இலங்கையில் யுத்தத்தின் பின் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட மிக அதிக அளவிலான வெடிப்பொருள் அளவு இதுதான்.
இறுதி யுத்தத்தின்போது தோல்வியடைந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமது ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை புதுக்குடியிருப்பு, மற்றும் அதைச் சூழவுள்ள பகுதிகளில் புதைத்து வைத்தது.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, நிலத்தின் அடியே ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் இருந்தன.
ஆரம்பத்தில், மக்கள் மீண்டும் அந்தப் பகுதிகளில் குடியேறுவதற்கு முன், நிலத்தடியே இருந்த ஆயுதங்களை தேடும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டு ஓரளவு ஆயுதங்களையும், வெடிப் பொருள்களையும் கண்டுபிடித்தது. அதன் பின்னரும் நிலத்தடியே கண்டுபிடிக்கப்படாத நிலையில் வெடிப் பொருள்கள் இருப்பதாக ராணுவம் கூறியது.
இருப்பினும் இடம்பெயர்ந்த மக்கள் அந்தப் பகுதியில் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளால் அழுத்தம் கொடுக்கப்பட்ட காரணத்தால், நிலத்தடியே வெடிப் பொருள்கள் இருந்த நிலையிலும் தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டனர்.
மக்கள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் இப்போதும் வெடிப்பொருள்கள் தேடப்பட்டு வருகின்றன. இதுவரை நல்லவேளையாக எதுவும் வெடிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று, முன்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு, இரணமடு, மற்றும் நந்திக்கடல் கடலேரி பகுதிகளில் நிலத்தடியே இருந்து 6 டன் (சரியாக சொன்னால், 6,250 கிலோ) வெடிப் பொருள்களையம், வேறு சில உபகரணங்களையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது.
இந்த இரு இடங்களும் முன்பு விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதிகளாக இருந்தவை.
இரணமடு பகுதியில்தான் விடுதலைப் புலிகளின் ரகசிய விமான ஓடுபாதை இருந்தது. புதுக்குடியிருப்பு என்ற இடத்திலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலத்தடி மறைவிடங்களில் ஒன்று இருந்தது. அத்துடன் புலிகளின் முக்கிய தளபதிகளில் வீடுகள் அமைந்திருந்த இடமும் புதுக்குடியிருப்புதான்.
நந்திக்கடல் பகுதியில்தான் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்தது.
மேலே குறிப்பிடப்பட்ட 3 இடங்களிலும் நேற்று எடுக்கப்பட்ட சி-4 ரகத்திலான வெடிப்பொருள்கள், 50 கிலோ, 25 கிலோ வெடிமருந்துப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் நிலத்தின் அடியே புதைத்து வைக்கப்பட்டிருந்தன. 50 கிலோ பைகள் 49, 25 கிலோ பைகள் 152 ஆகிய எண்ணிக்கையில் இலங்கை ராணுவத்தால் கண்டுபிடித்து எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றைவிட மேலதிகமாக எடுக்கப்பட்டுள்ள பொருள்கள்: LTTE jungle pooches 4; Tamilan Hand Grenades 21; HE RPG Round 1; T56 Weapon Barrel 1; Gas Masks 9; 122mm Mortar Shells 30; Hand Grenades 48; 5kg Pressure Bombs 3; 20kg Pressure Bomb 1; Side Bombs 18; 18″ long Torpedo Trips 58; C4 Mark 1 Anti Personnel Mines 123; Anti Tank Mines 19; Anti Personnel Mines 40.
No comments:
Post a Comment