Saturday, May 12, 2012

2 வது முறை தலைவராகிறார்


 3 ஆண்டுகளில் கட்சியின் பொறுப்பில் இருந்து கூடுதல் பணி செய்ய காலம் போததா<லும், தற்போதைய தலைவர் கட்காரியின் பணி மிக செம்மையாக இருந்ததாலும் இவரையே மீண்டும் ஒரு முறை பா.ஜ.,வின் தேசிய தலைவராக்க இக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கென பா.ஜ.,கட்சி சட்டத்தை திருத்தி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ., மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் வரும் டிசம்பர் மாதம் பதவிக்காலம் முடியவிருக்கும் தலைவர் பதவி குறித்து விவாதிக்கப்பட்டது. கட்காரியே மீண்டும் தலைவராகக்கிட ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுசெயலர் ராம்லால் நிருபர்களிடம் பேசுகையில்; கட்காரிக்கு தலைவர் பொறுப்பை மீண்டும் வழங்கிடலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது . இதற்கு கணிசமான ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பா வரும் மே மாதம் 24 , 25 தேதிகளில் நடக்கவிருக்கும் தேசிய செயற்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆர்.எஸ்.,எஸ் தரப்பினரும் கட்காரிக்கு ஓ.கே., சொல்லி விட்டனர். 3 ஆண்டு காலம் கட்சி பணியாற்றுவது தான் பா.ஜ.,சட்டத்தில் உள்ளது. எனவே சட்ட திருத்தத்திற்கு செயற்குழு ஒப்புதல் தேவை. இதன் மூலம் மேலும் கட்காரியின் பணி கட்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இது வரை பொறுப்பில் இருந்த அனைவருக்குமே ஒரு முறை வாய்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்வானி மட்டும் 2 முறை தலைவர் பதவியில் இருந்தார். இதனையடுத்து 2 முறை தலைவர் பதவியில் இருந்தவர் என்ற பெருமை கட்காரிக்கு கிடைக்கிறது.

1 comment: