Tuesday, May 1, 2012

அத்வானிக்கு மீண்டும் மிரட்டல் : மதுரை ராமர் கோயில் அருகே குண்டுவெடிப்பு


மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள குப்தா மகாலின் ஒரு பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிளில் இருந்து நாட்டுவெடிகுண்டு இன்று (1.5.2012) அதிகாலை வெடித்தது.   உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.


ஏற்கனவே ஏப்ரல் 28,29 ஆகிய தேதிகளில் மதுரையில் பாஜக மாநில மாநாடு நடைபெறுவதாக இருந்தது.  தொடர்ந்து பெய்த கனமழையால் வருகின்ற மே மாதம் 10,11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.




இந்த மாநாட்டுக்காக அத்வானி, மோடி உட்பட பாஜக பிரமுகர்கள் வருகிறார்கள்.  இந்நிலையில் ராமர் கோயில் அருகில் குண்டு வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரை திருமங்களம் அருகே அத்வானியின் பாஜக ரத யாத்திரையின் போது,  பைப் வெடிகுண்டு வெடித்தது.   இதையடுத்து அத்வானிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப் பட்டது.


இந்நிலையில் மீண்டும் மதுரையில் குண்டு வெடித்துள் ளதால்,  இது அத்வானிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நடந்துள்ளது என்று உளவுப்பிரிவு டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளது.

குண்டுவெடிப்பால் தென்மாவட்டம் அதிர்ச்சியில் உள்ளது.   குறிப்பாக  மதுரை  ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment