Sunday, May 6, 2012

மதுரை - 2,000 போலீசார் குவிப்பு


மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வைகையாற்றில், கள்ளழகர் இன்று காலை, 5.50 மணிக்கு பச்சை பட்டுத்தி இறங்குகினார். இதற்கான பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடமணிந்த அழகர், நேற்று முன் தினம் இரவு, அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட, திருக்கண் மண்டபங்களில், எழுந்தருளினார். நேற்றிரவு, தல்லாகுளத்தில் எதிர்சேவை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை, 5.50 மணிக்கு, வைகையாற்றில் இறங்கினார். மீனாட்சியம்மன் கோவிலில், மே 2ல் நடந்த திருக்கல்யாணத்தின் போது, நெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம், 58 சவரன் நகை திருடப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண, ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அசம்பாவிதங்களை தடுக்க, நகரில், 2,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாறு வேடங்களில் பெண் போலீசார், திருட்டு கும்பலை கண்காணிக்கவும், கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் கொட்டிய மழையில் அழகரை தரிசித்த பக்தர்கள் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் இறங்க கள்ளழகர் வேடத்தில் அழகர் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டார். நேற்று காலை மூன்றுமாவடி வந்த கள்ளழகரை பக்தர்கள் மேள, தாளம் முழங்க தரையில் பட்டு துணி விரித்து தரையில் விழுந்து வணங்கி எதிர்சேவை செய்தனர். புதூரில் பக்தர்கள் பொரிகடலை, சர்க்கரை கலந்து, மஞ்சள் துணியால் சுற்றி, சூடம் ஏற்றி வணங்கினர். டி.ஆர்.ஓ., காலனி, ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அவுட்போஸ்ட், அழகர்கோவில் ரோடு மண்டபங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சென்றார். அங்கு கள்ளழகருக்கு திருமஞ்சணம், தீப ஆராதனை நடந்தது. மழையில் நனைந்த பக்தர்கள்: கள்ளழகர் நீதிபதிகள் குடியிருப்பிற்கு வந்த போது சாரல் மழை பெய்தது. அழகர்கோவில் ரோட்டில் வரும்போது பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்தவாறு தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment