அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை பார்வையிடுவதற்கு, சென்னையின் நான்கு பாடசாலைகளிலிருந்து சுமார் 750 மாணவர்கள் பேர் நாளை அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னையின் வித்யாஸ்ரம் பள்ளி, போரூர் MKM மேட்ரிகுலேஷன் உயர்தர பள்ளி, வேலம்மாள் மற்றும் மோன்ஃபோர்ட் பள்ளி மாணவர்கள் இச்சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். சென்னையை சேர்ந்த Space Kids India அமைப்பு இந்திய மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும் முகமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும், ஆண்டுதோறும் நாசாவுக்கு மாணவர்களுக்கு அழைத்து செல்கிறது. கடந்த முறை 650 மாணவர்களை இவ்வாறு அழைத்து சென்ற குறித்த நிறுவன அமைப்பு இம்முறை 750 மாணவர்களாக எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.
சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியிலிருந்து மாணவர்கள் 100 பேர் மற்றும் அவர்களுக்கு துணையாக ஆசிரியர்கள் 5 பேர் இவ்விஜயத்தில் கலந்து கொள்கின்றனர்.
நாளை தொடக்கம் இரண்டு வாரங்களுக்காக அவர்களது சுற்றுப்பயணம் அமைந்துள்ளதுடன், அவர்கள் நாசா விண்வெளி மையம், கனடா ஒர்லாண்டோவில் உள்ள விண்கல மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்து பேசவுள்ளனர். இதன் போது இயந்திரங்களை பற்றி கற்றல், சுகாதார கற்கை நெறிகள் மற்றும் பயிற்சி பட்டறைகளில் அவர்கள் பங்கெடுத்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அம்மாணவர்களது பயணத்தை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வொன்று சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்ண்டையர், கனடா தூதரக முதுநிலை வர்த்தக ஆணையாளர் சாஹூன் வேடிக், விண்வெளி வீராங்கணை மார்ஷா ஐவின்ஸ், ஸ்பேஸ் திட்டக்குழு இயக்குனர் சிறீமதி கேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது விண்வெளி வீராங்கணை மார்ஷா ஐவின்ஸ் உரையாடுகையில் விண்வெளியில் தான் நிலை கொண்டிருந்த தருணங்களின் அனுபவங்கள் பற்றியும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஸ்பேஸ் லேப்பின் செயற்பாடு பற்றியும் விளக்கி கூறியுள்ளார். மேலும் குறித்த சுற்றுப்பயணம் மாணவர்களிடையே விண்வெளி குறித்த அறிவாற்றலை மாத்திரம் வளர்க்காது, எவ்வாறு குழுவாக செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு சவால்களுக்கு முகங்கொடுப்பது என்பது குறித்தும் கற்றுத்தரும் என கூறியுள்ளார்.

No comments:
Post a Comment