Wednesday, May 9, 2012

சினிமாவில் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சச்சின்,  பாலிவுட் தயாரிப்பாளர் விதோ வினேத் சோப்ரா தயாரித்து வரும் ஃபெராரி கி சவாரி என்ற படத்தில்  நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


திரைப்படங்களில் தனது பெயரை பயன்படுத்த மட்டுமே இதுவரை அனுமதி அளித்து வந்த சச்சின் தற்போது தானும் கேமிரா முன் ‌தோன்ற சம்மதம் தெரிவித்துள்ளார்.


இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஐ.பி.எல்., போட்டிகள் நிறைவடைந்ததும் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சச்சின் ஒப்புதல் தெரிவித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சோப்ரா தெரிவித்துள்ளார்.


 கிரிக்கெட் விளையாடுவதை கனவாக கொண்ட குழந்தையை சுற்றியே படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் ஜூன் 15ல் வெளியாகும் எனவும் சோப்ரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment