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மகன் பரபரப்பு புகார்!

 இந்தியா சிமெண்ட்ஸ் அதிபரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சீனிவாசன் மீது அவரது மகன் அஸ்வின் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் அதிபராகவும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருப்பவர் என். சீனிவாசன். அவரது மகன் அஸ்வின் (48). அவர் ஓரின சேர்க்கை பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவி முகர்ஜி என்பவருடன் அஸ்வின் மும்பையில் குடித்தனம் நடத்தி வருகிறார். அவர்கள் இருவரும் கடந்த 1998 ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி மும்பையில் பார் ஒன்றில் தகராறு செய்ததாக அஸ்வினும், அவியும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள அஸ்வின் தனது தந்தை மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

அவி முகர்ஜி பைலட்டாக இருந்தார். நான் ஒரு முறை விமானத்தில் பயணம் செய்த போது எனக்கும் அவி முகர்ஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். நாங்கள் இருவரும் 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணம் எனது தந்தை சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை.

குறிப்பாக அவி முகர்ஜி மீதான என் காதலுக்கு பிறகு அவரது கொடுமைகள் அதிகமாகியுள்ளது. நாங்கள் உடலாலும் மனதாலும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளோம். 2002ம் ஆண்டு நாங்கள் சென்னைக்கு வந்த போது, எங்களை என் தந்தையின் ஆட்கள் கடத்திக் கொண்டு சென்று ஓரிடத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கினார்கள்.

சமீபத்தில் மும்பை பாரில் நாங்கள் எந்த தகராறிலும் ஈடுபடவில்லை. நானும் அவியும் பாரில் இருந்தபோது 12 போலீசார் திடிரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் அவியை கடுமையாகத் தாக்கினர். நான் சத்தம் போட்ட பின்பு எங்களை அவர்கள் கைது செய்து பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் எங்ளை தாக்கினார்கள்.

எனது தந்தையால் எனக்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம். அவர் தனது என்.ஆர்.ஐ. அந்தஸ்தை முறைகேடாக பயன்படுத்தி நிதி முறைகேடுகளை செய்து வருகிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும் போது வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

அஸ்வின் புகார் குறித்து அவரது தந்தை சீனிவாசன் இதுவரை விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. அஸ்வினின் இந்தப் புகாரால் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ரீமேக் விஜய்யின் அடுத்த குறி

Annamalai


கொஞ்ச நாட்களாக ரீமேக் ஜூரம் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது ரசிகர்களை. அதுவும் ரஜினி படத்தை திரும்பி எடுக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அத்தனை முன்னணி நடிகர்களும். பில்லா- ஒன்றாகி, ரெண்டாகி அதுவும் ஹிட் என்றால் மூன்றாகும் போல் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் பாட்ஷா, அண்ணாமலை என்று அவரது படங்களை குறி வைத்து அலைய ஆரம்பித் திருக்கிறார்கள் ஹீரோக்கள்.

அண்ணாமலை படத்தின் ரீமேக்தான் விஜய்யின் அடுத்த சாய்சாக இருக்கிறது. இதற்காக ரஜினியை நேரில் சந்தித்து தனது ஆசையை நிறைவேற்றும்படி கேட்கப் போகிறாராம் விஜய்.

இப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இப்படத்தில் ஹன்சிகா இருக்க வேண்டும் என்பதை மட்டும் இப்பவே முடிவு செய்துவிட்டாராம்.

அஜீத், விக்ரம், தொடர்ந்து... விஜய் படத்திலும் லட்சுமிராய்

Laxshmi Rai

ஆறடி உயர ஓவியமாக அலட்டிக் கொள்ளாமல் திரிகிற லட்சுமிராய்க்கு ஒரே ப்ளஸ் பாயிண்ட் மில்லி மீட்டர் கூட தன் எடையை கூட்டவில்லை, குறைக்கவில்லை என்பதுதான். 'எப்படிங்க இப்படியெல்லாம்' என்று சக நடிகைகளே ட்யூஷன் எடுத்துக் கொள்கிற அளவுக்கு தங்க தகடாக திரிகிறார்.

இந்த தகட்டை டாலராக மாட்டிக் கொள்ளதான் திடீர் பிரியம் காட்டுகிறார்கள் டைரக்டர்களும். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. திடீரென்று மும்பையில் செட்டில் ஆகி, முழு பணக்காரியாக திரும்பியிருக்கும் ராய், இனிமேல் பணத்திற்காக நடிப்பதை விட புகழுக்காக நடிப்போமே என்று முடிவெடுத்திருப்பதுதான்.

ஹால்மார்க் இயக்குனர்களை கையோடு அழைத்துச் சென்று நட்சத்திர ஓட்டல்களில் மூக்கு முட்ட விருந்து கொடுக்கிறார் இப்போதெல்லாம். பில் லட்சுமிராய்க்கும், ஃபுல் இயக்குனர்களுக்கும். பட் இந்த டீல் ரொம்ப புடிச்சுருக்கு என்று வழியும் இயக்குனர்கள்தான் போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்பு தரவிருக்கிறார்கள் லட்சுமிராய்க்கு.

இது ஒருபுறம் இருக்க, அஜீத்துடன் மங்காத்தாவில் நடிச்சாச்சு. அப்படியே விஜய் கூடவும் நடிச்சிட்டா ஜென்ம சாபல்யம் அடைஞ்ச மாதிரிதான் என்று நினைத்தார் லட்சுமி. தாண்டவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அப்பட இயக்குனர் விஜய்யிடம் சார், நீங்க அடுத்ததா இயக்கப் போகும் இளைய தளபதி விஜய் படத்தில் எனக்கும் ஒரு ரோல் வேணும் என்றாராம்.

அரை மயக்கத்துல கெடக்குற கோழி மூக்குல சோழி மாட்டுறதா கஷ்டம்? சரின்ன்னு சொல்லி சம்மதிச்சிருச்சாம் கோழி!

நம்பர் ஒன் நடிகையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மணிரத்னத்தின் ‘கடல்’, கவுதம் வாசுதேவ் மேனனின், ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘நான் ஈ’ படங்களில் நடித்து வரும் சமந்தா கூறியதாவது: சினிமாவுக்கு வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. இந்த வருடம் நான் நடித்து எட்டு படங்கள் வெளியாகின்றன. இதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளேன். அறிமுகமானபோது இவ்வளவு வாய்ப்புகள் வரும் என்று நினைக்கவில்லை. குறுகிய காலத்திலேயே பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தது எனது அதிர்ஷ்டம்தான். பெரும்பாலான நடிகைகளை நம்பர் ஒன் என்கிறார்கள். எத்தனை நம்பர் ஒன்கள் சினிமா துறையில் இருக்க முடியும்? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த நம்பர்கள் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால் இதில் நம்பிக்கை இல்லை. அதிகமான படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். எத்தனை படங்கள், யார் ஹீரோ என்பதையெல்லாம் இப்போது சொல்ல இயலாது. அந்த படங்களின் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்.
‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நித்யா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த கேரக்டர் என் மனசுக்கு நெருக்கமானது. ஸ்கூல், கல்லூரி அதற்கு அடுத்த காலகட்டங்களில் நடக்கும் காதல் கதை இது. இந்தப் படத்தை பார்த்த பிறகு எல்லோருமே தங்கள் வாழ்க்கையை அந்த கேரக்டரோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதே போல ‘நான் ஈ’ படத்திலும் என் கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு சமந்தா கூறினார்.

ஏமி ஜாக்சனின் டைவிங் சாகசம்!


’மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகை ஏமி ஜாக்சனை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் விஜய். தற்போது விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‘தாண்டவம்’ படத்திலும் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். தாண்டவம் ஆக்‌ஷன் படம் என்பதை, படத்தின் விளம்பர போஸ்டர்களே நிரூபிக்கின்றன. 

ஆனால் ஹீரோவின் ஆக்‌ஷனை விட இப்போது பரபரப்பாக பேசப்படுவது ஹீரோயின் ஆக்‌ஷன் தான். தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்துவருகிறது. லண்டனில் உள்ள மிக உயர்ந்த அடுக்கு மாடிக்கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சியில் ஏமி ஜாக்சன் நடித்திருப்பதாக தெரிகிறது. ’ஸ்கை டைவிங்’கில் ஏமி ஜாக்சன் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கியிருக்கிறாராம். ஏமி ஜாக்சனின் இந்த சாகசத்தை பார்த்து இயக்குனர் விஜய் அவரை பாராட்டியுள்ளார். 

ஏமி ஜாக்சனை பற்றி அறிந்து அவரது திறமையை வெளிக்காட்டிவிட்டார் இயக்குனர் விஜய். ஏமி ஜாக்சனிடம் இன்னும் என்னனென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கிறதோ!

ஆண் நண்பர்களுக்கு ஆசைப்பட்ட மகளை கொலை செய்து வீசியெறிந்த பெற்றோர்

ஷாபிலியா அகமது என்ற அந்த சிறுமி கொலைசெய்யப்பட்டு கும்ப்ரியா அருகே ஆற்றில் வீசப்பட்டார். 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. பின்னர் 5 மாதங்கள் கழித்து அவரது உடல் கைப்பற்றப்பட்டது.


7 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கில் மர்மம் நீடித்துவந்தது. எனினும் அக்டோபர் 2010-ல் அந்த சிறுமியின் சகோதரி அலீஷா போலீசிடம் இதுகுறித்து தெரிவித்த பின்னர் இந்த கொலையில் இருந்த மர்மம் விலகியது.








தற்போது 23 வயதாகும் அலீஷாவுக்கு கொலை நடந்த போது 15 வயது. அவர் அளித்த சாட்சியத்தின் அடிப் படையில்தான் இந்த கொலையின் மர்மமுடிச்சு அவிழ்ந்தது என பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.


ஷபீலியா நிறைய ஆண்நண்பர்கள் வைத்துக் கொள்வதும், மேற்கத்திய கலாச்சாரப்படி ஆடைகள் அணிவதும் அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த சிறுமியை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துவைக்க முயன்றனர்.

ஆனால் அவர் விஷம் குடித்துவிட்டார். இதையடுத்து மீண்டும் பிரிட்டனுக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தனர்.

அதன்பிறகு வாஷிங்டனில் உள்ள தங்களது வீட்டில் வைத்து ஷபீலியாவைக் கொலைசெய்து ஆற்றில் வீசிவிட்டனர்.எனினும் இந்த கொலைக்குற்றச்சாட்டை ஷபீலியாவின் பெற்றோர் மறுத்துள்ளனர்.




Tuesday, May 22, 2012

முதல்வர் கார் மீது கல்வீச்சு

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் சேவா யாத்ரா என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூக்சார் என்ற இடத்தில் மர்ம நபர்கள் சிலர் நிதிஷ்குமாரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் நிதிஷ்குமார் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பீகார் அரசு தெரிவித்துள்ளது. 

2ஜி ஸ்பெக்ட்ரம், சத்யத்தை அடுத்து ரீபோக் இந்தியாவில் 8,700 கோடி ரூபாய் ஊழல்


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தை மட்டுமல்லாது நாட்டையே கலக்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடர்ந்து தனியார் நிறுவனமான ரீபோக் ஷூ நிறுவனத்தில் அதிகாரிகள் இரண்டு பேர் ஊழல் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஷூ நிறுவனம்: வெளிநாட்டு நிறுவனத்தை சேர்ந்த ஷூ நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரீபோக் என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் வகை ஷூக்களை தயாரித்து ஆண்டு ஒன்றிற்கு சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கூர்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து ஷூக்களை உற்பத்திசெய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாண் இயக்குனராக பணி புரிந்து வந்‌தவர்‌ சுபீந்தர் சிங் பிரேம் . மற்றும் தலைமை செயல் இயக்குனராக இருந்தவர் விஷ்ணுபகவத். இவர்கள் இருவரும் இணைந்து ரகசிய கு‌டோன்களை உருவாக்கி நிறுவனத்திற்கு எதிராக சுமார் எட்டாயிரத்து 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ஊழல் குறித்து கூர்கான் போலீஸ் ஸ்டேஷனில் ‌பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யபட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் இந்திய இயக்குனர் ஷாகி்ன்பத் கூறுகையில் கடந்த ஜனவரி மாதத்தில் இவர்கள் மீதான புகார் குறித்து நிர்வாக ரீதியாக கண்‌காணிக்கப்பட்டு வந்தது.கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிறுவனத்திற்கு எதிராக கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில் இவர்கள் இருவரும் இணைந்து நான்கு இடங்களில் போலியான ரகசிய குடோன்கள் அமைத்து செயல்பட்டு வந்துள்ளது உண்மை என கண்டறியப்பட்டவுடன் அவர்கள் பணி நீக்‌கம் செய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

ரீபோக் நிறுவனம் மூலம் நாடுமுழுவதும் ரீடெயில் கடைமற்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 40 ஆயிரத்திற்கும் ‌ மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல்தொழில் நுட்பத்துறையில் ஈடுபட்டு வந்ததனியார் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 14 ஆயிரம் ‌கோடிரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றது குறிப்பிடத்தக்‌கது .

பூட்டிய அறைக்குள் இளம்பெண்ணுடன் இருந்த சாமியார் சிக்கினார்

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் மாவ்டி கிராமத்தில் சுவாமி நாராயண் குருகுலம் உள்ளது. இந்த குருகுலத்தை ஆனந்த் சுவரூப தாஸ் என்ற 32 வயது துறவி நடத்தி வந்தார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, குருகுலத்தில் பூட்டிய அறைக்குள் ஆனந்த் சுவரூப தாஸ் ஒரு பெண்ணுடன் இருப்பதாக போலீசுக்கு புகார் சென்றது.




போலீசார் உடனடியாக சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் பூட்டிய அறைக்குள் இருந்த துறவி யையும், இளம்பெண்ணையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு பிடித்துச்சென்றனர். அங்கே கூடிய பொதுமக்களும், மாணவர்களும் அவர்களை சரமாரி தாக்கினர்.

துறவியுடன் சிக்கிய இளம்பெண், விசவடார் என்ற இடத்தில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் வேலை செய்து வந்தவர் என தெரிய வந்துள்ளது.


துறவியுடன், இளம் பெண் சிக்கிய விவகாரம் ராஜ்கோட் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 கோடி செலவில் செட் :அறிமுகமாகும் பிரமாண்ட தமிழ்ப் படம்

 6 கோடி செலவில் செட் : பாலகிருஷ்ணா அறிமுகமாகும் பிரமாண்ட தமிழ்ப் படம்

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பாலகிருஷ்ணா, நடித்த 'ஸ்ரீ ராமராஜ்யம்' படம் தமிழில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில் அவர் நடிக்கும் நேரடி தமிழ்ப் படமான 'வருவான் தலைவன்' போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

தெலுங்கு சினிமாவின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான மோகன் பாபுவின் மகள் மஞ்சு லக்ஷ்மி பிரசன்னா தயாரிக்கும் இப்படத்தில் அவருடைய மகன் மனோஜ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'என்னைத் தெரியுமா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோவாக பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (மே 21) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணா, தமிழில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

'எங்கப்பா என்டிஆர் காரு அடிக்கடி என்னை வளர்த்தது தமிழ்நாடுதான். தமிழ்நாட்டு தண்ணியை குடிச்சிதான் நான் வளர்ந்தேன். அந்த தமிழ்நாட்டுக்கு என்ன பண்ண போறேன்னு? சொல்லிட்டு இருப்பாரு. இப்போ நாங்க தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுத்துட்டோ ம். இந்தப் படத்தை எடுக்கும்போது மோகன் பாபு ரொம்ப செலவு ஆகும் என்றார். ஆனால், அவர்களோட பசங்க பரவாயில்லை ஒரு நல்ல படத்தை எடுத்தால் போதும் என்று இந்த படத்தை எடுத்தார்கள். பணத்திற்காக அவர்கள் இந்தப் படத்தை எடுக்கவில்லை. ஒரு சிறப்பான பெரிய படத்தை எடுக்க வேண்டும் எனபதற்காகவே இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்." என்றார்.

'வருவான் தலைவன்' நிகழ்காலத்தையும், வரலாற்று கதையையும் கலந்து சொல்லும் திரைக்கதை. இப்படத்திற்காக 'கந்தர்வ கோட்டை' என்ற ஒரு அரண்மனையை செட் போட்டிருக்கிறார்கள். 6 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டிருக்கும் இந்த அரண்மையின் பிரமாண்டத்திற்காகவே இப்படத்தை ஒரு முறை பார்த்து விடலாம்.

இப்படத்தை தயாரிக்கும் மஞ்சு லஷ்மி பிரசன்னா இதில் முக்கிய வேடம் ஒன்றிலும் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சுஹாசினி மணிரத்னம், பிரபா, சார்லி, இளவரசு, மனோ பாலா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சேகர் ராஜா இயக்குகிறார்.

விஜய் இல்லை


சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த 'பகவலன்' படத்தில் இருந்து விஜய் விலகிவிட்டார். இதனால், 'பகலவன்' படத்தில்  யார் நடிப்பார்கள் என்பது குறித்து கோலிவுட்டில் அலசப்பட்டு வருகிறது.

" மத்திய அரசிற்கு எதிராக பேசி நான் சிறைக்கு சென்று விட்டதால் என்னால் 'பகவலன்' படத்தினை குறித்த நேரத்தில் துவங்க இயலாமல் போனது.  விஜய்யும் அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி விட்டார் " என்று தெரிவித்து இருக்கிறார் சீமான்.

'பகவலன்' படத்தின் நாயகன் யார் என்பது குறித்த கேள்விக்கு " அப்படத்தில் நடிக்க விக்ரமிடம் பேசினேன். வெவ்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் நடிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார்.

நாயகன் வேடத்திற்கு ஆர்யா,விஷால் மற்றும் ஜீவா உள்ளிட்டவர்களில் ஒருவர்  பொருத்தமாக இருப்பார். ஜீவா அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

இந்த நாயகர்களில் ஒருவராது நடிக்க ஒப்பந்தமாகி 'பகலவன்' படம் துவங்கினால் சரி தான்!

தென் மாநிலங்களில் மின்வெட்டு அபாயம்


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) கடந்த 30 நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாய நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக என்எல்சி விரிவாக்கம் செய்தபோது படிப்படியாக கடந்த 20 ஆண்டில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு நிலக்கரி வெட்டும் பணி, கண்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை எடுத்து சென்று மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லுதல் மற்றும் ஆபரேட்டர் பணியாகும்.

இவர்கள் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம், என்எல்சி ஒப்பந்த தொமுச, ஒப்பந்த பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ ஒப்பந்த சங்கம் என பல்வேறு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் 5 ஆயிரம் உறுப்பினர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்ப்பது, படிப்படியாக பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி 2010ம் ஆண்டு 39 நாள் தொடர் போராட்டம் நடத்தினர். மீண்டும் டெல்லியில் நடந்த முத்தரப்பு பேச்சில் முடிவு எட்டப்பட்டது. 2 வருடத்தில் 480 நாட்கள் பணி முடித்த அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என மீண்டும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றக்கோரி பல கட்ட போராட்டங்களை ஒப்பந்த தொழி லாளர் சங்கத்தினர் போ ராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போது பல கட்ட பேச்சு தோல்வியில் முடிந்து, போராட்டம் 30வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே என்எல்சி நிர்வாகம், தற்காலிகமாக புதிய தொழிலாளர் களை பணியில் ஈடுபடுத்தி யது. பணியில் போதிய அனுபவம் இல்லாததால் இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். நிரந்தர ஊழியர் தொழிற் சங்கமும் போராட்டத்தில் குதித்து உள்ளதால் என்எல்சியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.

லட்சம் டன் நிலக்கரி காலி: ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போது ஒரு லட்சம் டன் நிலக்கரி இருப்பில் சேமித்து வைக்கப்பட்டது. தினமும் 6 ஆயிரம் டன் முதல் 10 ஆயிரம் டன் வரை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால் அனைத்து காலியாகி விட்டது.  தற்போது நிரந்தர தொழிலாளர்களை கொண்டு நிலக்கரி வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கவில்லை என என்எல்சி நிர்வாகம் கூறியுள்ளது. திடீரென மழை பெய்ததால் சுரங்கத்தில் நீர் சேர்ந்து மின்வெட்டும் பணி பாதிப்பாகும். ஆனால் நெய்வேலியில் கோடை மழையும் பெய்யவில்லை.

2490 மெகாவாட் உற்பத்தி: நெய்வேலி முதல் அனல்மின் நிலையத்தில் இருந்து 600 மெகாவாட், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் இருந்து 420 மெகாவாட், 2ம் அனல்மின் நிலையத்தில் இருந்து ஆயிரத்து 470 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி அனைத்தும் பெங்களூர் மத்திய தொகுப்புக்கு(கிரீடு) சென்று அங்கிருந்து தென் மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.  போரா ட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தென் மாநிலங்களுக்கு வினியோகம் தடை படும் அபாய நிலை ஏற்படும் சூழல் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

சர்வதேச பட விழாவுக்கு ‘3’ படம் தேர்வானது


தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த ‘3’ படம் சமீபத்தில் ரிலீசானது. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் இப்படம் வந்தது. ‘3’ படத்துக்கு எதிர்பார்த்த வசூல் இல்லாததால் நஷ்டமடைந்து விட்டதாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டிகுமார் குற்றம் சாட்டினார். போலீசிலும் புகார் செய்தார்.

இந்த சர்ச்சையால் மனம் உடைந்து இருந்த ஐஸ்வர்யாவுக்கு ‘3’ படம் நியூயார்க்கில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விழாவில் ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட மேலும் சில தமிழ் படங்களும் திரையிடப்படுகிறது. திரைப்பட விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா நியூயார்க் செல்கிறார். அவர் கூறியதாவது:-

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் ‘3’ படம் திரையிடப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புது இயக்குனரான என்னை அவ்விழாவில் கவுரவிக்க இருக்கிறார்கள். சர்வதேச அளவுக்கு ‘3’ படம் போய் இருப்பது பெருமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஃபேஸ்புக்கில் ஆசிரியைகளை விலைமாதுகளாக சித்தரித்த மதுரை மாணவன்


மாணவி ஒருவர் சரியாக படிக்காததால் அவரைக் கண்டித்த ஆசிரியைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போட்டு தேவைக்கு அழைக்கலாம் என்று விளம்பரம் செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்தவர் சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதாகவும், ஒழுங்காக படிப்பதில்லை என்றும் கூறி ஆசிரியை ஒருவர் அவரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தியா அந்த ஆசிரியை பழிவாங்க தீர்மானித்தார். இது குறித்து அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் தனது ஆண் நண்பரிடம் தெரிவித்தார். பள்ளி சுற்றுலா சென்றபோது தனது செல்போனில் எடுத்த போட்டோக்களில் தன்னை கண்டித்த ஆசிரியை மற்றும் இன்னொரு ஆசிரியையின் போட்டோக்கள் உள்ளன என்று சந்தியா தெரிவித்துள்ளார்.

உடனே அந்த மாணவன் அந்த 2 ஆசிரியைகளின் போட்டோக்களையும் வாங்கி தேவைக்கு அழைக்கலாம் என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த ஆசிரியைகளின் இமெயில் முகவரிகளையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த மாணவரை நேற்று கைது செய்தனர்.

மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது


விழுப்புரம் மாவட்டத்தில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்த 58 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

வி்ழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 58 வயது மூதாட்டி தனது 65 வயது கணவருடன் நேற்று காலை 9 மணி அளவில் வந்தார். வயிறு வலிப்பதாகவும், அதனால் மருத்துவரை காண வந்ததாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார். அப்போது மருத்துவர் அங்கு இல்லாததால் அவர் வரும் வரை இருவரும் காத்திருந்தனர்.

அப்போது மூதாட்டி கழிவறைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் தான் கர்ப்பமாக இருந்த விஷயமே தெரியாது என்றும், வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்ததாகவும் தெரிவித்தார்.

மூதாட்டிக்கு குழந்தை பிறந்த விவரம் அறிந்ததும் அவரது கணவர் ஆட்டோவை அழைத்து வர சென்றார். மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றுள்ளது பற்றி அறிந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த குழந்தையை தனக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்குள் ஆட்டோவுடன் வந்த முதியவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிவிட்டார். அந்த வயதான தம்பதி யார், எந்த ஊர் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் செஞ்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

இரு ரயில்கள் மோதி, தீப் பிடித்து 25 பேர் பலி


ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த கோர விபத்தில் பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹம்பி எக்ஸ்பிரஸ், பென்னிகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில், 25 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.

இந்த ரயிலில் இருந்தவர்கள் ஹூப்ளியிலிருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அதிகாலை 3.15 மணியளவில் பென்னிகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஹம்பி எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனற். 3 பெட்டிகள் விபத்து காரணமாக தடம் புரண்டுள்ளன. அதில் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்து விட்டது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

சிக்னலைக் கவனிக்காமல் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் டிரைவர் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Monday, May 21, 2012

போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் கைது!

மகாராஷ்டிராவின் ஜல்காவோன் பகுதியில் 11 ஆயிரம் குறைந்த விலை வீடுகள் கட்டப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் குலப்ராவ் தியோகர் கைது செய்யப்பட்டார்.

1995 2000 க்கு இடைப்பட்ட காலத்தில் ஜல்காவோன் மாநகராட்சி கவுன்சிலில் தியோகர் உறுப்பினராக இருந்தார். அவரை இந்த ஊழல் தொடர்பாக விசாரணைக்கு வரும்படி ஜில்லா பீத் போலீஸார் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி வந்த அவர் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள போலீஸ் திட்டம்


என்னை போலியான என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறி ஒரு மனுவை சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சசிகலாவின் கணவர் நடராஜன் தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில் மத்திய மண்டல ஐஜியான அலெக்சாண்டர் மோன், சரக டிஐஜி அமல்ராஜ் மற்றும் 13 காவல்துறை அதிகாரிகள் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நில அபகரிப்பு வழக்கில் கைதான நடராஜன் தற்போது ஜாமீனி்ல் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வந்து நீதிபதி நசீர் முகம்மதுவிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில்,

தஞ்சாவூர் போலீசார் தவறான புகாரின் பேரில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்தவர் தற்போது வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனால் போலீசார் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டனர்.

என்னை போலி என்கவுண்ட்டர் மூலம் கொலை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். திருச்சி சிறைக்கு என்னை வேனில் கொண்டு செல்லும்போது வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டில் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து என்கவுண்டர் நடத்த திட்டமிட்டனர்.

எனவே நான் குற்றம் சாட்டியுள்ள போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் நடராஜன்.

இந்த மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.

கார்த்திகாவின் ரோல்மாடல் த்ரிஷாவாம்...!


தமிழில் கோ படம் மூலம் கதாநாயகியாக அவதரித்தவர் மாஜி நாயகி ராதாவின் மகள் கார்த்திகா. இவர் இப்போது பாராதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு, "தம்மு படத்தில் நடித்தபோது, த்ரிஷாவுடன் நெருங்கி பழகியது மட்டுமன்றி, அவரிடம், சில நடிப்பு நுட்பங்களையும் தெரிந்துகொண்டதாக சொல்கிறார், "கோ பட நாயகி கார்த்திகா. அதனால், சினிமாவில் பத்து ஆண்டு கால நடிகையான த்ரிஷாவை, இனி என் ரோல்மாடலாக கொண்டு பயணிக்கப் போகிறேன் என்கிறார் கார்த்திகா.

என்னுடன் நடித்தால் சீக்கரமே கல்யாணமாகிவிடும்: தமன்னா


tamanna_007
தமன்னாவுடன் நடிக்கும் நாயகன்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று திரையுலகில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கொலிவுட்டில் வெற்றிப்படங்களை கொடுத்த தமன்னா, தற்போது டோலிவுட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அங்கு சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமான தமன்னா, அவர்களிடம் விசாரித்தே அங்குள்ள இளம்நாயகர்களுடன் நடிக்கின்றார்.
இந்நிலையில் தமன்னாவை பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு கல்யாண ராசியாம். அதாவது, அவருடன் ஜோடி சேரும் திருமணமாகாத நாயகன்களுக்கு விரைவில் திருமணமாகி விடுகிறதாம்.
இதை அவரே பெருமையாக செல்லி வருகிறாராம். என் கூட நடிக்கும் நாயகர்களுக்கு திருமணமாகிவிடும் என்று கூறுகிறாராம்.
கார்த்தி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் ஆகியோர் தன்னுடன் நடித்தவுடன் அவர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
அவர் அண்மையில் நடித்து வெளிவந்த ரச்சா பட நாயகன் ராம் சரண் தேஜாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வேட்பாளருடன் தேமுதிக வேட்பாளர் : ஜெயலலிதாவிடம் புகார்

புதுக்கோட்டை அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டமான் நேற்று மதியம் ஆலங்குடி ரோட்டில் உள்ள ஒரு சர்ச் முன்பு நின்று கொண்டு சர்ச்சுக்கு வந்து போகும் மக்களிடம் வாக்கு சேகரிக்க தனது கட்சிகாரர்களுடன் வந்திருந்தார். அப்போது அதே இடத்திற்கு தே.மு.தி.க வேட்பாளர் ஜாகிர் உசேனும் வாக்கு சேகரிக்க வந்தார்.

அந்த நேரத்தில் இரு வேட்பாளர்களும் கைகுலுக்கி கொண்டு வாழ்த்து சொல்லி கொண்டனர். அதன் பிறகு இருவரும் எதிர் எதிர் திசைகளில் நின்ற கொண்டு சர்ச்சிலிருந்து வெளியே வரும் பொதுமக்களிடம் வாக்குகளை கேட்டனர்.

இதையறிந்த சில அ.தி.மு.க வினர், அ.தி.மு.க வை தொடர்ந்து விமர்சனம் செய்யும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கட்சி வேட்பாளருடன் அ.தி.மு.க வேட்பாளர் கை குலுக்கி பேசிக் கொண்டார். எதிர் அணி வேட்பாளருடன் எப்படி பேசலாம் என்று கட்சி தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

இன்னும் வேட்பு மனு கூட தாக்கல் செய்யாத நிலையில் இப்படி ஒரு புகார் சென்றிருப்பது பற்றி அ.தி.மு.க வினர் இந்த பிரச்சணையால் கட்சி தலைமை, வேட்பாளரை மாற்ற கூட செய்யலாம் என்கின்றனர் சிலர். இந்த சந்திப்பில் என்ன தவறு இருக்கிறது என்கின்றனர் சிலர்

Saturday, May 19, 2012

முக்கிய தீவிரவாதி சென்னையில் கைது: மாறுவேடத்தில் சுற்றிவளைத்து பிடித்தது போலீஸ்


மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் என சொல்லப்படும் நபர் நேற்று சென்னையில் பிடிபட்டார். மாறுவேடத்தில் ஒரு வீட்டை சுற்றிவளைத்த போலீசார் அதிரடியாக புகுந்து அவரை கைது செய்தனர். எனினும், அவரது மனைவியும் தேடப்பட்டு வந்த தீவிரவாதியுமான இளம்பெண் எப்படியோ தப்பிவிட்டார். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் விவேக், மத்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் விவேக்கை மேல் விசாரணைக்காக தேனி மாவட்டத்துக்கு அழைத்து செல்கின்றனர். மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தேடுதல் வேட்டையும் கெடுபிடிகளும் தீவிரம் அடைந்துள்ளதால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தமிழகத்தில் களம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை வேகமாக செய்து வருவதாக தமிழக போலீசுக்கு மத்திய உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் மாநிலம் முழுவதும் குறிப்பாக காட்டு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். உளவுத்துறையின் சிறப்பு பிரிவு ஐஜி ஆபாஷ்குமார், கியூ பிரிவு எஸ்பி சம்பத்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு தொடர்ந்தது.

இந்த நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பின் தமிழக தலைவர் என கூறப்படும் விவேக் (எ) பாலன் (எ) குமார் (45) ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் சென்னை செனாய் நகருக்கு வந்திருப்பதாக கியூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. உஷாரான தனிப்படை போலீசார் மாறுவேடம் அணிந்து செனாய் நகரில் ஒரு இடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக உள்ளே புகுந்து  விவேக்கை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ‘நான் மாவோயிஸ்ட் தலைவர் இல்லை; இன்னமும் சொல்லப்போனால் என் பெயரே விவேக் இல்லை‘ என்று கூறியிருக்கிறார். ஆனால் போலீசார் தங்கள் பாணியில் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்தான் விவேக் என்பது உறுதியானது. கடந்த 2007ம் ஆண்டில் பெரியகுளம் பகுதியில் காட்டுக்குள் பல இலைஞர்களுக்கு தீவிரவாத பாடம் நடத்தி ஆயுத பயிற்சி அளித்தது விவேக்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அப்போது தகவல் தெரிந்து போலீசார் காட்டுக்குள் புகுந்தபோது விவேக் தப்பி ஓடிவிட்டார். சுந்தரமூர்த்தி என்பவர் மட்டும் சிக்கினார். அதிலிருந்து விவேக்கை தேடி வருகின்றனர். முன்னதாக 2004ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு முகாம் நடத்தி ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்து அந்த இடத்தை போலீசார் சுற்றிவளைத்தபோது தீவிரவாதிகள் துப்பாக்கி களால் சுட்டு சண்டை போட்டனர். அந்த மோதலில் சிவா (எ) பார்த்திபன் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்மா என்ற இளம்பெண் உட்பட பல தீவிரவாதிகள் காயங்களுடன் தப்பிவிட்டனர். அதன் பிறகு பத்மாவை விவேக் திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. சென்னைக்கு அவர்கள் இருவரும் வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததும், அவர்களை உயிருடன் பிடிக்க ரகசியமாக திட்டம் தீட்டினர். ஆனால் விவேக் மட்டும் சிக்கினாரே தவிர இந்த முறையும் பத்மா தப்பிவிட்டார். பெரியகுளம் நீதிமன்றத்தில் விவேக்குக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரை அங்கு ஆஜர்படுத்த வேண்டும். மத்திய உளவுத்துறை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட விவேக் உடனடியாக தேனிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறார். ஈவு இரக்கம் இல்லாமல் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர்களையும் எம்எல்ஏக்களையும் கடத்திச் சென்று பேரம் பேசும் மாவோயிஸ்ட் அமைப்பு தமிழகத்தில் காலூன்ற ஏற்பாடு செய்யும் தகவலால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரவி தேஜா படத்தில் இருந்து த்ரிஷா திடீர் விலகல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரவி தேஜா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட த்ரிஷா, திடீரென்று விலகிவிட்டார். டோலிவுட் ஹீரோ ரவி தேஜா நடிக்கும் புதிய படம் ‘சார் ஒஸ்தாரா’. இந்த படத்துக்காக ஹீரோயின் தேர்வு வேலையில் மும்முரமாக இருந்தார் இயக்குனர் பரசுராம். இந்நிலையில், த்ரிஷாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யும்படி ரவி தேஜா சிபாரிசு செய்தாராம். இதையடுத்து த்ரிஷாவை சந்தித்த இயக்குனர், அவரிடம் கதை சொன்னார். கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்த த்ரிஷா, கால்ஷீட்ஒதுக்கி தந்தார். இந்நிலையில், ரவி தேஜா படத்தில் இருந்து விலகுவதாக த்ரிஷா நேற்று திடீரென்று அறிவித்தார். ‘ஒப்புக்கொண்ட படத்தில் இருந்து விலகியது ஏன்’ என்று கேட்டபோது, ‘‘இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மைதான். இதற்காக தேதிகள் ஒதுக்கி கொடுத்தேன். ஆனால், தற்போது கால்ஷீட் தேதி மாற்றி கேட்கிறார்கள். அதை ஏற்றால் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டிருந்த படங்களின் கால்ஷீட்டில் பிரச்னை ஏற்படும். அதனால் ரவி தேஜா படத்தில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்றார். இதையடுத்து காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய இயக்குனர் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

அஜித் ரெடி!


ரஜினியும் கமலும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள்? , அஜித்தும் விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பர்கள்? என்பது இதுவரையிலும் கேள்விக்குறியை தாங்கியபடியே நிற்கின்றன.

ரஜினியும் கமலும் இணைந்து அபூர்வ ராகங்கள், அலிபாபாவும் அற்புதவிளக்கும், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் அஜித்தும் விஜய்யும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. இப்போதைய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக அஜித், விஜய் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அஜித், விஜய் இருவரும் ரஜினி, கமல் சொல்வது போல் கதை எனக்கும், அவருக்கும் பிடித்து நேரமும் கூடிவந்தால் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகின்றனர்.

கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்கை கையில் எடுத்திருப்பவர், அஜித்தை வைத்து அமராவதி படம் எடுத்த இயக்குனர் செல்வா தான். ரஜினி, கமல் நடித்திருந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் செல்வா.

தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி முதல் படத்தையே வெற்றியடையச் செய்த இயக்குனர் என்கிற முறையில் அவர் ரீமேக் செய்யும் இந்த படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டுள்ளாராம். நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் முன்வந்திருப்பதாக தெரிகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் செயல்பட்டால் அடுத்ததாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடக்கும் என்பது கோடம்பாக்கத்து தகவல்.

ஒருவேளை விஜய் இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசப்பட்டால் அஜித்துடன் இணைந்து நடிக்க விஜய் சம்மத்திப்பாரா? என்பது கேள்விக்குறியே. கேள்விக்குறி ஆச்சர்யக்குறியாக மாறுமா?...

நயன்தாராவா? த்ரிஷாவா? தப்பித்த பிரபுதேவா!


நடிகர் பிரபுதேவா இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தியில் இது தான் பிரபுதேவாவிற்கு முதல் படம். இப்போது பிரபுதேவா மும்பையிலேயே தங்க முடிவெடுத்துள்ளார்.

இது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிரபுதேவா ” நான் இயக்கும் ’ரவுடி ரத்தோர்’ படம் தமிழில் வெளிவந்த ’சிறுத்தை’ படத்தின் ரீமேக். அந்த படத்தில் வரும் ‘ஜிந்தாத்தா ஜிந்தாத்தா’
பாடலுக்கு விஜய் நடமாடினால் நன்றாக இருக்கும் என விரும்பி விஜய்யை அழைத்தேன். என் அழைப்பை மறுக்காமல் வந்து விஜய் நடனமாடினார்.

இந்தி படத்தில் விஜய் நடிக்க விரும்பினால் அந்த படத்தை இயக்க நான் தயார். மும்பையில் வீடு பார்த்தது இனி அங்கேயே தங்கி விட முடிவு செய்ததால் தான். அடுத்தடுத்து அதிக கமிட்மெண்ட்ஸ் இருக்கிறது. தொடர்ந்து நிறைய படங்களை இயக்குகிறேன்.

தமிழ் படங்களை இயக்கவும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதற்கு குறைந்தது 15 வருடங்கள் ஆகும். உண்மையாகத்தான் சொல்கிறேன். தமிழுக்கு வர 15 வருடங்கள் ஆகும். ஏனென்றால் இங்கு நிறைய வேலைகள் இருக்கிறது” என்று கூறினார்.

அதன் பிறகு பிரபுதேவாவிடம் நயன்தாரா அளித்துள்ள ஒரு பேட்டியில், அவர் உங்களுக்கு உண்மையாக இருந்ததாகவும், நீங்கள் தான் உண்மையாக இல்லை எனவும் கூறியுள்ளாரே?

த்ரிஷாவுடன் நீங்கள் நெருக்கமாக இருப்பது போல் வெளியிட்டுள்ள போட்டோ யாரையோ கஷ்டப்படுத்ததான் என்கிறார்களே?

நயன்தாரா, த்ரிஷா, ஹன்ஸிகா, சோனாக்ஷி ஆகியோருடன் உங்களை இணைத்து வரும் கிசுகிசுக்களை கேட்கும் போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

என்று கேட்டதற்கு “போது வேறு கேள்விகள் வேண்டாம்” என்று கூறிவிட்டாராம். எவ்வளவோ வற்புறுத்தி கேட்டும் கூட அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பித்து சென்றுவிட்டார் பிரபுதேவா.

Friday, May 18, 2012

ரிச்சா-டாப்ஸி உர்ர்ர்ர்... கண்டுகொள்ளாத அஜீத்

Richa Gangopadhyay


தனது படத்தில் யாரை ஹீரோயினாக்க வேண்டும் என்கிற விஷயத்தில் சம்பளத்தை விட குறியாக இருப்பார்கள் சில ஹீரோக்கள். அந்த ஏரியாவில் அஜீத் கொஞ்சம் வீக் என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பொண்ணாயிருந்தா போதும் என்கிற அளவுக்குதான் அவரது தலையீடு இருக்கும். (பட்டும் படாமலும் இருக்கிற அவரது குணத்தை புரிந்து கொண்டுதான் 'திருப்பதி'யில் நுழைந்து அஜீத்துக்கே மொட்டை போட்டார் பேரரசு. அதை இப்போது நினைத்தாலும் அஜீத் ரசிகர்களுக்கு ஜன்னி வரும்) அதற்குப்பின் உஷாரான அஜீத், ஷுட்டிங் விஷயத்தில் தலையை நுழைப்பது இயல்புதானே?

ஆனால் விஷ்ணுவர்த்தன் இயக்கப் போகும் புதிய படத்தில் கதை கேட்டதோடு சரி. ஹீரோயின் விஷயத்தில் மூக்கை நுழைக்கவே இல்லையாம். அதன்விளைவாக இரு நடிகைகளுக்குள் குடுமிப்பிடி வரும்போல தெரிகிறது.

இப்படத்தில் நயன்தாரா மெயின் ரோலை எடுத்துக் கொள்ள, துணைக்கு டாப்ஸியும் இருக்கிறார் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த ரோலுக்கு முதலில் செலக்ட் செய்யப்பட்டவர் ரிச்சா கங்கோபாத்யா. நேரடியாக அவரை சென்னைக்கு வரவழைத்த விஷ்ணுவர்த்தன், டெஸ்ட் ஷுட்டும் எடுத்தாராம். அட்வான்ஸ் கொடுக்கப் போகிற நேரத்தில்தான் டாப்ஸி ஒரு விவிஐபியிடம் தனக்காக சிபாரிசு செய்யச் சொல்லி ஆட்டத்தை கலைத்தாராம்.

ரிச்சாவுக்கும் நயன்தாராவுக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆகாது என்கிறார்கள். டாப்ஸியின் இந்த முயற்சிக்கு நயன்தாராவும் ஆதரவு தெரிவிக்க, டாப் ஸீக்ரெட்டாக முடிந்தது டாப்ஸியின் வரவு. தான் நீக்கப்பட்டதை அறிந்த நேரத்திலிருந்தே மூச்சை உள்ளிழுத்து முழியை உருட்டிக் கொண்டிருக்கிறாராம் ரிச்சா.

போன்லெஸ் சிக்கனுங்க போடுற சண்டையில யாரு எலும்புக்கு சேதாரம் வரும்னே புரியலையே!

ஸ்டாலின் திடீரென லண்டன் சென்றது ஏன்? கதை லேசாக புகைகிறது!!


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வெளியே (ஜாமீனில்) வந்த விவகாரம் தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென அந்தப் பேச்சுக்களை அமுக்கும் விதத்தில், மற்றொரு விஷயத்தைப் பற்றி இப்போது பரபரப்பாக பேசத் துவங்கியுள்ளார்கள். ஸ்டாலின் லண்டனுக்கு சென்ற பின்னணி என்ன? என்பதே இந்த புதிய டாக்.

தி.மு.க.-வின் இரண்டாம் மட்ட தலைவர்களே இதைப் பற்றி தமக்கிடையே விவாதிக்கத் துவங்கியுள்ளதால், இதில் ஏதோ விவகாரம் உள்ளது என்றுதான் தெரிகிறது. இரு மாவட்ட செயலாளர்கள், ஒரு எம்.பி., ஒரு முன்னாள் அமைச்சர் (இவர் தற்போது எம்.எல்.ஏ.கூட அல்ல) ஆகியோர் சமீபத்தில் நெல்லையில் உள்ள தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரது வீட்டில் சந்தித்து, இந்த விவகாரம் குறித்து ‘ஏதோ’ மிக சீரியஸாக பேசியதாக ஒரு தகவல் உள்ளது.

ஸ்டாலின் லண்டன் சென்றது, அன்னைய தினம் மட்டும் சிங்கிள் லைன் நியூஸாக இருந்தது. அதன்பின் அதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. அப்படியிருந்தும், இதற்குள் அப்படி என்னதான் விவகாரம் இருக்க முடியும்?

தி.மு.க. வட்டாரங்களில் பேசினோம். அப்போது தெரிய வந்த விஷயம், ஸ்டாலின் லண்டன் சென்றது, மருத்துவ காரணத்துக்காகவும், ஓய்வு எடுப்பதற்கும் மட்டுமல்ல. இதில் வேறு விவகாரம் ஒன்றும் உள்ளது என்பதுதான்.

நாம் விசாரித்தவரை, ஸ்டாலினுக்கு உடல்நலம் தொடர்பான சில பிரச்னைகள் இருப்பது உண்மைதான். ஓயாத சுற்றுப்பயணங்கள் காரணமாக அவர் தளர்வடைந்திருந்த காரணத்தால், ஓய்வு எடுக்கும்படி டாக்டர் கூறியதும் நிஜம்தான். சில தினங்கள் குடும்பத்துடன் ஊட்டியில் ஓய்வெடுத்துவிட்டும் திரும்பியிருந்தார். லண்டன் சென்ற காரணங்களில் அதுவும் ஒன்றுதான்.

ஆனால், அது மட்டும் காரணமல்ல. கட்சிக்குள் சிக்கல் உள்ளது. கட்சித் தலைவர் கருணாநிதி மீது கோபமும் உள்ளது. அதனால்தான், சில நாட்களுக்காவது தமிழகத்தில் இருப்பதை தவிர்க்க விரும்பினார் என்கிறார்கள்.

கட்சிக்குள் தமக்கு எதிரான அணியில் இருந்த வெவ்வேறு ஆட்கள், ஒன்றாக சேர்ந்து காய் நகர்த்துவது அவருக்கு தெரிந்துள்ளது. வெளிப்படையாக பார்த்தால், அழகிரி குரூப், கனிமொழி குரூப், ராசாவின் ஆதரவாளர்கள் என எல்லா குழுக்களும் வேறு வேறாக நிற்பதுபோல தெரியும். ஆனால், ஸ்டாலினை ‘அமுக்குவது’ என்ற விஷயத்தில் இவர்கள் அனைவரும் ரகசியமாக கைகோர்த்து செயல்படுகிறார்கள் என்று அவர் தெரிந்து கொண்டார் என்கிறார், ஸ்டாலினுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவர்.

நெல்லையில் சந்தித்து டிஸ்கஸ் பண்ணியதாக கூறப்படும் நான்கு வி.ஐ.பி.-களில் ஒருவரான, தென்மாவட்ட மா.செ.-யுடன் எமக்குள்ள பரிச்சயம் காரணமாக அணுகி விசாரித்தோம். ஆரம்பத்தில் அப்படியொரு சந்திப்பே நடக்கவில்லை என்றவர், பின், “ஆமா.. சந்தித்து சும்மா பேசினோம். அதில் ஸ்டாலின் லண்டன் சென்ற விஷயமும் வந்தது. அவ்வளவுதான்” என்றார்.

இவர் அழகிரி ஆதரவாளர். அந்த சந்திப்பில் கலந்துகொண்ட நால்வருமே அழகிரியின் ஆட்கள். இவர்கள் நெல்லையில் சந்தித்து, ஸ்டாலின் லண்டன் சென்ற விஷயம் பற்றி ‘சும்மா’ பேசுகிறார்களா? அடேங்கப்பா!

பல இடங்களில் திரட்டிய தகவல்களில் இருந்து எமக்கு புரிந்த விஷயம், அழகிரி மிக சாமர்த்தியமாக ஸ்டாலினுக்கு எதிராக காய் நகர்த்துகிறார் என்பதுதான். ஸ்டாலின்மீது கோபத்தில் அல்லது வெறுப்பில் இருக்கும் ஆட்களை ஒரே அணியில் திரட்டுகிறார் அழகிரி. அதைப் பற்றித்தான் அழகிரி ஆட்கள் தமக்கிடையே கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.

நாம் விசாரித்த தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர் இதை ஒப்புக்கொண்டார். “அழகிரி, திடீரென சிறைக்குச் சென்று ராசாவை சந்தித்தார். அடுத்த சில தினங்களில் ராசா பெயில் மனு தாக்கல் செய்து, வெளியே வந்தார். ராசா பெயிலில் வருவது தி.மு.க.-வின் சில பெரிய தலைகளுக்கு சங்கடமானது.
அதேபோல, ஸ்டாலினின் முன்னாள் சகா பரிதி இளம்வழுதியை அழகிரி சந்தித்தார். அதன்பின், பரிதி கருணாநிதியை சந்திக்க வைக்கப்பட்டார். பரிதியின் மகள் சந்தியாவின் திருமணத்துக்கு அழகிரி நேரில் வந்து இறங்கினார்.

கனிமொழி தரப்புடனும் அழகிரி ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார். அதன்பின் கடந்த வாரத்தில் ஒருநாள் காலை விமானத்தில் டில்லியில் இருந்து சென்னை வந்த அழகிரி, கலைஞருடன் ஏதோ விவாதித்தபின், அன்று இரவே டில்லி புறப்பட்டு சென்றார். மறுநாள் டில்லியில், அழகிரியை தி.மு.க. எம்.பி. இளங்கோவன் சந்தித்தார். இளங்கோவன் கனிமொழியின் ஆதரவாளர். உள்ளே ஏதோ நடக்கிறது” என்றார் அந்த தி.மு.க. வி.ஐ.பி.

இந்த விபரமெல்லாம் ஸ்டாலின் காதுகளுக்கு வரவே, அவர் கருணாநிதியுடன் பொங்கித் தீர்த்துவிட்டார் என்கிறார்கள். “கட்சியை வளர்ப்பதற்காக மாவட்டம் மாவட்டமாக அலைவது நான். கட்சிக்குள் விமானத்தில் பறந்து பறந்து அரசியல் செய்ய அவர்களா? அவர்களை வைத்தே கட்சியை பலப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிய கையுடன் ஸ்டாலின், லண்டன் புறப்பட்டுச் சென்றார் என்றும் கூறுகிறார்கள்.

ஆஹா… தி.மு.க.-வுக்குள் அடுத்த ரவுண்ட் கலாட்டா ஆரம்பமாகி விட்டது. நெல்லையில்கூட ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா!

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. 2-வது திருமணம்!


2-வது திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக டாக்டர் ராணி தொடர்ந்த வழக்கில் ஜுன் 19-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.

டாக்டர் ராணி புகார்

திருச்சி குமரன்நகரை சேர்ந்தவர் டாக்டர் ராணி (வயது46). இவர், "திருச்சி மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரஞ்சோதி, தன்னை 2-வது திருமணம் செய்து கொண்டும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் வாங்கி கொண்டும் ஏமாற்றிவிட்டார்'' என்று திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் திருச்சி கோர்ட்டு ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 4-ல் டாக்டர் ராணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, பரஞ்சோதி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பரஞ்சோதி எம்.எல்.ஏ. மீது வழக்கு

இதைத்தொடர்ந்து பரஞ்சோதி எம்.எல்.ஏ., அவரது கார் டிரைவர்கள் சம்பத், குமார் ஆகிய 3 பேர் மீதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர். இதையடுத்து அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த பரஞ்சோதி தனது பதவியை ராஜினமா செய்தார். மேலும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

அதன்பின்பு பரஞ்சோதி எம்.எல்.ஏ.விடமும், டாக்டர் ராணியிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் ராணி பல ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்தார். அந்த ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்து 150 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி கடந்த 10-ந்தேதி திருச்சி ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 4-ல் டாக்டர் ராணி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு ராஜாராம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் ஆஜரான போலீசார் தரப்பில் கோர்ட்டில் கூறுகையில், பரஞ்சோதி எம்.எல்.ஏ. விசாரணைக்கு போதுமானதாக ஒத்துழைக்கவில்லை எனவும், டாக்டர் ராணிக்கு எழுதி கொடுத்த பத்திரத்தில் உள்ள கையெழுத்து மற்றும் ஆவணங்களில் உள்ள கையெழுத்து பற்றிய விரல் ரேகை நிபுணர்கள் அறிக்கை வராததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் ஆகிறது என்று தெரிவித்தனர்.

ஜுன் 19-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகை...

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு ராஜாராம் இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(ஜுன்) 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் பரஞ்சோதி எம்.எல்.ஏ. மீதான வழக்கில் ஜுன் 19-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விரல் ரேகை நிபுணர்களின் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.