இந்தக் கொலையில் உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கே தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. பினரயி விஜயன் விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் சந்திரசேகரன் கட்சியில் இருந்து வெளியேறியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சந்திரசேகரனை ஒரு இடைத்தரகர் என்று குறிப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தார் பினரயி விஜயன். இதற்கு கட்சியில் எதிர்ப்பலை எழுந்துள்ளது. இதனால், கட்சித் தலைவர் அச்சுதானந்தனுக்கும் மாநிலச் செயலர் விஜயனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
விஜயனின் கருத்து கட்சிக் கருத்தாகாது என அச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறினார் கராத்.
No comments:
Post a Comment