இன்று காலை நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்தார். மாலை 6 மணிக்கு மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கையால் பட்டாபிஷேகம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஆசிரமத்தில் மதுரை ஆதினம் மற்றும் நித்தியானந்தா அமரும் வகையில் தங்கத்திலான இரண்டு சிம்மாசினங்கள் மேடையில் வைத்து தயார் செய்யப்பட்டு வருகின்றன.
பத்திரிகையாளர்களை இன்று நித்தியானந்தா சந்திப்பதாக அவரது சீடர்கள் தெரிவித்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து செய்தியாளர்கள் ஆசிரமத்துக்கு சென்றபோது, தனக்கு வேண்டிப்பட்டவர்களுடன் கிரிவலம் சென்று வருகிறேன் என்று நித்தியானந்தா சென்றார். ஆனால் இன்னும் வரவில்லை. எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை என்று நித்தியானந்தாவின் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
அவர்களிடமே மதுரை ஆதின மடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதால், இங்கு பட்டாபிஷேகத்துக்கு மதுரை ஆதினம் வருவாரா என்று கேட்டதற்கு, அதற்கு மதுரை ஆதினம் கவலைப்படவில்லை. திருவண்ணாமலை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். விழா திட்டமிட்டப்படி நடக்கும் என்றார்.
மதுரை ஆதினத்தில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதுபோல், தனக்கு சொந்தமான மடங்களில் சோதனை நடத்த வந்தால் என்ன செய்யலாம் என்று தன்னுடைய மடத்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை சொல்வதற்காக அவர் யாரையும் சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம் என்றும் திருவண்ணாமலையில் அவரது மடத்துக்கு நெருக்கமானவர்களே கூறுகின்றனர்.
No comments:
Post a Comment