Monday, May 7, 2012

மேடை நோக்கி கல்வீச்சு! காரில் ஏறி தப்பியோடிய அதிமுக அமைச்சர்!


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (06.05.2012) நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் கலந்துகொள்ள பரமக்குடி எம்எல்ஏவும், அமைச்சருமான சுந்தர்ராஜ் சென்றார்.

திருமணவிழா நடக்கும் இடத்திற்கு அருகில், கட்சி பாகுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.


திருமணவிழாவில் கலந்துகொண்ட அவர், அருகில் உள்ள கோவிலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெறுவதை கேள்விபட்டு அங்கு சென்றார்.


அன்னாதான பந்ததில் திடீரென பேசிய அமைச்சர் சுந்தர்ராஜ், இது போன்ற அன்னதானம் தமிழக முதல்வர் அம்மாவால் (ஜெயலலிதா) அனைத்து கோயில்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் அன்னதானத்திற்கும் அம்மாதான் காரணம் என்றார்.


அமைச்சரின் இந்த பேச்சுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களுக்கும் அதிமுக வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சர் இருந்த மேடை நோக்கி கல்வீச்சும் நடந்தது. இதனால் அப்பகுதியில் பதட்டம் காணப்பட்டது. தனக்கு ஆள்பலம் குறைவாக இருந்ததை உணர்ந்த அமைச்சர் சுந்தர்ராஜ், அந்த இடத்தை விட்டு கிளம்ப முடிவு செய்தார். தான் வந்திருந்த காரில் ஏறிக்கொண்ட அமைச்சர், தன்னுடன் வந்த இன்னொரு காரை முன்னே போகவிட்டு பின்தொடர்ந்து சென்று தப்பித்தார்.


நேற்று நடந்த இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் செய்தார். இருப்பினும் இந்த கல்வீச்சு சம்பவம் கசிந்துள்ளது.

No comments:

Post a Comment