புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் ஜுன் 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நேற்று மட்டும் 2 பேர் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து உள்ளனர். தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் நேற்று மதியம் ர்.டி.ஓ. அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார்.
அப்போது அலுவலகத்துக்கு அருகில் தேர்தல் நடத்தை விதியை மீறி அனுமதி இன்றி ஊர்வலமாக வந்ததாக தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் மற்றும் 300 பேர் மீது ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் மற்றும் 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment