" மத்திய அரசிற்கு எதிராக பேசி நான் சிறைக்கு சென்று விட்டதால் என்னால் 'பகவலன்' படத்தினை குறித்த நேரத்தில் துவங்க இயலாமல் போனது. விஜய்யும் அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி விட்டார் " என்று தெரிவித்து இருக்கிறார் சீமான்.
'பகவலன்' படத்தின் நாயகன் யார் என்பது குறித்த கேள்விக்கு " அப்படத்தில் நடிக்க விக்ரமிடம் பேசினேன். வெவ்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் நடிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார்.
நாயகன் வேடத்திற்கு ஆர்யா,விஷால் மற்றும் ஜீவா உள்ளிட்டவர்களில் ஒருவர் பொருத்தமாக இருப்பார். ஜீவா அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
இந்த நாயகர்களில் ஒருவராது நடிக்க ஒப்பந்தமாகி 'பகலவன்' படம் துவங்கினால் சரி தான்!
No comments:
Post a Comment