சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் அல்லது நகர,கிராமப்பகுதிகளில் யாருக்கேனும் உடல் நலக்குறைவுகாரணமாக தேவைப்படும் அவசரகால சிகிக்கைகாக அவர்களை உடனுக்குடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரைக்காப்பாற்றும் வகையில் தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் 108 அவசரகால ஆம்புலன்ஸ் திட்டம்.
மாநிலத்தின் அரசு மருத்துவுமனைகளின் ஒங்வொரு 20.K.M.தொலைவிற்குள் ஒரு 108 செயல்படுப்படி ஏற்பாடு நெய்யப்பட்டிருந்தது. போன்மூலம் வரும் தகவலைக்கொண்டு சம்பவ இடத்திற்கும் விரைந்து சென்று பணியாற்றும் திறன் கொண்டது 108.
நெல்லை தென்காசி நெடுஞ்சாலையில் உள்ளது பாவூர்சத்திரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்களைக் கொண்டபகுதி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளவை. கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 6 பேர் பலியாக 28 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல் 9 ஆண்கள் 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
சிலர் முயன்றுள்ளனர். அவசரகால முதலுதவி சிகிச்சைக்காக இங்கே பயன்படுத்தப்பட்ட 108 தற்போது சில மாதங்களாக நிறுத்தப்பட்டுவிட்டன.
இதனால் தொலைவு பகுதியிலிருந்து 108 வரவழைக்கவேண்டிய நிலைஏற்பட்டுள்ளது விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களைக காப்பாற்ற நிறுத்தப்பட்ட 108 கொண்டுவரப்பட வேண்டும் இல்லையேல் மக்களைத்திரட்டி போராடுவோம் என பாவூர்சத்திரம் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் செயலாளர் இளங்கோ,பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன் போன்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment