2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் கைதான 12 பேரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.
தன்னையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று, வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆ.ராசா மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீது கடந்த 11-ந் தேதி நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை நடந்தது.
ஆ.ராசா தரப்பு வக்கீல், சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் 15-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆகவே, இன்று ( 15.5.2012) விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி செல்லக்கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டது. மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது. நிபந்தனை யை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment