இந்தப் பட்டியல் மற்றைய அரசியல் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவு இல்லாமல், காங்கிரஸால் சொந்தமாக தனது வேட்பாளரை ஜனாதிபதியாக்க முடியாது என்பதே அவர்களது பலம்.
ஜனாதிபதி தேர்வு விஷயத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றாக இணைந்து ஒருவரை தேர்ந்தெடுப்பது நாட்டுக்கு நல்லது என்ற முயற்சிகள் ஒரு பக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகிய இருவரில் யாரை நிறுத்தினாலும் தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்று பா.ஜ.க ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஏ.கே.அன்டனி சமீபத்தில் சந்தித்து இது தொடர்பாக பேசியபோது, அவரது சாய்ஸ் பிரணாப் முகர்ஜிதான் என்று கூறி அனுப்பியதாக, தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் யாரை நிறுத்தினாலும், தி.மு.க. ஆதரிக்கும் என்பதே இன்றைய நிலைமை.
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்றே தெரிகிறது. சந்திப்பு முடிந்தபின் சோனியா காந்தி, ‘‘ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து எந்த குழப்பமும் கிடையாது. பொறுமையாக இருங்கள். இன்னும் அவகாசம் உள்ளது’’ என்றார்.
டில்லி அரசியல் சாக்கிளில், பிரணாப் அருமையான பப்ளிக் ரிலேஷன்ஸ் நபர் என்பதால், அவரை வேட்பாளராக்கி மற்றைய கட்சிகளில் ஆதரவை பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு சுலபம். பிரணாப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஏற்கனவே உள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சௌத்ரி, ‘‘காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பிரணாப்பின் இருப்பு மிகவும் அவசியம். அவரை விட்டுவிடுவது கட்சிக்கு சுலபமல்ல. அவரும் அரசியலில்தான் ஆர்வமாக உள்ளார்’’ என்று கூறியிருந்தார். இந்த ஸ்டேட்மென்ட், டில்லி மீடியாக்களில் வேறு விதமாக பிளாஷ் ஆனது. “பிரணாப் காங்கிரஸ் வேட்பாளர் அல்ல” என்று தலைப்புச் செய்திகள் அலறின.
காலையில் இப்படிச் சொன்ன ரேணுகா சௌத்ரி, மாலையே டியூனை மாற்றிக் கொண்டார். “நான் கூறியது மீடியாக்களில் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. நான் கூறியதற்கு, ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் போட்டியிடமாட்டார் என்று அர்த்தமல்ல” என்றார்.
அர்த்தம், ரேஸில் பிரணாப் இருக்கிறார் என்பதே!
No comments:
Post a Comment