Tuesday, May 15, 2012

இயக்குனரால் கதறி அழுத நாயகன்!


இயக்குனர் மணிரதனம் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் கடல். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

முதல் படமே மணிரத்னம் இயக்கத்தில் என்று சந்தோஷப்பட்டாலும் அதே நேரம் அவரது ஹீரோவுக்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயதிலும் இருக்கிறார் கௌதம்.

கடல் படத்தின் கதைப்படி நாயகன் அனாதை என்பதை மறைத்து ஊர் மக்களுடன் சேர்ந்து கௌதமை வளர்ப்பவர் பொன்வண்ணன். நாயகன் அனாதை என்ற உண்மையை பொன்வண்ணன் சொல்லும் போது கௌதம் கதறி அழுவது போன்ற காட்சியை படமாக்கியிருக்கின்றனர் படக்குழுவினர். இயக்குனர் எதிர்பார்த்தது போலவே அந்த காட்சியில் குமுறி குமுறி அழுதுவிட்டாராம் கௌதம்.

அவர் அழுததை பார்த்து படக்குழுவினர் அனைவருமே கலங்கிவிட்டார்களாம். புதுமுகம் நடித்த காட்சி போன்றே தெரியவில்லை என்பது தான் கடல் பட யூனிட்டின் பிரம்மிப்பு. திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

கடல் படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தன் வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறாராம். நடிகர் அரவிந்த்சாமி கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார்.

No comments:

Post a Comment