அலெக்ஸ் பாண்டியனில் கமிட் ஆன சமயத்தில், இரண்டு அல்லது மூன்று ஷெட்யூல்களாக கால்ஷீட்டை பிரித்துக்கொடுத்து படத்தை முடித்து தந்துவிடுகிறேன் என்று சொன்னவர், முதல் ஷெட்யூல் முடிந்தபிறகு, இரண்டு நாள், மூன்று நாள் என்று சில்லரையாக கால்ஷீட் தந்து சொதப்புகிறாராம்.
காரணம் அனுஷ்காவின் கைவசம் இருக்கும் இதைவிட வெயிட்டான படங்கள். விக்ரம்- விஜய் காம்பினேஷனில் ‘தாண்டவம்’, செல்வராகன் – ஆர்யா கூட்டணியின் ‘இரண்டாம் உலகம்’ இதுவே தெலுங்கில் ‘பிருந்தாவனம்லோ நந்தகுமாரடு’, தமருகம் [தெலுங்கு] வாராதி [தெலுங்கு] என்று ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருப்பதால், தான் சும்மா இருக்கும் ஒன்றிரண்டு தினங்களையே ‘அலெக்ஸுக்கு அளிக்கிறார் அனுஷ்கா.
எனவே நடிகர் சங்கத்துக்கு பஞ்சாயத்துக்கு கொண்டுபோய், முதலில் ஆரம்பிக்கப்பட்ட படத்துக்கு முன்னுரிமை கேட்கலாமா என்ற யோசனையில் தனது தயாரிப்பாளர் க்ரீன் ஸ்டுடியோஸ் ஓனர் ஞானவேல் ராஜாவின் க்ரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறார் சுராஜ்.
No comments:
Post a Comment