Friday, May 11, 2012

நயன்தாரா தந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி!


நடிகை நயன்தாரா, கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள திருவல்லாவை சேர்ந்தவர். அவருடைய தந்தை குரியன், ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆரம்பத்தில் இருந்தே நயன்தாரா சினிமாவுக்கு வந்ததில் உடன்பாடு இல்லாதவர், குரியன்.

அவருக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலும் இருந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக அவர் நோயினால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருடைய உடல்நிலை மோசமானது. அவரை, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபின், குரியன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment