Saturday, May 12, 2012

பட்டம் வேண்டாம் என்றாரா விஷால்!


நடிகராக அறிமுகமாகி சில படங்களுக்குள்ளாகவே ’புரட்சி தளபதி’ என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்ததாகக் கூறி தான் நடிக்கும் படங்களின் டைட்டில் கார்டுகளில் அந்த பெயரை போட்டுக்கொண்டவர் நடிகர் விஷால்.

அதன் பிறகு அவரது படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் அந்த பட்டத்தை உபயோகித்துக் கொண்டிருந்தார் விஷால். பாலா இயக்கத்தில் விஷால் நடித்த அவன்-இவன் படத்தின் டைட்டில் கார்டில் திடீரென பெயர் இல்லாமல் போனதால், அதை பற்றி விஷாலிடம் கேட்டபோது

“ இது பாலா சார் படம். நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் அவ்வளவு தான். எந்த பெயரை போட வேண்டும் என்பதை எல்லாம் அவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார். அதன் பிறகு நடித்த வெடி படத்தில் ‘புரட்சி தளபதி’ பட்டம் விஷால் பெயர் முன் போடப்பட்டது.

ஆனால் இப்போது இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால், த்ரிஷா நடித்துக்கொண்டிருக்கும் ‘சமர்’ படத்தின் டைட்டில் கார்டில் ‘புரட்சி தளபதி’ பட்டம் போடவில்லை. அந்த பெயரை போடவேண்டாம் என விஷால் கூறியதாக செய்தி பரவி வருகிறது.

No comments:

Post a Comment