மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை 'த டர்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் தயாராகி ரிலீசானது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்து இருந்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.பல்வேறு தடைகளை மீறி இந்த படம் திரைக்கு வந்தது.
சில்க் ஸ்மிதா குடும்பத்தினர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோர்ட்டுக்கு போனார்கள். வித்யாபாலன் கவர்ச்சியாக நடித்ததற்கும் கண்டனங்கள் எழுந்தன. இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்தது.
டர்டி பிக்சர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அப்படத்தை வேறு மொழிகளில் படமாக்க தயாரிப்பாளர்களை தூண்டி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் ரீமேக் ஆகிறது.
இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. அனுஷ்கா, நிகிதா, ரிச்சா ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.
இதற்கான ஒப்பந்தத்தில் அவர் விரைவில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால் சம்பளத்தை நயன்தாரா உயர்த்தி கேட்கிறாராம். அவர் கேட்ட தொகையை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment